வாராது வந்த மாமணி

 தனியார் செல் நிறுவனங்களில் கட்டண உயர்வு; பிஎஸ்என்எல் சேவைக்கு மாறிய 30 லட்சம் வாடிக்கையாளர்கள்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் போதை ஊசி விற்கும் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

10 ஆண்டாகியும் எந்த பலனும் இல்லை; கங்கை தூய்மை திட்டத்தின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஸ்வாகா: மீண்டும் மீண்டும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு -

ஆற்றில் போட்டாலும்....

கங்கை ஆற்றில் கணக்கு வழக்கே இல்லாமல் ஒன்றிய பாஜ அரசு பணத்தை கொட்டிக் கொண்டிருக்கிறது.


 கடந்த 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ பொறுப்பேற்றதும் நவமாமி கங்கே எனப்படும் கங்கை தூய்மை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தது. இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கங்கை நதி பாயும் உபி, உத்தரகாண்ட், ஜார்க்கண்ட், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கையை சுத்தப்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டன. 


ரூ.20 ஆயிரம் கோடி செலவிட்டும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடந்த 2023ல் அடுத்த 3 ஆண்டுக்கு என மேலும் ரூ.22,500 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.

ஏற்கனவே நடக்கும் திட்டங்களுக்கு ரூ.11,225 கோடியும், புதிய திட்டங்களுக்கு ரூ.11,275 கோடியும் செலவிட முடிவு செய்யப்பட்டது.


 அதன்படி, சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2024-25ம் நிதியாண்டிற்கு கங்கை தூய்மை திட்டத்திற்கு ரூ.3,345.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய பட்ஜெட்டில் ரூ.2,400 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெள்ள நிவாரண நிதியாக ஒரு ரூபாய் கூட ஒதுக்க முன்வராத ஒன்றிய அரசு தோல்வித் திட்டம் என தெரிந்தும் ஆண்டுக்கு ஆண்டு பல ஆயிரம் கோடிகளை கங்கையில் போட்டு வருவது மோடி ஆட்சி எவ்வளவு சீர்கெட்டது என்பதையே மக்களுக்கு உணர்த்துகிறது.


இதுவரை நவமாமி கங்கே திட்டத்தில் 400க்கும் மேற்பட்ட திட்டப்பணிகள் முடிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு கூறுகிறது. இதில் 200க்கும் மேற்பட்டவை கழிவுநீர் உள்கட்டமைப்பு திட்டங்கள். கங்கையில் நேரடியாக கழிவுநீர் கலப்பதை தடுப்பதை இத்திட்டத்தின் முக்கிய பணியாக இருக்கிறது. இது வெற்றி அடையவில்லை. 


பீகாரில் ஒரு நாளைக்கு 1,700 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உற்பத்தியாகும் நிலையில், பாட்னா, பாகல்பூர் தவிர வேறெந்த மாவட்டத்திலும் சுத்திகரிக்கப்படாமலேயே கழிவுநீர் கங்கையில் கலக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு அரசு பணம் வீணடிக்கப்பட்டிருப்பதாக பசுமை தீர்ப்பாயம் கண்டித்துள்ளது. 


மேற்கு வங்கத்தில் 9 மாவட்டங்களில் கங்கை நதி பாயும் நிலையில் எந்த மாவட்டத்திலும் மாசுபாட்டை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், பல ஆயிரம் கோடி செலவழித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் குற்றம்சாட்டி உள்ளது. டெல்லியிலும் கங்கை கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டிக்கிடக்கின்றன.


கடந்த 1986ம் ஆண்டும் அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி கங்கை தூய்மை திட்டத்தை முதல் முறையாக கொண்டு வந்தார். 2000ம் ஆண்டு வரை ரூ.9000 கோடி செலவழித்தும் எந்த நல்ல பலனும் கிடைக்காததால் இது தோல்வி அடைந்த திட்டமாக நிபுணர்கள் அறிக்கை அளித்தனர். 


அதன்பின் அவ்வப்போது கங்கை தூய்மை திட்டத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், 2014ல் பாஜ ஆட்சிக்குப் பிறகுதான் கங்கையை புனித நதியாக குறிப்பிட்டு மீண்டும் தூய்மை திட்டங்கள் தூசி தட்டப்பட்டன.

ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்தும் கங்கை தூய்மையாகவில்லை. 


எனவே உண்மையிலேயே கங்கையை தூய்மை செய்ய அறிவிக்கப்பட்ட நிதிகள் செலவழிக்கப்படுகிறதா அல்லது வேறெங்காவது மடை மாற்றப்படுகிறதா என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆற்றில் போட்ட பணத்துக்கு என்ன கணக்கு இருக்கிறது என பல கோடிகள் சுருட்டப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தேர்தல் பத்திர ஊழல்,பிஎம் கேர் ஊழல் வரிசையில் கங்கை சுத்தம் ஊழலும் தொடர்கிறது.

