சீருடை நாயகன்

 ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை விரைந்து அடைவோம் .முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு;- முதல்வர் மு.க.ஸ்டாலின் .

சேரி மொழி என பேசிய விவகாரம்: குஷ்புவின் உருவப் படத்தின் மீது சாணியை கரைத்து ஊற்றி காங்கிரஸ் கட்சியினர் ஆவேச போராட்டம்.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை காலை 9 மணிமுதல்1,000 கன அடியாக அதிகரிக்க முடிவு.

புவனேஸ்வர் வந்த வந்தே பாரத் ரெயில.மீது கல்வீச்சு - இருவர் கைது.

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்பு.தங்கள் உயிரைக் காக்கும் உணவாக கருதியது பைப் மூலமாக வந்த அந்தப் பொருட்களைத்தான். அந்த உயிர் காத்த உணவைத்தான், தங்களை உயிருடன் மீட்ட வீரர்களுக்கு நன்றிப்பெருக்கில் பரிசாக வழங்கி கட்டியணைத்து நெகிழ்ந்துள்ளனர் தொழிலாளர்கள்.

சென்னை தி நகரில் 6.5 கிலோ தங்கநகைபளை நகை பட்டறையில் திருடிய கொள்ளையர்.நகை பட்டறையில் பணிபுரிந்த 6 ஊழியர்களிடம் போலீசார் விசாரணை.

பதவிக்காக பாஜகவுடன் உறவாடியது திமுக.. சிறுபான்மை மக்களுக்கு அதிமுகதான் அரண்.போராடுகிறது:-எடப்பாடி பழனிசாமி பேச்சு.

மதுரை தோப்பூரில் வழிப்பறி கொள்ளையர்கள் தாக்கியதில் புலம்பெயர் தொழிலாளி உயிரிழப்பு.

நியோமேக்ஸ் நிறுவனம் ₹5 ஆயிரம் கோடி மோசடி; பாஜ பிரமுகர் உட்பட 3 பேர் கைது.

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது 350 கோடி முறைகேடு புகாரை 6 மாதத்தில் விசாரிக்க வேண்டும்.லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு.

ஓட்டுநர், நடத்துநர் தேர்வு தேர்ச்சியடைந்தவர்களுக்கு பிப்.14ம் தேதி நேர்காணல்.அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவிப்பு.


சீருடை நாயகன்

தேஜஸ் போர் விமா­னத்­தில் பிர­த­மர் நரேந்­திர மோடி பய­ணித்த காட்­சி­கள் ஊட­கங்­க­ளில் வெளி­யா­னது. 

போர் விமா­னத்­தின் பின் இருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்த பிர­த­மர், விமானி உடுத்­தும் உடை­களை அணிந்­தி­ருந்­தார்.

“தேஜஸ் போர் விமா­னத்­தில் வெற்­றி­க­ர­மாக நான் பறந்­தேன். விமா­னத்­தில் பறந்­தது நம்ப முடி­யாத செழு­மை­யான அனு­ப­வத்­தை­யும், நமது நாட்­டின் உற்­பத்­தித் திற­னில் நான் வைத்­துள்ள நம்­பிக்­கை­யை­யும் உறு­திப்­ப­டுத்­தி­யது. நமது நாட்­டின் திறன் குறித்த எனது பெரு­மி­தம் மற்­றும் நம்­பிக்­கை­யைப் புதுப்­பிக்க உத­வி­யது” -என்று பிர­த­மர் கூறியுள்ளார்.

இதேபோல் சுரங்க இடிபாடுகளில் சிக்கியதொழிலாளர் மீட்புப் பணியிலும் மீட்புக்குழு சீருடையுடன் காட்சியளித்துருக்கலாமே.

உண்­மை­தான். பெரு­மைப்­ப­டக் கூடிய தயா­ரிப்­பு­தான் தேஜஸ் விமா­னம். அதில் அய்­ய­மில்லை. அதே நாளில் இன்­னொரு செய்­தி­யை­யும் ஊட­கங்­கள் வெளி­யிட்டு இருந்­தன.

