சந்திக்க விருப்பமில்லை!

 திருவொற்றியூர் கடற்பகுதியில் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்கள், அலையில் சிக்கி மாயமான நிலையில் சந்தோஷ் (17) என்ற மாணவன் சடலமாக மீட்புமேலும் 2 மாணவர்களை தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்

அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக எந்த விண்ணப்பமும் வரவில்லை"-  அமைச்சர்  சேகர் பாபு,  

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

அதிமுக தொகுதிப்பங்கீட்டு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது.
 மோடி அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகள் ஆச்சு... எய்ம்ஸ்க்கு 2வது செங்கல்லை வைக்கஅமைச்சர்யாரையும்அனுப்பலையா.?ஒன்றிய அரசை கலாய்த்த மதுரை எம்பி க.வெங்கடேசன்.

நாகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வர வேண்டும் என மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மிரட்டல்.மதிப்பென்கள் குறைக்கப்போவதாக எச்சரிக்கை.

தென்காசியில் அதிகாலை நடந்த சாலை விபத்து.6 பேர் உடல் நசுங்கி பலி.

சென்னையில் ரோந்து சென்ற காவலர்கள் (மாரிச்செல்வம், முரளி ஆகியோர் )மீது தாக்குதல்.

சிகிச்சைக்காக சொந்த ஊர் செல்ல வந்த சிஐஎஸ்எப் வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சந்திக்க விருப்பமில்லை!


நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஞாயிறன்று பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஆளுநர் ரவிக்கு பலத்த  எதிர்ப்பும், கருப்புக் கொடி காட்டும்  போராட்டமும் நடைபெற உள்ளது.


  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தலைமையில் இந்தியா கூட்டணி யில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பில் இந்த கருப்புக்கொடி காட் டும் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், நாகப்பட்டினம் வரும் ஆளுநர் ரவி, கீழவெண்மணிக்  குச் சென்று, அங்கு வெண்மணி போராட்டக் களத்தின் சாட்சியாக  இருக்கும் தோழர் கோ. பழனிவேல்  அவர்களை வீட்டிற்கே சென்று சந் திப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 

இதற்கு வெண்மணி மக்கள் மத்தியில்  கடும் எதிர்ப்பு எழுந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் களப்போராட்ட குறியீடாக திக ழும் கீழவெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்திற்கு அருகில் இருக்கும் கோ. பழனிவேல் இல்லத் திற்கு ஆளுநர் செல்வது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செய லாளர் ஆர். முத்தையன் கண்டனம் தெரிவித்தார்.

இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் வி. மாரிமுத்து செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில், “நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை தரும் ஆளுநர் ஆர்.என்.  ரவி, “மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ்நாடு அரசாங்கம் அனுப்பி  வைத்துள்ள 20-க்கும் மேற்பட்ட மசோ தாக்கள் மீது நடவடிக்கை எடுக்கா மல், நாடாளுமன்றத் தேர்தலுக்காக பாஜக செய்ய வேண்டிய வேலை களின் ஒரு பகுதியை ஆளுநர் செய்து  வருகிறார். போகிற இடமெல்லாம் வர லாற்று திரிபு வாதத்தில் ஈடுபடுகிறார்.

அத்தகையஆளுநர் ரவி, உழைக்கும் மக்களின் தியாகத்தால் விளைந்த கீழவெண்மணி பகுதிக்கு வரவுள்ள தாக அவரது பயண குறிப்பில் இருக்கி றது.

 யாரோ ஐந்து பேர் தோழர் கோ.  பழனிவேலுக்கு துண்டு அணிவித்து விட்டு உங்களை ஆளுநர் சந்திப்ப தாக விருப்பம் தெரிவிக்கிறார் என்று  கூறிவிட்டு சென்றுள்ளனர்.

ஒடுக்கப்  பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை - எளிய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் 44 பேரை உயிரோடு எரித்த கூட்டத்  தோடு கைகோர்த்து நிற்கும் இந்துத்  துவ சக்திகளின் பிரதிநிதியான ஆளு நர் ரவி, வெண்மணி வருவதும், தோழர்  கோ.பழனிவேலைச் சந்திக்கப் போவ தாக கூறுவதும் வன்மையான கண்ட னத்திற்கு உரியது. 

தமிழ் சேவா சங்கம்  என்கிற பெயரில் ஆர்எஸ்எஸ் வேலைகளைச் செய்து வரும் ஆளுநருக்கு, கீழ வெண்மணி செல்ல முயன்றால் உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி கருப்புக் கொடி காட்டு வோம்” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், வெண்மணி போராட்டத்தில் குண்டடிபட்டும், சிறைத்தண்டனை அனுபவித்தும், வயதுமூப்பு காரணமாக தற்போது  வீட்டில் ஓய்வெடுத்து வருபவருமான  கோ. பழனிவேல் செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்க எனக்கு  விருப்பமில்லை” என தெரிவித்துள் ளார். 

மேலும், “60 வருடங்களாக இந்த  பகுதியில் பல்வேறு இயக்கங்கள் இருந்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான் எங்களை பாது காத்து வருகிறது.

பாரதிய ஜனதா  போன்ற கட்சிகள் வருகின்ற நாடாளு மன்றத் தேர்தலை மனதில் வைத்து இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர். அவர்கள் வந்து சந்திப்பதால் நாங்கள் ஒருபோதும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தரப்  போவதில்லை. 

தேர்தல் வருவதால்  இங்குள்ள மக்களின் வாக்குகளை கைப்பற்றலாம் என்ற நோக்கத்தோடு வருகிறார்களே தவிர, இங்குள்ள மக்களின் நலன்களுக்காக அவர் கள் ஒருபோதும் வரவில்லை.

 நாங்கள் எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியோடுதான் இருப்போம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் எங்களின் உயிர்நாடி” என்றும் குறிப்பிட்டுள்ளார்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?