மலிவான அரசியல்.

 | “ஒன்றிய அமைச்சர் என்ன கடவுளா? என்ன ஆதாரத்துடன் இத்தகைய தகவலை பரப்புகிறார்?”

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், நாளை ராமர் பெயரில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என பரப்பப்படும் ஒருநாளிதழ் பொய்ச்செய்தி வெளியிட்டு வதந்திபரப்பிய தினமலர் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும்என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ..

அசாம் மாநிலம் போர்டுவா மாவட்டத்தில் உள்ள படாதிரவாதான் கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால பரபரப்பு.

10 ஆண்டுகளாக பணம் சேமித்து விமானத்தில் பறந்த தாட்டான்பட்டி கிராம மக்கள்!

உளுந்தூர் பேட்டை அருகே நடந்த விபத்தில் காவலர் மற்றும் அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரும் சிறையில் சரண் .

மேட்டுப்பாளையம் பில்லூர் அணையின் மொத்த கொள்ளளவு 100 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 78 அடியாக உள்ளது. 

அணையில் இருந்து மின்சார தயாரிப்பு மூலம் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி .

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 86.97% நீர் இருப்பு உள்ளது.

47வது சென்னை புத்தகக் காட்சிக்கு 15 லட்சம் பேர் வருகை!
திமுக இளைஞரணி மாநாட்டுக்காக சேலத்தில் அமைக்கப்பட்ட அரங்கம், உலகின் மிகப்பெரிய தற்காலிக மாநாட்டு அரங்கம் என்ற Unique World Records புத்தகத்தில் இடம்பெற்றது.


மலிவான அரசியல்.

ராமர் கோவில் விழா அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுகிறது;  

மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற் கான வெறித்தனமான முயற்சி;  இதில் பக்தியோ, இறை நம்பிக்கை யோ, மத உணர்வோ இல்லை. 


இது அர சியல் சாசனத்திற்கு முற்றிலும் விரோத மானது”.

இதனையொட்டி செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: பிரதமர் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அவற்றையெல்லாம் செய்கிறார். கோவிலுக்கு சென்று பிரதமர் வழிபடுவது தனிப்பட்ட விஷயம்; அது அவரது இறை நம்பிக் கை. ஆனால், மசூதியை இடித்த இடத் தில் ராமர் கோவிலைக் கட்டி, அதில் சிலையை பிரதமரே பிரதிஷ்டை செய்வ தன் மூலம் சிறுபான்மை மக்கள் மீது  அரசியல் வெறுப்புணர்வை ஊக்குவிக் கிறார். 

அது மட்டுமல்ல, கோவிலை முழுமையாக கட்டாமல், அதில் ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதை சங்க ராச்சாரியார்கள் மற்றும் இறை நம்பி க்கை உள்ளவர்கள் ஏற்கவில்லை.

மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர், அர சியல் சாசனப்படி அனைத்து மதத்தை யும் சமமாக நடத்துவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டவர், மதச் சார்புள்ள நிகழ்வை நடத்துகிறார். 

இது அரசியல் சாசனத்திற்குவிரோதமானது. தமிழக அரசு விழாவில் பங்கேற்க வில்லை என்று தமிழகத்தில் உள்ள  பாஜக தலைவர்கள் விமர்சிக்கின்ற னர். கோவில் விழாவை அரசியல் விழாவாக மாற்றுவதை ஏற்க முடி யாது. 

அரசியல் ஆதாயத்திற்காகவே ராமர் கோவில் விழா நடத்தப்படுகிறது. இதில் பக்தியோ, இறை நம்பிக்கை யோ, மத உணர்வோ இல்லை.

மருத்துவமனை, அரசு அலு வலகங்கள், பொதுத்துறை நிறுவனங் களுக்கு எதற்காக விடுமுறை தர வேண்டும்? மதச்சார்பற்ற அரசு என்ற கோட்பாட்டையே சிதைக்கிறார்கள். 

