பாஜகவின் ஊதுகுழலாக

கலால் வரி உயர்வால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு.

180 மி.லி. அளவு சாதாரண, நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10, 

180 மி.லி. அளவு உயர்தர மதுபானங்களின் விலை ரூ.20, 

650 மி.லி. அளவு பீர் வகைகளின் விலை ரூ.10 உயர்வு - டாஸ்மாக் நிர்வாகம்.

லடாக் லே பகுதியில் இன்று அதிகாலை 5:39 மணிக்கு லேசான நிலநடுக்கம்.

குரூப்-4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

தென் மாவட்டங்களுக்கு செல்லும்  அனைத்து அரசு பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்துஇன்று முதல் இயக்கப்படும்.நடைமேடைகள் அறிவிப்பு.

கோவை யூடியூப் சேனல் மூலம் ஆசையை தூண்டி பொதுமக்களிடம் நூதன மோசடி: விளம்பரம் பார்த்தாலே பணமோ பணம் கோவை நிறுவனம் மீது போலீஸ் வழக்கு. உரிமையாளருக்கு ஆதரவாக 10 ஆயிரம் பேர்கள் சாலை மறியல்.இவர்கள் ஏமாந்தால்,புகார் கொடுத்தால் முகத்திலேகிழித்துஎறியவேண்டும்.ஏமாறவே பிறந்தவர்கள்.

சரணடைவதில் இருந்து பொன்முடிக்கு மேலும் நான்கு வாரம் விலக்கு.உச்ச நீதிமன்றம்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க சென்ற போது ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் டெல்லி வீட்டிலிருந்து தலைமறைவு.

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு கூட்டணி கட்சிகளுக்காக காத்திருந்த அதிமுக.ஒருவரும் வராததால் ஏமாற்றம்.

ஒன்றியஅரசுஅறிவிப்பு வழங்காததால்தான் வீடுகள் வழங்கப்படவில்லை" -ஆர.யன்.ரவிக்கு அமைச்சர்பெரியசாமி பதில்.

ஆளுநராக செயல்படாமல்,பாஜகவின் ஊதுகுழலாக ஆர்.யன்.ரவி செயல்பட்டு வருகிறார்" - அமைச்சர் ரகுபதி.


தகுதி இல்லை?

பிரதம மந்­திரி ஊரக குடி­யி­ருப்­புத் திட்­டத்­தின் கீழ் வீடு­கள் கட்­டு­வது தொடர்­பாக சில சொந்த கருத்­து­களை தமிழ்­நாடு ஆளு­நர் ரவி தெரி­வித்து இருந்­தார். இது தொடர்­பாக ஊரக வளர்ச்­சித் துறை அமைச்­சர் இ.பெரி­ய­சாமி புள்ளி விவ­ரங்­க­ளோடு அளித்­துள்ள பதி­ல­றிக்கை பின்­வ­ரு­மாறு:

நாகப்­பட்­டி­னம் மாவட்­டம் வெண்­மணி ஊராட்­சி­யில் பிர­தம மந்­திரி ஊரக குடி­யி­ருப்­புத் திட்­டத்­தின் கீழ் 127 பய­னா­ளி­க­ளுக்கு வீடு­கள் கட்ட அனு­மதி வழங்­கப்­பட்டு இது­வரை 75 பய­னா­ளி­கள் வீடு­களை கட்டி முடித்­துள்­ள­னர். 

மீத­முள்ள 52 பய­னா­ளி­க­ளால் வீடு­கள் கட்­டும் பணி தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது.

நாகப்­பட்­டி­னம் மாவட்­டத்­திற்கு ஒன்­றிய அர­சால் 31,051 வீடு­கள் மட்­டும் வழங்­கப்­பட்டு 23,110 வீடு­கள் பய­னா­ளி­க­ளால் கட்டி முடிக்­கப்­பட்­டுள்­ளது. 

மீத­முள்ள வீடு­கள் கட்­டும் பணி நடை­பெற்று வரு­கி­றது.

பிர­தம மந்­திரி ஊரக குடி­யி­ருப்­புத் திட்­டத்­தின் கீழ், ஒரு வீடு கட்­டு­வ­தற்கு ஒன்­றிய அரசு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள தொகை ரூ.1.20 இலட்­சம் ஆகும். 

இத்­திட்­டத்­தில் ஒன்­றிய அரசு தன் பங்­காக வீடு கட்ட 72 ஆயி­ரம் ரூபாய் மட்­டுமே வழங்­கு­கி­றது. 

ஆனால், ஊர­கப் பகு­தி­க­ளில் வசிக்­கும் மக்­க­ளின் நலன் கருதி தமிழ்­நாடு அரசு மாநி­லத்­தின் நிதி பங்­க­ளிப்­பாக 1 இலட்­சத்து 68 ஆயி­ரம் ரூபாய் வழங்­கு­கி­றது.

இத­னு­டன் மகாத்மா காந்தி வேலை உறு­தித் திட்­டம் மூலம் ரூ.26,460 தூய்மை பாரத இயக்­கம் மூலம் ரூ.12,000 உடன் சேர்ந்து தமிழ்­நாட்­டில் ஒரு வீட்­டின் அல­குத் தொகை ரூ.2,78,460 ஆக உள்­ளது.

 இந்­தி­யா­வி­லேயே அதிக அள­வாக தமிழ்­நாட்­டில் தான் பய­னா­ளி­க­ளுக்கு பிர­தம மந்­திரி ஊரக குடி­யி­ருப்­புத் திட்­டத்­தின்கீழ் வீடு கட்ட அதிக தொகை வழங்­கப்­பட்டு வரு­கி­றது.

