கொலை வழக்குப் பதியுங்கள்!

 தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியீடு: தமிழகத்தில் 650 பேர் தேர்ச்சி.
விக்கிரவாண்டி தொகுதி நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: நீர்வளத்துறை - மணிவாசன், பொதுப்பணித்துறை - மங்கத் ராம் சர்மா, சுகாதாரத்துறை - சுப்ரியா சாகு.

கொலை வழக்குப் பதியுங்கள்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனித உரிமை ஆணைய சட்டத்தின்படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்று வாதிட்டார்.


இந்த வாதத்தை மறுத்த மனுதாரர் ஹென்றி திபேன், மனித உரிமை ஆணைய சட்டப்படி மனித உரிமை ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்ய முடியும். 

அந்த வகையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க எந்த தடையும் இல்லை என்றார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று மனுதாரர் மனு தாக்கல் செய்ய எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை.


அப்போது நீதிபதிகள், மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நடந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை.


 அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்?,

 யார் பொறுப்பேற்பார்கள் ?

என்று கேள்விகள் எழுப்பியதுடன் எதிர்மனுதாரர்களின் ஆட்சேபத்திற்கு பதில் அளிக்குமாறு மனுதாரர் ஹென்றி திபேனுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


ஒன்னும் தேரல?

நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி 24 லட்சம் மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினர். ஜூன் 14ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தநிலையில், 4ம் தேதியே முடிவுகளை அறிவித்தது. 


இந்நிலையில், நீட் தேர்வில் மொத்தம் 67 பேர் 720 மதிபெண்கள் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 



இதனால் சந்தேகம் எழுந்தது. மேலும், அரியானா மாநிலத்தில் ஒரே பயிற்சி மையத்தின் மூலம் தேர்வு எழுதிய 6 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் தெரியவந்தது. அதனால், இந்த தேர்வில் முறைகேடு நடந்துள்ளாக புகார் தெரிவித்தனர்.


இதையடுத்து, முழு மதிப்பெண் வழங்கிய விவகாரத்தில் சில மையங்களில் கேள்வித்தாள் மாற்றி வழங்கப்பட்டதால், மாணவர்கள் தேர்வு எழுதுவதில் காலதாமதம் ஏற்பட்டது. 

அதனால் கேள்வித்தாள் மாறியவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இது தொடர்பான சர்ச்சையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். 


இந்த வழக்கில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 பேருக்கு மீ்ண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.


நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ஜூன் மாதம் 23ம் தேதி நீட் மறு தேர்வை தேசிய முகமை நடத்தியது. அதில் 1563 பேரில் 48 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை. மாறாக 813 பேர் மட்டுமே பங்கேற்றனர். 


குறிப்பாக சண்டிகரில் 2 பேர் பதிவு செய்திருந்தும் தேர்வுக்கு வரவில்லை. ஜஜ்ஜார் மையத்தில் 494 பேர் பதிவு செய்திருந்தும் 287 பேர் மட்டுமே எழுதினர். இதற்கான முடிவுகளை நேற்று தேசிய தேர்வு முகமை தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. 


தேர்வு எழுதியோருக்கான மதிப்பெண் பட்டியல்களும் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த தேர்வில் முழுமதிப்பெண் பெற்ற 6 பேர் உட்பட யாருமே மறுதேர்வில் முழு மதிப்பெண் பெறவில்லை. 


மாணவர்கள் அவர்களின் மறு தேர்வின் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?