வெப்ப அலையால்

 கொதிக்கும்

இந்தியா!

1850 ஆம் ஆண்டு முதல் உலகளவில் வெப்பநிலையின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

2016 ஆம் ஆண்டை விட அதிக வெப்பநிலை பதிவானதால் கடந்த 2023 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக வெப்ப ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

1.5 டிகிரி கூடுதல் வெப்பத்தை நெருங்கிய ஆண்டு

20ம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்ட சராசரி வெப்பநிலையை விட 1.18டிகிரி செல்சியஸ் அதிக மாகவும் 19 ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலை யை விட 1.4டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் 2023 ஆம் ஆண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்திருந்தது. இது2015 ஆம் ஆண்டு உலகின் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பாரீஸ் நகரில் கூடி மேற்கொண்ட ஒப்பந்தப்படி 1.5 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்ப நிலை அளவு அதிகரிக்கக்கூடாது என்ற முடிவை கிட்டத்தட்ட நெருங்கியுள்ளது.


காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகள், 1.5 டிகிரி வெப்ப அதிகரிப்பை கடக்கும் போது மீள  முடியாத அளவிற்கு இருக்கும் என பாரீசில்  நடைபெற்ற காலநிலை மாநாட்டில் எச்சரிக்கப்பட்டது.


2014 முதல் 2024 வரை கடந்த 10 ஆண்டுகளுமே மிக  அதிக வெப்ப ஆண்டுகளாகவே இருந்துள்ளன. அதிக வெப்பமான ஆண்டாக 2023 ஆம் ஆண்டை போலவே 2024 ஆம் ஆண்டும் தொடர்கிறது.

வெப்ப அலை உயிரிழப்புகள்

2024 மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மேற்கு ஆப்பிரிக்கா, சாஹேல், தென் ஆப்பிரிக்கா, வடகிழக்கு அமெரிக்கா ஆகிய நாடுகள் கடுமை யான வெப்பம் மற்றும் வறட்சியினால் பாதிக்கப்பட்டு வருகின்றன.


சில இடங்களில் காடுகள் பற்றி எரி கின்றன. கிரிஸ், இத்தாலி, சவூதி அரேபியா போன்ற  நாடுகளில் 50 டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்ப நிலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரு கின்றன. இந்த ஆண்டின் ஹஜ் பயனம் செய்த சுமார்  1000க்கும் மேற்பட்டோர் வெப்பநிலை தாங்க முடியாமல் உயிரழந்துள்ளனர்.

இந்தியாவும் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்று. இதுவரை வெப்ப பக்கவாதத்தால் 110 உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளன. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது அரசு கொடுத்த அறிக்கை. உண்மை நிலைமை மேலும் அதிகமாக  இருக்கும்.

எல்-நினோ ; ல-நினா

‘எல் நினோ’ என்பதற்கான அர்த்தம் ஸ்பானிய மொழியில் ஆண் குழந்தை என்று பொருள்.


உலகின்  தெற்கு பகுதியில் ஏற்படும் கடல்சார் வெப்பநிலை யும்-வளிமண்டல அழுத்த நிகழ்வும் இணைந்து தான் உலகளாவிய தற்போதைய காலநிலை மாற்றத்திற்கு காரணமாக உள்ளது.

இந்த மாற்றத்தால் விளையும் பாதிப்புகள் (எல் நினோ) சூடான வெப்பநிலைக்கும் ல - நினா (பெண் குழந்தை) குளிர்ச்சியான நிலைக்கும் இடையில் மாறி மாறி வருகிறது.


உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவிலும் தற்போதைய வெப்பநிலை உயர்விற்கு காரணம் என சொல்ல முடியாது எனினும், அதனோடு தொடர்புடையது. இந்தியா உள்ளிட்ட உலகின் தெற்கு பகுதி அதீத வெப்பம், அதீத குளிர், மிதமான சூழல் மூன்றின் கலவையாகவும் உள்ளது. 


இந்த ஆண்டின் மத்தியில் எல் நினோ நிலைகள் நீடித்திருப்பது இந்தியாவில் குறைவான மழைக்கு காரணமாக உள்ளது. வழக்கமான சராசரியுடன் ஒப்பீடும்போது சுமார்20% குறைவான மழை பொழிந்துள்ளது.


தீவிர வெப்பநிலையை புரிந்துகொள்ளுதல்

இந்தியாவில் தீவிர வெப்ப அலை குறித்து கடின மான பொருத்தமற்ற வரையறைகள் முன்வைக்கப்படு கின்றன. வெப்பநிலையின் அளவு 40 டிகிரி அல்லது 45 டிகிரி செல்சியஸ் அளவில் அதிகரிக்கும் போது  அதாவது இயல்பான வெப்பநிலையை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது குறைந்த பட்சம் அது இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.

இது சரியான அறிவிப்பில்லை. தீவிர வெப்பநிலை என்பது வானிலை சார்ந்த நிகழ்வு மட்டுமல்ல; மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களால் உணரப்படுவதைப் பொருத்தும் கணக்கிடப்பட வேண்டும். 