‘உத்­த­ர­காண்ட் மாநி­லம் உத்­த­ர­கா­சி­யில் பணி­யின்­போது ஏற்­பட்ட நிலச்­ச­ரி­வில் சுரங்­கத்­தில் சிக்­கிய 41 தொழி­லா­ளர்­கள் 12நாட்களுக்குப்பின் மீட்கப் பட்டுள்ளனர்..

உத்­த­ர­காண்ட் மாநி­லம் உத்­த­ர­காசி அருகே சில்க்­யாரா என்ற பகு­தி­யில் சுரங்­கம் தோண்­டும் பணி நடை­பெற்று வந்­தது. கடந்த 12 ஆம் தேதி எதிர்­பா­ராத வித­மாக நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. சுரங்­கத்­தின் உள்ளே 41 தொழி­லா­ளர்­கள் சிக்­கி­னர். 

இவர்­களை மீட்­ப­தற்­கான பணி உட­ன­டி­யாக தொடங்­கி­யது. 

பேரி­டர் மீட்­புப் படை­யி­னர், சுரங்க நிபு­ணர்­கள், தீய­ணைப்பு வீரர்­கள் என அனைத்­துத் தரப்­பி­ன­ரும் வர­வ­ழைக்­கப்­பட்­டார்­கள். தொழி­லா­ளர்­க­ளுக்­குத் தேவை­யான உணவு, குடி­நீர், ஆக்­ஸி­ஜன் உள்­ளிட்­டவை குழாய்­கள் மூலம் அனுப்பி வைக்­கப்­பட்­டது.

 அவர்­கள் உள்ளே இருக்­கி­றார்­கள். ஆனால் அவர்­களை மீட்­பது அவ்­வ­ளவு எளி­தா­ன­தாக இல்லை. மீட்­புப் பணி தொடங்­கி­ய­தில் இருந்தே தடங்­கல் ஏற்­பட்டு வந்­தது.

மீட்­புப் பணி­கள் நடக்­கும் போதே நிலச்­ச­ரிவு ஏற்­ப­டும் வகை­யில் அந்­தப் பகுதி உள்­ளது. கன­மான –- கடி­ன­மான பாறை­க­ளாக இல்­லா­மல் லேசான –- உடைத்­தால் தூசாக ஆகும் தன்மை கொண்­ட­தாக அவை உள்­ளன. அத­னால் நிலச்­ச­ரிவு தொடர்ந்து கொண்டே இருக்­கி­றது. 

இந்­தப் பாறை­களை கையில் எடுத்­தாலே உதி­ரி­யாய் பெயர்ந்து வரும் அள­வுக்கு மென்­மை­யாக இருக்­கி­றது. நுழைவு வாயில் வழி­யாக உள்ள இடி­பா­டு­களை அகற்­றும்­போது மேலும் மண், பாறை சரி­வு­கள் ஏற்­ப­டு­கின்­றன. 

இதைப் பொருட்­ப­டுத்­தா­மல் மேலும் மேலும் தோண்­டத் தொடங்­கி­னால் சுரங்­கம் முழு­மை­யாக இடிந்து விழும் அபா­யம் ஏற்­ப­டும்.

சுரங்­கத்­திற்­குள் துளை­யி­டு­வ­தற்­காக அமெ­ரிக்­கா­வில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட ஆகர் இயந்­தி­ரம் மூலம் துளை­யி­டும் பணி­கள் கடந்த 25 ஆம் தேதி துவங்­கின. சுரங்­கத்­தின் மேல்­பு­றத்­தில் இருந்து செங்­குத்­தாக துளை போட்டு மீட்­கும் பணி­யை­யும் செய்ய முடி­ய­வில்லை.

 மீட்­புப் பணிக்­கான ஆகர் இயந்­தி­ரத்­தின் பிளே­டு­கள், கான்­கி­ரீட் கம்­பி­க­ளில் சிக்­கிக் கொள்­கி­றது. கான்­கி­ரீட் கம்­பி­களை அகற்­று­வதே பெரிய பிரச்­சி­னை­யாக உள்­ளது.

இயந்­தி­ரத்­திற்கு இடை­யூ­றாக இருந்த உலோக கர்­டர்­கள் மற்­றும் குழாய்­களை அகற்­றவே பல மணி­நே­ரங்­கள் ஆனது.

