குழந்தைகள் கடத்தல் ?
பாலாற்றின் குறுக்கே மீண்டும் ஒரு தடுப்பணை?. 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி- வேல்முருகன்
திண்டுக்கல்லில் திமுக மாமன்ற உறுப்பினரின் தந்தை ஓட ஓட வெட்டிக்கொலை.
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார்.பயனாடை அணிவிக்க வந்த முதியரசிகர் பயனாடையை பிடுங்கி கீழே எறிந்து அவமரியாதை.
- பாஜகவுக்கு தாவிய விஜயதாரணி; காலி என அறிவிக்கப்பட்ட விளவங்காடு தொகுதி .
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் செய்திதொடர்பு பிரிவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் நியமனம்
- பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திரா தீவிரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
- திருவள்ளூர் சீமாவரம் சுங்கச்சாவடி அருகே லாரி மீது கார் மோதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார் உயிரிழந்தார்
*கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட ஒன்றிய அரசுக்கு உத்தரவு.*
கீழடிஇரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நடத்திய இரண்டாம் கட்ட ஆய்வின் அறிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல் உள்ளது.
இந்த நிலையில், மதுரையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த அறிக்கையை 9 மாதங்களுக்குள் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் கடத்தல் ?
குழந்தைகளை சிலர் கடத்த முயற்சிப்பதாக பொய்யான காணொலிகள் வேகமாக பரவி வருகிறது. சமீப காலமாக சில நபர்கள், குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் குழந்தைகள் தொடர்ந்து கடத்தப்படுவதாகவும், அவர்கள் கொல்லப்படுவதாகவும் வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு உண்மைத் தன்மை குறித்து விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து உண்மை சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “ராஜஸ்தானில் உள்ள நாகூர் பகுதியில் குப்பை போடுவதற்கென வெட்டப்பட்ட குழி அருகே குழந்தைகள் விளையாடி உள்ளனர். அப்போது தவறி விழுந்து பலியாகினர். இந்த சம்பவம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. மற்றொரு வீடியோவில், வட இந்திய பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் தொடர்பான பிரச்சாரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இது.
அந்த வீடியோ தொடக்கத்தில் டிஸ்க்ளைமர் வாசகமும் இடம்பெற்றுள்ளது. மற்றொரு வீடியோவில், உத்தர பிரதேசத்தில் உள்ள ஹெம்பூர் படவாவில் 2017ம் ஆண்டு சிறுத்தை தாக்கியதால் உயிரிழந்த குழந்தை ஆகும். அதேபோல மற்றொரு காணொளியில் மெக்சிகோவில் 2018ம் ஆண்டு நடைபெற்ற சம்பவம் ஆகும்.
மேற்கண்ட சம்பவங்களை தமிழகத்தில் நடைபெறுவது போன்று சித்தரித்து சிலர் பரப்பு வருகின்றனர். தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்ற பெயரில் பரப்பப்படும் இந்த வீடியோவை நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்று உண்மை சரிபார்ப்பு குழுவினால் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------