தொங்கும் மக்களாட்சி

 கோவை வேளாண் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ரத்து! மாணவர்கள் அதிர்ச்சி.

உ.பி, உன்னாவில் பால் டேங்கர் மீது மோதிய டபுள் டெக்கர் பஸ்.. 18 பேர் உடல் நசுங்கி பலி.. பலர் படுகாயம்.

தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு  உத்தரவு.

வடமாநிலங்களில் ஏஜென்டுகள் மூலம் பலர் தேர்வு எழுதி உள்ளனர். நீட் தேர்வில் ஒரே மாணவருக்கு 3 மாநிலங்களில் ஆள்மாறாட்டம்.சிபிசிஐடி கேட்ட விவரங்களை ஏன் தரவில்லை? தேசிய தேர்வு முகமை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.

 வேட்டை தொடங்கியது.சென்னையில் 6 ஆயிரம் ரவுடிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு.போலீஸ் கமிஷனர்அருண்இன்ஸ்பெக்டர்களுக்கு  உத்தரவு.
”மக்­கள் அர­சி­ய­லைச் செய்­யுங்­கள், மரண அர­சி­யல் வேண்­டாம்”.பழனிசாமிக்கு திமுக பதில்.
இன்று விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு.. 276 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு.

பிரான்ஸ் 
தொங்கும் மக்களாட்சி


சர்வதேச நிதி மூலதனத்தால் இயக்கப்படும் நவீன தாராளமய முதலாளித்துவம், சில குறிப்பிட்ட பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் மெகா கோடீஸ்வரர்களின் கைகளில் உலகின் செல்வ வளங்களை எல்லாம் குவிக்கும் பொருட்டு, உலகெங்கிலும் பல நாடுகளில் நவீன பாசிச சக்திகளை உருவாக்கியும், தூண்டியும் வருகிறது.

ஒருபுறம் வேலை பறிப்புகள், கூலி வெட்டு,  ஊதிய ஒப்பந்தக் காலம் அதிகரிப்பு, ஓய்வூதி யம் பறிப்பு, வேலை நேரம் அதிகரிப்பு உட்பட அனைத்துத் தரப்பு தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீதான முதலாளித்துவ சுரண்டல் மேலும் பல கொடிய வடிவங்கள் எடுக்கிறது.

மறுபுறம் இதற்கு காரணமான முதலாளித்துவ லாபவேட்கையின் மீதும் அதை ஏவும் பெரும் கார்ப்பரேட் முதலாளிகள் மீதும், அமலாக்கும் அரசுகள் மீதும் எழும் கோபத்தை, கொந்தளிப்பை, போராட்ட அலையை மடைமாற்றி; மேற்கண்ட துயரங்களுக்கு எல்லாம் காரணம் வேறு இடங்க ளிலிருந்து பல்வேறு காரணங்களால் புலம் பெயரும் குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்த மக்கள்தான் என்றும்; குறிப்பிட்ட மொழி, இனம், மதத்தை சேர்ந்தவர்கள்தான் என்றும் சக மனிதர்க ளுக்குள்ளேயே பகை உணர்வை, வெறி உணர்வைக் கிளப்பி குளிர் காயும் விதத்தில் அதிதீவிர வலதுசாரி சக்திகளை உருவாக்கி வருகிறது.

இதைத் தான் சமீப நாட்களாக ஐரோப்பா வில் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கி றோம். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் அதிதீவிர வலதுசாரி சக்திகள் கணிச மான வாக்குகளை பெற்றது இப்படித்தான். 

இதைத் தொடர்ந்து பிரான்சில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிதீவிர வலது சாரிகள் பெரும் சக்தியாக எழுந்து, ஆட்சியைக் கைப்பற்றும் அபாயம் ஏற்பட்டது. முதல் சுற்று வாக்குப்பதி வில் கணிசமான வாக்குகளை பெற்றனர். 

நீண்ட நெடிய புரட்சிகர வரலாற்றைக் கொண்ட பிரான்ஸ், இரண்டாம் உலக யுத்தத்தில் வீழ்த்தப்பட்ட பாசிசம் நவீன வடிவில் ஐரோப்பா வில் மீண்டும் கோலோச்சுகிற முதல் நாடாக மாறிவிடுமோ என்ற அபாயமும் அச்சமும் அந்நாட்டு மக்களை மட்டுமின்றி, உலக மக்களையும் உலுக்கியது.

இத்தகைய பின்னணியில்தான் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து, முதல் சுற்று வாக்குப்பதிவுக்கும், இரண்டாம் சுற்று வாக்குப் பதிவுக்கும் இடையில் கிடைத்த ஒரே ஒரு மாத இடைவெளியில், அதிதீவிர வலதுசாரி சக்திகளை வலுவான முறையில் ஓரங்கட்டி, வீழ்த்தி வெளி யில் தள்ளிவிட்டனர். 

நடப்பு உலக வரலாற்றில் பிரான்ஸ் இடதுசாரிகள் நிகழ்த்தியுள்ள மகத் தான சாதனை இது என்றால் மிகையல்ல.

 தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டுள்ள நிலையில் 192 இடங்களை கைப்பற்றி முதல் பெரும் கட்சி யாக  இடதுசாரிகளின் புதிய மக்கள் கூட்டணி வந்துள்ளது. 

அதை அங்கீகரிக்க மறுக்கிறார் மக்களின் ஆதரவை இழந்துள்ள ஜனாதிபதி மக்ரோன். மக்கள் தீர்ப்பை மதிக்கவில்லை என்றால் பிரான்சில் கொந்தளிப்பு ஏற்படுவது உறுதி


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?