இதேபோன்று இன்னொரு மதத்தின் விழாவிற்கு விடுமுறை தருவார்களா? மத உணர்வை வைத்து, அரசியல் செய் வதற்கான நிகழ்ச்சியே தவிர வேற ல்ல. இது நல்ல உணர்வு அல்ல. பத விக்கான வெறித்தனமான முயற்சி.

 இந்த விழாவிற்கான அழைப்பு வந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச் சூரி, ராமர் கோவில் நிகழ்வு அரசியல் விழாவாக நடத்தப்படுகிறது. அர சியலில் மதம் கலக்கப்படுவதை ஏற்க  முடியாது. எனவே பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்தார். 

அதனை தொட ர்ந்து பல அரசியல் கட்சிகள் இந்த நிக ழ்வை புறக்கணித்துள்ளதை வரவேற் கிறோம்.

வரலாற்றில் இல்லாத வகையில் பிரதமர் மோடி தமிழகத்தில் 3 நாட்களாக தங்கி, கோவில் கோவிலாக சென்றுள் ளார். 

புயல், மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட மக்களை அவர் சந்திக்காதது ஏன்? 

கடவுள் வழிபாட்டை விட, பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொல் வதுதானே பெரிய வழிபாடு! தமிழகம் கோரிய சுமார் 37ஆயிரம் கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்காதது ஏன்?

 பிரதமரின் செயல்கள் மக்களுக்கு பெரிய ஏமாற்றத் தை அளிக்கிறது.

தமிழக அரசு கோரிய நிவார ணத்தை ஜன.27 அன்று கொடுப்பதாக அமித்ஷா கூறியிருக்கிறார். 2  மாதமாக நிவாரணம் தராமல் இருப்பதே மோசமானது. 

எனவே, சம்பிரதாயத்திற்கு நிவாரணம் தராமல், தமிழக  அரசு கோரிய முழுத் தொகையையும் வழங்கவேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் ஊடக நண்பர்களை அச்சுறுத்துவது, இழிவாகப் பேசுவது, அவமரியாதை செய்வது என பாஜக தலைவர் அண்ணாமலை வழக்கமாக செய்து வருகிறார். 

பொது தளத்தில் நாகரீக சமூகத்தில் பயன்படுத்த முடியாத வார்த்தைகளை அண்ணாமலை பயன்படுத்துகிறார். எனவே, அண்ணாமலை பகிரங்கமாக பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்.  

வரவேற்பு திமுக இளைஞர் அணி மாநாட்டில், ஆளுநர் பதவியை முழுமையாக நீக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறை வேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. 

மாநில உரிமை களை பாதுகாக்க, விவாதிக்கும் வகையில் மாநாடு நடத்தி இருப்பது பாராட்டுக்குரியது. திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் இல்லத்தில் மனித உரிமையை மீறுகிற முறையில், சாதிய வன்கொடுமை நிகழ்ந்துள்ளதை கண்டித்துள்ளோம்.

அதன்பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளோம். சட்டமன்ற உறுப்பினரும் தனக்கும் இந்த பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை.

 சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை அரசு செய்யும் என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

 தமிழகத்தில் இதுபோன்று ஏராளமான சம்பவங்கள் நிகழ்கின்றன. அப்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சிதான் போராடுகிறது. 

இன்றைக்கு அரசியலாக பார்த்து இந்த சம்பவத்திற்காக அறிக்கை கொடுப்பவர்கள் மேல்பாதி, வேங்கைவயல் போன்ற இடங்களில் பிரச்சனை நடந்த போது எங்கே சென்றார்கள்? 

சாதிய பிரச்சனை, சமூக  ஒடுக்குமுறைக்கு எதிராக சிபிஎம் உறுதியாகநிற்கிறது.  என்று க.பாலகிருஷ்ணன் கூறினார்.  



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?