தோல்வியான சதி

 ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கm  இருந்துதான் இயக்கப்பட வேண்டும் - அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்!

மிசோரமில், மியான்மர் ராணுவ விமானம் விபத்து!

மாநில மகளிர் கொள்கைக்கு தமிழ்நாடு அமைச்சரவையில் ஒப்புதல்!

ராமர் கோயில் திறப்பு கொண்டாட்டம்: சங்பரிவாரத்தினர்ம.பி,யில் கிறிஸ்துவ தேவாலயத்தின் மீது காவி கொடி கட்டி அராஜகம்!

சென்னை பெருநகர காவல்துறைக்கு ₹6.50 கோடி செலவில் 53 புதிய கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 98% உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்.

தோல்வியான சதி

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின்படி அயோத்தி யில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டு பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த கோவில் திறப்பு விழா என்பது முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் ஆதர வோடு ஆர்எஸ்எஸ்- பாஜக நிகழ்ச்சியாக நடத் தப்பட்டுள்ளதேயன்றி ஆன்மீகத்திற்கு இந்த விழாவில் துளியும் தொடர்பில்லை.

அயோத்தி கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழக பாஜகவும், ஆளுநர் ஆர்.என்.ரவியும் தமிழ்நாட்டில் பதற்றத்தையும், மதப் பகைமையையும் ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப் பட்டுள்ளன.

  அயோத்தி கோவில் திறப்பு விழாவை தமிழக மக்கள் கண்டு கொள்ளாத ஆத்திரத்தில் பாஜக வினரும், தமிழக ஆளுநர் மட்டுமின்றி புதுச்சேரி துணை நிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்தரராசனும் உண்மைக்குப் புறம்பான பல்வேறு செய்திகளை கொஞ்சம் கூட கூச்ச மில்லாமல் பரப்பினர்.

 திங்களன்று இந்து சமய அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை திறக் கக்கூடாது என்றும், வழக்கமான பூஜைகள் நடத் தக்கூடாது என்றும் அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்ததாக இவர்கள் பொய் பரப்பினார்கள். 

ஆனால் அது உண்மையல்ல. அனைத்து கோவில்களிலும் வழக்கமான வழி பாட்டு முறைகள் தடையின்றி நடைபெறும் என இந்து சமயஅறநிலையத்துறை தெளிவுபடுத்தியது. 

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை பாஜக வின் தேர்தல் பிரச்சார மேடையாக பயன்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சி பலிக்க வில்லை.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  சென் னையில் உள்ள கோதண்டராமசாமி கோவி லுக்கு சென்றதாகவும், அங்குள்ள அர்ச்சகர் களும், ஊழியர்களும் அச்சுறுத்தப்பட்டு பயத்து டன் காட்சியளித்ததாகவும் கூசாமல் பொய் கூறி னார். 

ஆனால் அந்தக் கோவில் அர்ச்சகர்கள் தங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டனர். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் காணொலி காட்சி ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதாக கூறி னார்.

ஆனால் அத்தகைய அனுமதி எதுவும் கோரப்படவில்லை என மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளார்.  வதந்திகளை பரப்பாதீர்கள் என சென்னை உயர்நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ளது. 

அயோத்தி கோவில் திறப்பு விழாவைப் பயன் படுத்தி தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முயன்ற பாஜகவினர் படுதோல்வியடைந்துள்ளனர். 

தமிழ் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்த போதும், மதவெறி அரசியலை தீர்மானகரமாக நிராகரித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?