பாசிச கட்டுமான கலைஞன்?
"சட்டப் பள்ளி மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டால் நிரந்தர நீக்கம்."

சீா்மிகு சட்டப் பள்ளியில் பயிலும் மாணவா்கள் சிலா் அடிக்கடி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், அவா்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கடுமையாக்கவும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் முடிவு செய்து உள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் முதல்வா் வே.பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் சீா்மிகு சட்டப் பள்ளி, சட்டக் கல்வியின் தரத்திலும், மாணவா்கள் வருங்கால வழக்குரைஞா்களாகவும், நீதிபதிகளாகவும் மற்றும் பிற உயரிய பதவிகள் வகிப்பவா்களாகவும் உருவாக்கி வருகிறது.

தேசிய அளவில் இயங்கி வரும் சட்டப் பள்ளிகளுக்கு இடையே இந்த சட்டப் பல்கலைக்கழகம் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில மாணவா்கள் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் சக மாணவா்கள் மீது உடல் ரீதியான தாக்குதலில் ஈடுபடுவதும், தங்களுக்குள்ளே தாக்கி கொள்வதும், வெளியில் இருந்து வருபவா்களை தாக்குவதும் நடந்து வருகிறது.

இது சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதற்கு சமம். சட்டப் பல்கலைக்கழகம் என்ற முறையில் இந்த செயல்பாடுகள் ஏற்கத்தக்கதல்ல.

இதுவரை இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவா்கள் தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டு வந்தனா்.

ஆனால், இனிமேல் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் மாணவா்கள் தோ்வு எழுதுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவ தோடு, சட்டப் பள்ளியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவா்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்களவையும்,

முதலாளித்துவ பாசிசமும்

2014 இல்  தேசிய அரசிய லில் மோடி எழுச்சி பெற்ற போது, அக மதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் எச்சிபி (HCP) நிறுவனத்தின் தலை வர், கட்டட வடிவமைப்பாளர் பிமல் பட்டேலும்(63) தேச அளவில் வளர்ச்சி பெற்றார்.


பிமல்பட்டேல் மோடியின் நீண்ட காலக் கூட்டாளி. மோடியின் குஜராத் மாடல் திட்டங்களை, குறிப்பாக சபர்மதி நதிக்கரைத் திட்டத்தை செயல்படுத்தியவர்.

அவரது தந்தை ஹஸ்முக் சி பட்டேல். இவரும் ஒரு கட்டட வடிவமைப்பாளர் தான். அகமதாபாத்தை அடுத்த உஸ்மான்புரத்தில் தலைமை அலுவலகத்தை ஆரம்பித்தார். அவரது பெயரின் முதல் எழுத்துக்கள் தான் எச்சிபி(HCP) என்பதாகும்.

மோடி தில்லிக்கு வந்த பின்னர் மோடியின் தில்லி மறு நிர்மாணத் திட்டங்களை முன்ன ணியில் இருந்து செயல்படுத்தினார். சர்ச்சைக் குரிய நாடாளுமன்ற சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை நிறைவேற்றியவர். அவரது கார்ப்ப ரேட் கட்டுமான வடிவமைப்புகள், பொது சமூ கத்தின் கருத்துக்கள், ஆலோசனைகள், பங்க ளிப்பை புறந்தள்ளி   முரட்டுத்தனமாக செயல் படுத்திய விதம்  ஆகியவற்றால் அவர் மீது பல் வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.


மோடியின் திருத்தல்வாத திட்டங்களுக்கு அவர் செய்தித் தொடர்பாளராகச் செயல்படு கிறார்.அமெரிக்காவில் பொறியியல் பட்டம் பெற்றவர். எனினும் பிரதமரின் ஆர்எஸ்எஸ் அரசியல்- கலாச்சாரத் திட்டங்களை செயல் படுத்தும் மோடியுடன் இணைந்து கொண்டு அவர் எந்த மாதிரியான கட்டடக்கலை பாணி யை பிரதிபலிக்கிறார் என்பது சர்ச்சைக் குரியதாகவே உள்ளது.


குஜராத் கட்டடக் கூட்டாளி

மோடி 12 ஆண்டு காலம் குஜராத் முதல்வ ராக இருந்தபோது அவருடன் பட்டேலுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

மோடியின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் மோடிக்கு விருப்பமான நிறுவனமாக அவரது எச்சிபி தான் இருந்தது. பட்டேல் நிறை வேற்றிய சபர்மதி நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்தை தனது மாடலாகக் காட்டித்தான் தில்லி அதிகாரத்திற்கு அச்சாரம் போட்டார் மோடி. இது போக பாலங்கள், பூங்காக்கள், அரசுக் கல்வி நிறுவனங்கள், நகராட்சி அலு வலகங்கள் ,காந்திநகர் விஸ்டா, குஜராத் தலைமைச் செயலகம் என பல்வேறு மெகா திட்டங்களை பட்டேல் தான் மேற்கொண்டார்.


2014 இல் வாரணாசியில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ததும் புராதன நகரை வளர்ச்சி வரைபடத்தில் சேர்ப்பேன். சபர்மதி போன்று கங்கை திட்டத்தை யும் நிறைவேற்றுவேன் என்றார். நான்கு ஆண்டுகள் கழித்து கங்கை மேம்பாட்டுத் திட்டமும் பட்டேலிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.


