போலிச் செய்திகளால்
இந்தியாவுக்கு ஆபத்து" - எச்சரிக்கும் உலக பொருளாதார மன்றம்
World Economic Forum கடந்த வருடம் செப்டெம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கல்வி, வணிகம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,490 நிபுணர்களிடம் ஒரு ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வில் அந்த நிபுணர்களின் கருத்துப்படி, 2024-ம் ஆண்டில் உலக நாடுகள் சந்திக்கவேண்டியவை என 34 ஆபத்துகளை உலக பொருளாதார மன்றம் பட்டியிலிட்டது. அவற்றுள், போலிச்செய்திகளும் ஒன்று.
அந்த 34 ஆபத்துகளில் போலிச்செய்திகள் எந்த நாட்டிற்கு அதிக ஆபத்தை உருவாக்கும் எனும் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
போலிச் செய்திகளை வளர்ச்சியென இந்தியா முழுக்கப் பரப்புவது யாரெனத் தெரியுமே?
தேமுதிக பொதுச்செயலாளராக முதல்முறையாக கொடியேற்றிய பிரேமலதா.கொடி பாதியிலேயே அறுந்து விழுந்தது.
கிருஷ்ணகிரி மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை தாக்கியதில், கொள்ளு பயிரை அறுவடை செய்ய சென்று இருந்த விவசாயி சாம்பசிவம் உயிரிழப்பு.
இந்தாண்டுக்கான ஹஜ் புனித பயணம் செல்வோரை தேர்வு செய்வதற்கான குலுக்கல் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதில் தேர்வாகும் பயணிகளுக்கு SMS மூலம் தகவல் தெரிவிக்கப்படும் .
ஸ்பெயினில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார் மு.க.ஸ்டாலின்.
பச்சோந்திகளுக்கே பாடம் நடத்தும் அளவுக்கு இந்திய அரசியலில் இடம்மாறுபவ ராகவும் நிறம் மாறுபவராகவும் உரு வெடுத்துள்ளார் நிதிஷ்குமார்.
பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக இவர் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
காங்கிரஸ், ராஷ்ட்டிரிய ஜனதா தளம் மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் ‘மகாகத் பந்தன்’ கூட்டணி அமைத்து முதல்வர் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்த நிதிஷ்குமார் இப்போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பாஜகவிடம் ஆதரவு பெற்று, மீண்டும் முதல்வராக பதவியேற்று, தான் ஒரு பச்சோந்தி என்பதை நிரூபித்துள்ளார்.
நிதிஷ் குமார் ஆட்சி அமைப்பதற்கு ஆதர வளிக்க தயாராக இருப்பதாக பாஜகவும் அறி வித்துள்ளது.
சுடுகாட்டை சுற்றிவரும் கழுகு போல கூட்டணிகளையும் கட்சிகளையும் உடைத்து அதிகாரத்தை ருசிப்பதை பாஜக ஒரு கலையாகவே பயின்றுள்ளது. இப்போதும் அதைத்தான் பாஜக செய்துள்ளது.
2015ல் ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து நிதிஷ்குமார் முதல்வரானார்.
2017ல் அக்கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுடன் சேர்ந்து முதல்வரானார்.
2020ஆம் ஆண்டு பாஜகவுடன் சேர்ந்து தேர்த லில் வெற்றிபெற்ற நிதிஷ்குமார் பின்னர் 2022ல் பாஜக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ், ஆர்ஜேடி இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் முதல்வரானார்.
இப்போது மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் புறப்பட்ட இடத்திற்கே செல்லும் வகையில் மீண்டும் பாஜகவுடன் இணைந்து முதல்வராகியுள்ளார்.
இவரைப் போன்ற பச்சோந்திகளால்தான் ஜன நாயக அரசியல் மீதே மக்களுக்கு அவநம்பி க்கை ஏற்படுகிறது.
முன்னாள் சோசலிஸ்ட் டான நிதிஷ்குமார் குறைந்தபட்ச ஜனநாயக பண்புகள் கூட இல்லாதவராக மாறிவிட்டார்.
இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்த இவர், சமீப நாட்களாக பிரதமர் வேட்பாளராகத் தான் அறிஙிக்கப் படாத்தால் கட்டுச்சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்த கதையாக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுத்திக் கொண்டிருந்தார்.
பாஜகவுடன் ஏற்பட்ட பாசத்தின் காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெளிவாகிவிட்டது.
நிதிஷ்குமார் தன்னுடைய அரசியலில் கடைசி அத்தியாயத்தை துரோகத்தின் வரி களால் எழுதத் துவங்கிவிட்டார்.
மதவெறிக்குத் துணைபோகும் இவரைப் போன்றவர்களையும் மதவெறி பாஜகவையும் மக்கள் வரும் மக்கள வைத் தேர்தலில் உறுதியாக நிராகரிக்கவேண் டும். அதன் மூலம் ஆரோக்கியமான அரசிய லுக்கு வழிவகுக்க வேண்டும்.
பீகாரில் மதச்சார் பற்ற சக்திகள் ஊசலாட்டமின்றி தேர்தலைச் சந்திக்க நிதிஷ்குமாரின் நடவடிக்கை உதவியாக இருக்கும் என்பதே உண்மை.
-------------------------+++++-----------------