இரட்டைப் பாலம்
தென்னிந்தியாவின் முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் பெங்களூரில் கட்டப்பட்டது என தவறான தகவல் பரப்பப்படுகிறது .
ஆனால் இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் நெல்லையில் உள்ளது.
⚡திருவள்ளுவர் இரட்டைப் பாலம்⚡
இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான்.
நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க,
எஸ்.என். ஐரோட்டில் இரட்டை அடுக்கு மேம்பாலம் உள்ளது
ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப் பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பை பெற்றது.
1969-ல் இந்த மேம்பாலம் கட்ட கலைஞர் அடிக்கல் நாட்டினார்.
1973-ம் ஆண்டில் ₹.47 லட்சம் செலவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு இந்த மேம்பாலத்தை கலைஞர் திறந்து வைத்தார்.
706 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இப்பாலம் 26 தூண்கள் மேல் நிறுவப்பட்ட சிமெண்டு சிலாபுகளால் ஆனது.
ஒவ்வொரு சிமெண்டு சிலாபும் 31 மீட்டர் நீளமும் 600 டன் எடையும் கொண்டதாகும்.
இந்த பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள், வண்டிகள் செல்லவும், மேல் அடுக்கில் பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் செல்லவும் அனுமதிக்கப்பட்டது.
பாலம் கட்டப்பட்டு 27 ஆண்டுகள் கழித்து 2000-வது ஆண்டில்
₹.1 கோடியே 45 லட்சம் செலவில் இப்பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்துக்காக மீண்டும் திறந்து விடப்பட்டது.
தத்தளிக்கும் கேரளம்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
அந்தி மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 7 பேர் உயிரிழந்ததாகவும், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வயநாடு - முண்டக்காய் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை கனமழையை தொடர்ந்து 2 மணியளவில் முதலில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கூடம் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கும் முகாமாக இருந்துள்ளது.
பள்ளியின் அருகே அமைந்துள்ள வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதிக்கு சென்று வருவதற்கான பாலம் இடிந்து சேதமடைந்துள்ளது. அதனால் சுமார் 400 குடும்பங்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கி உள்ளதாக தெரிகிறது.
போலீஸார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்டவர்களில் 30-க்கும் மேற்பட்டோர் பேர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
.
கனமழை மற்றும் சாலைகள் சேதம் போன்ற காரணத்தால் மீட்பு பணியில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாலைகளை விரைந்து சீர் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவில் ஒரு வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வயநாடு மாவட்டத்தில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ATMமை கொள்ளையடித்த பாஜக. தலலைவர்!
திருப்பூர் மாநகராட்சி ஸ்ரீநகர் முக்கிய வீதியில் துரை என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் (HITACHI) தனியார் ஏ.டி.எம் இயந்திரத்தை கடந்த 20ஆம் தேதி அன்று ஹாலோ பிளாக் கல் கொண்டு உடைத்தும் அதிலிருந்து பணத்தை திருடவும் முயற்சி செய்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, திருப்பூர் அவிநாசி கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (54) என்பவரை கைது செய்தனர்.
இவர் ஹாலோ பிளாக் கல் கொண்டு ரூ.55,000 மதிப்புள்ள இயந்திரத்தை உடைத்து சேதப்படுத்தியும், பணத்தை திருடவும் முயற்சி செய்ததாக இவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட முருகானந்தம் பாஜக கட்சியின் திருப்பூர் மாவட்ட பிரச்சார அணி செயலாளராக உள்ளார் என காவல் துறை விசாரணையில் தெரியவந்தது.
மேலும் 22ஆம் தேதி அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இவரது நடவடிக்கை சரி இல்லை என்கிற காரணத்தால் முருகானந்தம் 23 ம் தேதி கட்சியை விட்டு நீக்கப்பட்டதாகவும் பாஜக தெரிவித்துள்ளது.