\ஒவ்வொருவரின் உடலின் தன்மைக்கு ஏற்ப பாதிப்புகள் அமையும். சிலரின் உடல் சாதாரண வெப்பநிலைக்கே அதிக எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். சுற்றுப்புறச் சூழலின் ஈரப்பதம், உடலின் தன்மை, ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

சில ருக்கு உடலில் அதிக நீரிழப்பு ஏற்படும். வியர்வை  வேகமாக ஆவியாகும்; அதனால் உடல் குளிர்ச்சி யடையும் தன்மை கடினமாகும்; எனவே உடல் உறுப்புகள் மீது அழுத்தம் ஏற்பட்டு பாதிப்படைந்து மரணம் ஏற்படவும் வாய்ப்புண்டு.


ஈரப்பதத்தின் ஏற்ற இறக்கம்

இந்தியாவில் இந்த ஆண்டு தட்ப வெப்ப நிலை மற்றும் வளிமண்டல நிலைகளின் இணைப்பின் காரணமாக ஈரப்பதத்தின் அளவு குறிப்பிடத்தகுந்த வகையில்  அதிகரித்துள்ளது.


கோடைக்கால துவக்கத்தின் போது அரபிக்கடல் வழியாக அதிக ஈரப்பதம் நிறைந்த காற்று வீசத் துவங்கியது. இதனால்  வெப்பநிலை குறைவாக தெரிந்தது. வங்காள விரிகுடா கடலால் மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநில  பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்தது வெப்ப அலைகள்  வலுவிழந்தது.


இந்தியாவின் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதி, மத்திய தரைக்கடல் பகுதியால் சில தடைகள் ஏற்பட்டது. எனவே அதிக வெப்பத்தைத் தாங்க கூடுதல் ஈரப்பதம் தேவைப்பட்டது.


பல நாடுகளில் வெப்பக்குறியீட்டை, வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை ஒன்றிணைத்து சம அளவில் ஒரு குறிப்பிட்ட எண்களில் கணக்கீடு செய்கின்றனர். ஒரு வெப்பநிலை அட்டவணை, குறிப்பிட்ட ஈரப்ப தத்தில் - வெப்பநிலை வெவ்வேறு வகையில் உண ரப்படுவதைக் காட்டுகிறது.


இந்த ஆண்டு மார்ச், ஏப்ரலில் சென்னை நகரம் தில்லியை விட அதிக  வெப்பத்தை கொண்டிருந்தது; ஆனால் அதிகளவில்  உணரப்படவில்லை. காரணம், சென்னை கடலோரப்பகுதி காற்றில் ஈரப்பதம் அதிகம், ஆனால் தில்லி உள்ளிட்ட பல நகரங்கள் அந்த சூழ்நிலை யில் இல்லை; எனவே தான் கூடுதல் வெப்பம் உண ரப்படுகிறது. இதையும் கணக்கில் கொள்ள வேண்டும். எனவே வெப்ப அலை வீசும் போது   இயல்பான வெப்பநிலை கூட அதிகம் உணரப்படும்.

தற்போது இந்தியாவின் பலப்பகுதியில்  குறைந்தப் பட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் அளவிலும் அதிகப்பட்ச வெப்பநிலை 40-50 டிகிரி செல்சியஸ் அளவில் வெளிப்பட்டுள்ளது. குறைந்தபட்ச வெப்ப நிலை கூட பகலில் உடலை இயல்பாக வைத்திருக்க அனுமதிக்க மறுக்கிறது.

இந்த நிலை உடல் உறுப்பிற்கு ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது.


நகர வெப்பத் தீவுகள்

நகரப்பகுதிகள் கூடுதலான சில பிரச்சனைகளை யும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளையும் கொண்டுள்ளது.


கிராமப்புறங்களை விட நகர்ப்புறத்தில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகம் கொண்டுள் ளன. இதற்கு “நகர வெப்பத்தீவுகள்” என்று பெயர். இதற்கு முக்கிய காரணம், கிராமங்களை விட நக ரங்களில் காங்கீரிட் கட்டிடங்கள், தார்ச்சலைகள் அதி கம். இவை பகலில் வெப்பத்தை உள்வாங்கி இரவில் வெளியிடுகின்றன.


உயரமான கட்டிங்கள் மற்றும் நெரி சலான பகுதிகள் காற்றின் இயக்கத்தை தடுக்கின் றன. காற்று மாசுபாடு நகர்ப்புறங்களை ஒரு வகை யான வெப்ப குமிழியில் உள்ளது போல் உணர வைக்கின்றன. திட்டமிடப்படாத நகர்ப்புற மேம்பாடு மற்றும் பசுமைப் படலத்திற்கான பற்றாக்குறை காரணமாக பிரச்சனை மேலும் மோசமடைகிறது.

பசுமையை அதிகரிப்பது மிக அவசியம்

தாவரங்கள் ஈரப்பதத்தை வெளிப்படுத்துகின்றன.