இயற்கை பேரிடரில். பாதிக்கப் பட்ட தமிழ்நாடுக்கு நிவாரணம் கொடுக்க மட்டும் நிர்மலா,மோடி அரசுக்கு பணம் இல்லை.மனம் இல்லவே இல்லை!

டில்லி வெள்ளத்தில் மூன்று மாணவர்கள் பலி



மத்திய டெல்லி பகுதியில் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. அந்த வகையில், பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் இயங்கி வரும் ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழ் தளத்தில் உள்ள நூலகத்தில் மாணவர்கள் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் வெளியேற முயற்சி செய்வதற்கு முன்னால் வெள்ள நீர் முழுவதுமாக சூழந்துவிட்டதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த பேரிடர் மீட்புப் படையினர், மோட்டர் மூலம் நீரை உறிஞ்சி சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்புப் பணியின் போது, இரண்டு மாணவிகள் உள்பட 3 பேர் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர், அவர்களது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதனை அடுத்து, பயிற்சி மையத்தில் படிக்கும் சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தனியார் பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை கைது செய்து விசாரித்தனர். இதனிடையே, யுபிஎஸ்சி பயிற்சி மையத்தில் வெள்ள நீர் சூழ்ந்தது தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற ராவ் பயிற்சி மைய நிர்வாகம் உயிரிழந்த மாணவர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளது. இது குறித்து நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயிரிழந்த மாணவர்களான தன்யா சோனி, நெவின் டால்வின் மற்றும் ஸ்ரேயா யாதவ் ஆகியோரின் குடும்பத்தினருக்கும், அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காக தயாராகிக் கொண்டிருந்த இந்த மாணவர்களின் இழப்பு எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. மேலும், சம்பவம் தொடர்பான விசாரணைக்கு நிர்வாகம் முழு ஒத்துழைப்பும் அளித்து வருகிறது" எனக் கூறப்பட்டு இருந்தது. இதனிடையே, பயிற்சி மையத்தின் தரைத்தளத்தை டெல்லி மாநகர நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

வாராது வந்த மாமணி நி(ர்மலா)தி


தமிழ்நாடு தொடர்ந்து ஒன்றிய அரசால் புறக்கணிக்கபடுவதற்கும்,வஞ்சிக்க படுவதற்கும் ஒன்றிய நிதியமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் அவர்கள் தான் முக்கிய காரணம்.

மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்த சிறப்பு திட்டம் என்று சொன்னால் அது “மதுரை எய்ம்ஸ்”மட்டுமே அதுவும் 2015ஆம் ஆண்டு மறைந்த பாஜக தலைவர் அருண் ஜெட்லி அவர்கள் ஒன்றிய நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. தற்போது வரை அத்திட்டதிற்கு நிதியும் வரவில்லை.

தன்னை தமிழர் என சொல்லி கொள்ளும் தற்போதைய நிதியமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு கடந்த 7 ஆண்டுகளில் ஒரு திட்டமும்,சிறப்பு நிதி ஒரு பைசாவும் கொடுக்கவில்லை.

தான் ஒரு உயர்ஜாதி பெண் என்பதால் 

தன் தனிப்பட்ட கொள்கைக்கு ஒத்துவராத சமூகநீதி, தந்தை பெரியார், தமிழ்,திராவிடம்,சமத்துவம், சாதி ஒழிப்பு,

மதச்சார்பின்மை போன்ற முற்போக்கு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் பேசுவதால் 

தமிநாட்டின் மீது தனிமனித வன்மம் கொண்டு நிர்மலா சீத்தாராமன் அவர்கள் செயல்படுவது போல் உள்ளது!

பாஜக தலைமையும்,பிரதமர் மோடி அவர்களும் தமிழ்நாடு என்றால் திருமதி நிர்மலா சீத்தாரமன் அவர்களிடம் தான் கருத்து கேட்டு முடிவு செய்கிறார்கள் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனிமனித பகை போல் தமிழ்நாட்டு மக்களையும்,தமிழ்நாட்டு அரசையும் நிர்மலா சீத்தாரமன் அவர்கள் பழி வாங்குவது போல் உள்ளது!!

அதனால்தான் கடந்த 7 ஆண்டுகளில் அதிமுக மற்றும் திமுக அரசு கேட்ட எவ்வித பேரிடர்நிதியையேயும் கொடுக்க மறுக்கிறார்.

சிறப்பு திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி கொடுக்க தொடர்ந்து பிடிவாதமாக மறுக்கிறார் நிர்மலா சீத்தாராமன் !!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?