75ஆண்டுகள்
அரசுப் பள்ளி கட்டுவதற்காக நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி அம்மாளுக்கு சிறப்பு விருதை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.(இடது கைக்குத் தெரியாமல் உதவியவர்)
(சங்கிகளுக்கு)நீதித்துறை நம்பிக்கையின் சான்று ராமர் கோயில் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.(ஆனால் மக்களுக்கு நீதித்துறை மீது நம்பிக்கை போச்சு)
இந்திய தேசம் 75 ஆவது குடியரசு தினத்தில் அடியெடுத்து வைக்கிறது.
விடுதலைக்குப் பின் காலனித்துவ ஆட்சியின் சுவடுகளைத் தூக்கி யெறிந்து நமக்கென நாமே அரசியல் சாசன சட்டத்தை ஏற்றுக் கொண்ட தினம்.
1946 டிசம்பர் 9 அன்று இந்திய அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நடை பெற்றது.
அன்று துவங்கி 2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் பல்வேறு விவாதங்களை மேற் கொண்டு மிகக்கவனமாக வடிவமைக்கப் பட்டதே இந்திய அரசியல் சாசனம். 1947 ஆகஸ்ட் 29 அன்று அண்ணல் அம்பேத்கர் தலைமையி லான குழு சட்ட வரையறையை இறுதி செய்தது.
அதனை நவம்பர் 26 அன்று அரசமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.
அன்று முதலே முக்கியத்துவம் கருதி குடி யுரிமை, தேர்தல் , இடைக்கால அரசு, இடைக் கால நாடாளுமன்றம் குறித்த ஷரத்துக்கள் உட னடியாக அமலுக்கு வந்தன.
அதன் பின் 1950 ஜனவரி 26 அன்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம் முழுமையாக அமலுக்கு வந்தது.
அப்போதே அனைத்துப் பெண்களுக்கும், அனைத்துச் சாதியினருக்கும் சம வாக்குரிமை வழங்கக் கூடாது; மதச்சார்பற்ற நாடு என்பதை ஏற்க முடியாது; வேற்றுமையில் ஒற்றுமையா, பன்முகக் கலாச்சாரமா- எதையும் ஏற்க முடி யாது என ஆர்எஸ்எஸ் கொக்கரித்தது.
ஒற்றைக் கலாச்சாரம்தான், அதுவும் இந்துத்துவா கலாச் சாரம்தான் என கூக்குரலிட்டது. அரசமைப்புச் சட்டத்தை எதிர்த்து வெளிப்படையாக அதன் வார இதழான ஆர்கனைசரில் தலையங்கமும் எழுதியது.
ஆனால் அதனை ஒட்டுமொத்த தேசமும் நிராகரித்தது. அதற்கிடையில்தான் வேற்றுமையில் ஒற்றுமை காணும் மதச்சார்பற்ற அரசியல் சாசனம் மலர்ந்தது.
ஆனால் அதே ஆர்எஸ்எஸ் கும்பலிடம் இன்று ஆட்சி அதிகாரம் சிக்கி, இந்திய அரசியல் சாசனமும் சின்னாபின்னப்படுகிறது. அரசியல் சாசனத்தை உறுதி செய்யும் நீதிமன்றத்தையும் காவி மன்றமாக மாற்றும் முயற்சி தீவிரமாகியி ருக்கிறது.
அரசு அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கிளைகளாக மாற்றப்பட்டு வரு கின்றன. மதச்சார்பின்மையே அரசு நிர்வாகத் தின் அடித்தளம் என்பது சிதைக்கப்பட்டு; பிரத மரே பிரதான பூசாரியாக மாறி மதச்சார்புள்ள அரசாக இந்தியாவை முன் நிறுத்துகிறார்.
ஆனால் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டிய நீதித்துறையோ மவுனம் காக்கிறது. இந்தத் தருணத்தில் மக்கள் அனைவரும், மதவெறி கொண்ட ஒன்றிய பாஜக அரசுக்கெதிராக அணி திரள வேண்டும்.
அப்போதுதான் சங்பரிவார் கும்பலிடமிருந்து மதச்சார்பற்ற ,சமத்துவ இந்தியக் குடியரசைப் பாதுகாத்திட முடியும்.