இவ்­வ­ரசு பத­வி­யேற்­ற­வு­டன் 2,41,861 பய­னா­ளி­க­ளுக்கு வீடு­கள் கட்ட அனு­மதி வழங்­கப்­பட்­டது. 

ஏற்­க­னவே அனு­மதி வழங்கி முடி­வு­றா­ம­லி­ருந்த வீடு­க­ளை­யும் சேர்த்து 07.05.2021க்கு பின்­னர் இது­வரை 2,93,277 வீடு­கள் முடிக்­கப்­பட்­டுள்­ளன. இவ்­வ­ரசு பதவி யேற்ற நாளான 07.05.2021க்கு பிறகு அலகு தொகை­யாக ஒன்­றிய அரசு நிதி­யி­லி­ருந்து ரூ.2933.31 கோடி வரப்­பெற்­றுள்­ளது.

 மாநில அரசு இத்­திட்­டத்­திற்கு ரூ.3116.54 கோடி நிதி வழங்­கி­யுள்­ளது. இத்­திட்­டத்­தின் கீழ், பய­னா­ளி­கள் விதி­மு­றை­க­ளுக்கு உட்­பட்டு முறை­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, வீடு­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன.

பிர­தம மந்­திரி ஊரக குடி­யி­ருப்­புத் திட்­டத்­தின் கீழ் ஒன்­றிய அர­சால் ஊராட்சி வாரி­யாக வீடு­கள் வழங்க இலக்கு நிர்­ண­யம் செய்­யப்­ப­டு­கி­றது. 

ஒன்­றிய அர­சால் இலக்கு நிர்­ண­யம் செய்­யப்­பட்டு தகுதி வாய்ந்த பய­னா­ளி­கள் இல்­லாத ஊராட்­சி­க­ளி­லி­ருந்து, தகுதி வாய்ந்த பய­னா­ளி­கள் அதி­க­முள்ள ஊராட்­சி­க­ளுக்கு வீடு­களை மாற்றி வழங்க, ஒன்­றிய அரசு ஒப்­பு­தல் அளிக்­காத கார­ணத்­தால், வெண்­மணி போன்ற ஊராட்­சி­க­ளுக்கு இத்­திட்­டத்­தின் கீழ் தேவைக்­கேற்ப வீடு­கள் வழங்க இய­ல­வில்லை.

தற்­போது தமிழ்­நாடு அர­சால் குடிசை வீடு­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட கணக்­கெ­டுப்­பில் நாகப்­பட்­டி­னம் மாவட்­டம் கீழ்­வே­ளுர் ஊராட்சி ஒன்­றி­யத்­திற்கு உட்­பட்ட வெண்­மணி ஊராட்­சி­யில் மொத்­தம் 66 குடிசை வீடு­கள் தகுதி வாய்ந்­த­வை­யாக கண்­ட­றி­யப் பட்­டுள்­ளது. 

மேற்­கா­ணும் குடிசை வீடு­கள் தமிழ்­நாடு அர­சின் ஊரக குடி­யி­ருப்பு திட்­டம் மூலம் கான்­கி­ரிட் வீடு­க­ளாக இனி வரும் காலங்­க­ளில் மாற்­றப்­ப­டும்.

மேலும் வீட்­டு­மனை இல்­லாத ஏழை எளிய மக்­க­ளுக்கு வீட்­டு­ம­னைப் பட்டா வழங்கி அவர்­க­ளுக்கு வீடு­கள் கட்டி வழங்­கி­ய­தும், தமிழ்­நாடு குடிசை மாற்று வாரி­யத்தை (தமிழ்­நாடு நகர்ப்­புர வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யம்) 1970-களி­லேயே உரு­வாக்கி நகர்ப்­பு­ரங்­க­ளில் குடி­சை­யில் வசித்த வீடற்ற மக்­க­ளுக்கு அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பு­க­ளைக் கட்டி வழங்­கி­ய­தும், ஊர­கப்­ப­கு­தி­க­ளில் கலை­ஞர் வீடு வழங்­கும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி எண்­ணற்ற ஏழை மக்­கள் பய­ன­டைய வழி­வ­குத்­த­தும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் அரசு தான் என்­ப­தை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.

எனவே, எல்­லோ­ருக்­கும் எல்­லாம் என்ற கொள்­கை­யு­டன் தொடர்ந்து செயல்­ப­டும் இந்த திரா­விட மாடல் அரசு, ஊர­கப் பகுதி மக்­க­ளுக்கு தேவை­யான வீடு கட்­டும் திட்­டத்­தினை தொடர்ந்து திறன்­பட செயல்­ப­டுத்­தும் என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

இவ்­வாறு அமைச்­சர் இ.பெரி­ய­சாமி குறிப்­பிட்­டுள்­ளார்.

ஆக அரசு திட்டங்களைப் பற்றியோ,செயல்பாடுகளைப் பற்றியோ அறியாமலேயே தி.முக,அரசை குறை கூறவேண்டும்  என்பதற்காகவே விபரமே இல்லாமல் தவறாகவே ஆர்.யன்.ரவிபேசிவருகிறார்.முக்கியமான ஆளுநர் பதவியில் காலம் கடத்தும் ரவி வாய்க்குவந்தவற்றை அண்ணாமலையைப் போலவே புளுகி வருகிறார் என்பது தெளிவாகிறது.இது ஆளுநர் பதவிக்கு தகுதியான செயல் அல்ல.என்பது?அல்லது ஆளுநர் பதவிக்கு ஆர்.யன்.ரவிக்கு தகுதி இல்லை என்பதா?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?