நீதிமன்றம் வைத்த குடடு

 தமிழ்நாட்டு பக்தர்கள் பெருமாளையும் வழிபடுவார்கள்; பெரியாரையும் போற்றுவார்கள். பிற மதத்தையும் மதிப்பார்கள். இந்த அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் பாஜகவினர் செயல்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஆணை!  

சீனாவின் 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

தலைநகர் டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாடு அணி தொடர்ந்து முதலிடம்.
4ம் நாள் இறுதியில் 6 தங்க பதக்கங்களுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2ம் இடத்திலும், ஹரியானா 3ம் இடத்திலும் உள்ளது.

பெரியபாளையம் பவானியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே  மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. அவர்களின்2 படகுகளும் சிறைபிடிப்பு.
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலை,2ம் கேட், வி.இ.சாலை மற்றும்  பாளை சாலைபொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள்மாநகராட்சி,காவல்துறை மாடுகளை அகற்ற மக்கள் கோரிக்கை..

எப்பவுமே பொய்யை அடுக்கடுக்காய் சொல்வதுதான் பாஜகவின் வேலை’ -நிதி ஆலோசகர் ஆனந்த் சீனிவாசன்.

"வள்ளலாருக்கும் காவி உடையை ஆளுநர்  ஆர்.யன்.ரவி போட்டாலும் போட்டுவிடுவார்” - -ஆர்.எஸ்.பாரதி .
நீதிமன்றம் வைத்த குடடு

.வதந்தி பரப்பிய நிர்மலா,ரவி,தினமலர் வகையறாக்களுக்கு


பாஜக-வில் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்களும் கூட, வதந்தி பரப்பும் வாட்ஸ்ஆப் யுனிவர்சிட்டிகளாகவே செயல்படுவதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோரை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சாடியுள்ளார்.


திமுக தொண்டர்களுக்கு எழுதி யிருக்கும் கடிதத்தில் மு.க. ஸ்டாலின் :-

மதவெறி அரசியலால் மக்களைப் பிளவுபடுத்துகிற ஒன்றிய பாஜக அரசு தனது பத்தாண்டு கால ஆட்சியில், மக்க ளின் அடிப்படைத் தேவைகள் எதையும் நிறைவேற்றாமல் முழுமையாகத் தோல்வி அடைந்திருப்பதை மறைப்ப தற்காக ஆன்மீகத்தையும் அரசிய லாக்கும் வகையில் அயோத்தி ராமர்  கோவில் திறப்பு விழாவை நடத்துகிறது. 

ராமர் கோவில் திறக்கப்படும் நாளில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோவில்களில் சிறப்பு பூசைகள் செய்வத ற்கும் அன்னதானம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அவதூறு நிறைந்த பொய்ச் செய்தியை ஊட கங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயி லாகப் பரப்பினர்.

 மாநாட்டு அரங்கில் இருந்தாலும், தன் துறையின் பணி களை ஒவ்வொரு நொடியும் மேற்கொண்ட செயல்பாபு எனப்படும் அமைச்சர் சேகர்பாபு உடனடியாக இந்த அவதூறு பரப்புரைக்கு மறுப்பு தெரிவித்து, உண்மை நிலையை விளக்கி அறிக்கைவெளியிட்டார்.

ஒரு வதந்தியை வாட்ஸ் ஆப், இதர  சமூக வலைத்தளங்கள், தொலைக் காட்சிகள், பத்திரிகைகள் எனப் பரவச்  செய்து அதனை உண்மை போல ஆக்கும் பணியை பாஜக-வில் உயர்ந்த பொறுப் பில் உள்ளவர்களே பொறுப்பின்றி செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. 

இதில் தலைநகரம் தில்லி முதல் தமிழ்நாட்டில் உள்ள பாஜக-வினர் வரை யாரும் விதிவிலக்கு கிடையாது.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக் கோவிலில் பஜனை நிகழ்ச்சிகளின் போது காணொளி காட்சி ஒளிபரப்பு க்கு அறநிலையத்துறை தடை விதித் திருப்பதாகவும் ஒன்றிய நிதியமைச்ச ரான நிர்மலா சீதாராமன் அம்மையார் குறிப்பிட்டிருந்தார். 

ஆனால், அந்த பஜனை நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி யவர்களே, காணொளி காட்சிகள் எதை யும் திரையிடமாட்டோம் என்று குறிப்பி ட்டுத்தான் அனுமதியே கோரியுள்ளனர்.