இதனால் குளிர்ச்சியான சூழலுக்கு பங்களிக்கின் றன. அதே நேரத்தில் கார்பன் டை ஆக்சையும் உறிஞ்சு கின்றன. சுமார் 20% பசுமையை அதிகரிப்பதன் மூலம் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அளவை குறைக்கலாம்.


நீர் நிலைகள் குறைந்திருப்ப தும் வெப்பநிலை உயர்விற்கு ஒரு முக்கியகாரணம். 


தேவையற்ற வெப்ப வெளியேற்றம் ‘நகர வெப்பத்தீவுகள்’ உருவாக்கத்திற்கு கூடுதல் பங்களிப்பைச் செய்கிறது. உதாரணமாக குளிர்சாத னப்பெட்டி, தனி நபர்களின் வாகனங்கள் உள்ளிட்ட சிலவற்றால் நகர்ப்புறத்தின் சூழ்நிலை மேலும் மோசமடைகிறது.


நகரப்பகுதியில் சுமார் 50% மின்சாரம், குளிர்சாதனப்பெட்டி பயன்பாட்டிற்கே செலவிடப்படுகிறது. வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு, குளிர்சாதனப்பெட்டியை 26 செல்சியஸ் அளவில் பயன்படுத்த வேண்டுமென்ற கட்டுப்பாட்டை கட்டாயமாக்குவதன் மூலம் 1.5 முதல் 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உமிழ்வை குறைக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணி. பெண்கள் மற்றும் ஏற்கனவே உள்ள நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெப்பம் தொடர்பான நோய்களுக்கு எளிதாக பாதிக்கப்படுவார்கள்.


பொது சுகாதார அமைப்புகள் மேற்குறிப்பிட்டுள்ளவர்களின் நலனில் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். வீட்டிற்குள் பாதுகாப்பாக இருத்தல், உடல் ரீதியான கடுமையான பணிகளைத் தவிர்த்தல், தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்ளுதல் போன்ற வழிகாட்டு தல்கள் ஏற்கனவே அவர்களுக்கு  அறிவுறுத்தப் பட்டிற்கும்.


பள்ளிகள் விடுமுறை விடுவதன் மூலம் மாணவர்களுக்கான பாதிப்பை தவிர்க்கலாம்.

கட்டுமான தொழிலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், நடைபாதைக் கடை, தெருவோர வியாபாரிகள், சுமைப்பணித் தொழிலாளிகள், தபால் பணிகள் செய்பவர்கள், அமைப்பு சாரா தொழி லாளிகள் உள்ளிட்ட - வெட்ட வெளியில் வேலை  செய்பவர்கள், ஆதரவற்றவர்கள், ஊனமுற்றவர்கள், வீடு இல்லாதவர்கள் ஆகியோர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.


இவர்களை பாதுகாக்க சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மிகவும் பலவீன மாகவும் ஒழுங்கற்றதாகவும் உள்ளன.


வெப்ப அலைகளை தவிர்க்கும் பொருட்டு தேசிய  பேரிடர் மேலாண்மை மையம் சில வழிகாட்டுதல் களை வெளியிட்டுள்ளது. இது ஒவ்வொரு மாநி லத்திற்கும் வேறுபடலாம். உதாரணமாக கட்டுமானத் தொழிலாளிகளுக்கு பிற்பகல் 12மணி முதல் 4மணி வரை இடைவெளி வழங்க வேண்டுமென வெப்ப  செயல் திட்டம் பரிந்துரை செய்கிறது.


அவர்களுக் க்கான குடிநீர் வசதி, காற்று வசதியுடனான தங்கும் ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டும். இதனை கட்டாயமாக்காமல் இருப்பதும் சில அதிகாரிகள் அல்லது ஏஜென்சிகள் மீது மட்டும் பொறுப்பை  சுமத்துவது மட்டும் நிகழ்ந்தால் இத்திட்டம் பயனுள்ளதாக இருக்காது.


அதீத வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள முதன்மையான நடவடிக்கை அரசிடமிருந்து துவங்க வேண்டும். சுகாதாரக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற அழுத்தத்தை அரசிற்கு கொடுக்க வேண்டும். வெப்ப அலை பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்படும் பரிந்துரைகள் சரியான முறையில் பின்பற்றப்பட வலியுறுத்த வேண்டும்.


தொழிற்சங்கங்கள், வெகு மக்கள் அமைப்புகள், அமைப்பு சாரா தொழி லாளர்களுடன் பணிபுரிபவர்கள்,மக்கள் அறிவியல் இயக்கங்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து, பாதிக்கப் படக் கூடிய மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், முறை யான வழிகாட்டுதல்களை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.


குறிப்பாக நகர்புறங்களில் தொடர்ந்து உயரும் வெப்பநிலை அளவை குறைக்க சாத்தியமான அனைத்து வழி களையும் மேற்கொள்வது அவசிய தேவையாகும்.


பீப்பிள்ஸ் டெமாக்ரசி- தமிழில்: மோசஸ் பிரபு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?