 இதை­ய­டுத்து அதை இயந்­தி­ரம் மூலம் தோண்­டவே முடி­யாது என்ற சூழல் ஏற்­பட்ட நிலை­யில், மீட்­புப் படை­யி­னர் அவர்­களே துளை­யி­டும் பணி­க­ளில் இறங்கி வரு­கின்­ற­னர்.

சுரங்­க­பா­தை­யில் சிக்­கிய தொழி­லா­ளர்­களை மீட்­கும் பணி­யில் சர்­வ­தேச சுரங்­கப்­பாதை நிபு­ணர் அர்­னால்ட் டிக்ஸ் ஆலோ­ச­க­ராக செயல்­பட்டு வரு­கி­றார்.“இது மலைப்­ப­கு­தி­யில் நடக்­கும் மீட்­புப் பணி என்­ப­தால் மிக­வும் பிரச்­சி­னை­யாக உள்­ளது. 

இதில் அவ­ச­ரப்­ப­டக்­­­கூடாது. தொடக்­கத்­தில் இருந்தே இந்­தப் பணி என்­பது வேக­மாக நடக்­கும் என உறு­தி­ய­ளிக்­க­வில்லை. 

மாறாக இந்­தப் பணி சவால் நிறைந்­த­தா­கத்­தான் இருக்­கும் என கூறி­னேன். 

அது தொடர்­கி­றது. ஆனால் தொழி­லா­ளர்­கள் பத்­தி­ர­மாக மீட்­கப்­ப­டு­வார்­கள்’’என்று சொல்லி வரு­கி­றார். 

உல­கப் புகழ் பெற்ற இவ­ரா­லேயே எப்­போது தொழி­லா­ளர் மீட்­கப்­ப­டு­வார்­கள் என்­பதை உறு­தி­யா­கச் சொல்ல முடி­ய­வில்லை.

இது­வரை இரண்டு துளை­யி­டும் முறை­கள் பயன்­ப­டுத்­தப்பட்­டுள்­ளது. அத­னால் பய­னில்லை. கிடை­மட்­ட­மாக துளை­யிட்டு 47 மீட்­டர் போன பிற­கு­தான் ஆகர் இயந்­தி­ரம் உடைந்­தது.

“தொழி­லா­ளர்­கள் சிக்­கி­யுள்ள சுரங்­கத்­தின் மேல் ஓடு பகு­தியை சென்­ற­டைய 86 மீட்­டர் அள­வுக்கு செங்­குத்­தாக துளை­யிட வேண்­டி­யுள்­ளது. 

அதன்­பி­றகு சுரங்­கப் பகுதி உடைக்­கப்­பட்டு தொழி­லா­ளர்­கள் மீட்­கப்­ப­டு ­வார்­கள். இது கடி­ன­மான பணி”என்று தேசிய பேரி­டர் மேலாண்மை அதி­கா­ரி­கள் சொல்லி இருக்­கி­றார்­கள். 

தொழி­லா­ளர்­க­ளது குடும்­பங்­கள் தவித்­துக் கொண்டு இருக்­கின்­றன.‘இதோ மீட்­புப் பணி முடிந்­து­வி­டும் என்று சொல்­லிக் கொண்டே இருக்­கி­றார்­கள் அதி­கா­ரி­கள். 

ஆனால் ஏதா­வது ஒரு தடங்­கல் வந்து கொண்டு இருக்­கி­றது. 

பணி­கள் தேக்­க­ ம­டைந்து கொண்டே போகின்­றன’என்று தொழி­லா­ளர்­க­ளது குடும்­பத்­தி­னர் பேட்டி அளித்­துள்­ளார்­கள்.

இது போன்ற பேரி­டர் காலங்­க­ளில் மீட்­புப் பணி­க­ளுக்­கானதொழில் நுட்­பத்­தில் எவ்­வ­ளவு பல­வீ­ன­மாக இருக்­கி­றோம் என்­ப­தற்குஉதா­ர­ண­மாக ஆகி­வ­ரு­கி­றது உத்­த­ர­காண்ட் சோகம்.

•---------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?