 இதனை மறைத்துவிட்டு, ஒன்றிய நிதி யமைச்சர் பரப்பிய உண்மைக்கு மாறான செய்தி.. அல்ல, அல்ல, திட்டமிடப்பட்ட வதந்தி, பொழுது விடிவதற்குள் பொய் என அம்பலமானது. 

அதுமட்டுமல்ல, இந்தப் பொய்ப் பரப்புரைக்குச் சென்னை உயர் நீதி மன்றமே கண்டனம் தெரிவித்துள்ளதை யும், தமிழ்நாட்டை என்றென்றும் அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்யும் மதநல்லிணக்க எண்ணம் கொண்ட மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 “பக்தி என்பது மகிழ்ச்சிக்கும் அமைதிக் கானதும் மட்டுமே. சமூகத்தில் நிலவும் சமநிலையைச் சீர்குலைப்பதற்காக அல்ல” என்றும், சிறப்பு பூஜைகளுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாத நிலை யில், தவறான பரப்புரையால் சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டிற்கு வழி வகுத்திடக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் கண்ட னம் தெரிவித்து எச்சரிக்கைவிடுத்துள்ளது.

அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் நடந்துகொள்ளும் பாஜக- வின் உயர்ந்த பொறுப்பில் உள்ளவர் களும், பாஜக-வால் உயர்ந்த பொறுப்பை பெற்றவர்களும் தொடர்ந்து வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர்சிட்டிகளா கவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கள். 

தமிழ்நாட்டின் ஆளுநராக நிய மனப் பதவியில் உள்ள ஆர்.என். ரவி அதிகாரப்பூர்வ சமூக வலைத் தளப் பக்கத்தில், இந்து சமய அறநிலை யத்துறை நிர்வாகத்தில் சென்னை மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர்  கோவிலுக்கு வழிபாடு செய்யச் சென்ற போது, பூசாரிகள் மற்றும் கோவில் ஊழி யர்களிடம் கண்ணுக்குப் புலப்படாத பயம் தெரிந்ததாகவும், 

அயோத்தி இராமர் கோவிலில் பால இராமர் சிலை நிறுவப் படும் நாளில், கோதண்டராமர் கோவில் வளாகம் கடுமையான அடக்குமுறை உணர்வை வெளிப்படுத்துவதாகவும் தன் மனதின் வன்மத்தைப் பதிவிட்டுள்ளார்.

காமாலைக் கண்களுக்குக் கண்ட தெல்லாம் மஞ்சள் என்பார்களே அந்த  நிலையில்தான் இருக்கிறார், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொஞ்சமும் அறியாமல் தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என். ரவி. 

 அருள்மிகு கோதண்டராமர் திருக்கோ வில் அர்ச்சகர்களே, எவ்வித பயத்திற்கோ அடக்குமுறை உணர்வுக்கோ இடமில்லை  என்று தெரிவித்துள்ள நிலையில், ஆளு நர் அலறுவதற்குக் காரணம் அரசி யலன்றி வேறென்ன இருக்க முடியும்!

தமிழ்நாட்டில் எந்தக் கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தலாம். தைப்பூச நாளில் முருகன் திருக்கோவில்களிலும், சித்திரைத் திருவிழாவில் அழகர் ஆற்றில் இறங்கும்போதும், திருவாரூர் ஆழித்தேரோட்டத்தின்போதும், கும்ப கோணம் மகாமகம் திருவிழாவிலும், மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோவில் அறுபத்து மூவர் திருவீதியுலாவிலும் ஆயி ரமாயிரம் பக்தர்கள் உண்மையான பக்தி யுடன் பங்கேற்பதையும், அவர்களுக்கு பிற மதத்தினரும் ஒத்துழைப்பு அளிப்ப தையும் சமூகநீதிக் கொள்கை அடிப்ப டையிலான மதநல்லிணக்க நிலமாகிய தமிழ்நாட்டில் காணமுடியும். 

பாஜக தன் தோளில் சுமக்கும் அயோத்தி இராமர் கோவில் அரசியலை, அமைதியான  கோதண்டராமர் திருக்கோவிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரி டம் இருப்பது பக்தியா, பகல் வேடமா?

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள், பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக, அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். 

அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள். பெரி யாரின் தத்துவங்களையும் போற்று வார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள். இந்த அமைதியையும் நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பாஜக-வில் பல நிலைகளில் பொறுப்பு வகிப்பவர்களும் செயல்படு கிறார்கள். 

தலையில் குட்டு வைப்பது போல உயர்நீதிமன்றம் கண்டனம் தெரி வித்திருப்பதை வரவேற்போம். 

என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?