மும்பை பூனா அருகில் உள்ள முழா- முத்தா ஆறுகள் புத்துயிர்ப்புத் திட்டம், டாமன்  கடற்கரைத் திட்டம், சபர்மதி ஆசிரமம் மறுவடிவமைப்பு, ,அகமதாபாத் பெருநகரத் திட்டம்,குஜராத் சர்வதேச நிதி நிறுவன -தொழில் நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகம் என பெருந் திட்டங்கள் எல்லாம் பிமல் பட்டேலிடம்  ஒப்படைக்கப்பட்டன.


இந்திய அரசு, குஜராத் மாநில அரசு கோரும் அனைத்து மெகா திட் டங்களுக்கான டெண்டர்களிலும் தவறாமல் பட்டேலின் எச்சிபி  நிறுவனம் கலந்து கொண்டு வேலை உத்தரவுகளையும் பெற்றது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 2023 இல் வெளி யிட்ட 100 வலிமையான இந்தியர்கள் பெயர்ப் பட்டியலில் பிமல் பட்டேலும் இருந்தார். மோடி யின் புதிய இந்தியாவை வடிவமைப்பவராக அறியப்படுகிறார் .


கடந்த 2023 மே துவக்கத்தில் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைத்தார். இது ,பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் அருகில் முக்கோண வடிவில் சிவப்பு வெள்ளை மணற் கற்களால்(sandstone) கட்டப்பட்டுள் ளது. வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர் உடை அணிந்திருந்த மோடி, பூஜை நடத்தி காவி உடை தரித்த துறவிகளின் காலில் சாஷ்டாங் கமாக விழுந்து கையில் செங்கோலை ஏந்தி தாமரை வடிவில் அமைந்த மக்களவையின் சேம்பரில் துறவிகள் பின்தொடர மெதுவாக நடந்து சென்று சபாநாயகரின் இருக்கை அருகே செங்கோலை நிறுவினார்.


சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று திறந்து வைக்கப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டடத் தில் ஆர்எஸ்எஸ்சின் இந்துத்துவா கட்டுக் கதையான அகண்ட பாரத சுவர்ச் சித்திரம் இருந்தது. மோடி தனது 45 நிமிட உரையில் இது நாட்டின் பொன்னான தருணம் என்றார். அதற்கு முந்தைய நாள் தான் 19 எதிர்க்கட்சி கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ஆன்மா சாகடிக்கப்பட்ட பிறகு புதிய கட்டடத்திற்கு மதிப் பொன்றும் கிடையாது; குடியரசுத் தலைவரை அழைக்காததன் மூலம் அரசமைப்புச் சட்ட மீறல்களைச் சுட்டிக் காட்டி நாடாளுமன்றத் திறப்பு விழாவை  புறக்கணிப்பதாக அறி வித்திருந்தன.


புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் குடி யரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், எதிர்க்கட்சிகள் எவரும் இல்லை. நாடாளுமன் றன்றத்திற்கு வெளியே பாலியல் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த ஒலிம்பிக் சாதனையாளர்கள் போராடிக் கொண்டிருந்தனர். 


வரலாற்றைத் திருத்தி அமைப்பதே சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் நோக்கம்

2019-இல் பிமல் பட்டேலின் எச்சிபி நிறு வனம் சென்ட்ரல் விஸ்டா மறுநிர்மானத் திட்டத்திற்கு வடிவமைப்பு வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.


தில்லி கட்டுமான நிறு வனத்தின் தலைவரான அருண் ரேவல் என்பவர் மோடி தில்லியில் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்ற நீண்ட காலமாக திட்ட மிட்டிருந்தார் என்கிறார்.

முந்தைய ஐ.மு.கூட்டணி அரசு தில்லியின் சில பகுதிகள் மற்றும் சென்ட்ரல் விஸ்டா பகுதி களை உலக  பாரம்பரியத் தளங்கள் பட்டியலில் சேர்க்குமாறு ஐ.நா.விடம் விண்ணப்பித்தி ருந்தது.


2015 இல் இந்த விண்ணப்பத்தை மோடி அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இது பற்றிய விவரங்களை பொது மக்களுக்கு தெரி விக்கவில்லை. மோடி அனைத்தையும் மாற்றியமைக்க திட்டம் தீட்டினார்.பிமல் பட்டேல் அதை ஊக்கத்துடன் நிறைவேற்றினார்.


சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் வரலாற்றுச் சிறப்பும், அழகியல் தன்மையும் நிறைந்த 11 கட்டடங்களை மாற்றி அமைக்க/ இடித்துத் தள்ள திட்டமிடப்பட்டது. தேசிய அருங்காட்சிய கம், இந்திராகாந்தி கலைகள் மையம், குடியரசு துணைத் தலைவர் மாளிகை,கிருஷி பவன், விஞ்ஞான் பவன், சாஸ்திரி பவன், ஜவகர்லால் நேரு பவன், நிர்மான் பவன், உத்யோக் பவன், ரக்க்ஷா பவன், தேசிய ஆவ ணக் காப்பகம், லோக் கல்யாண் மார்க் ஆகிய கட்டடங்கள் இடிக்கப்பட வேண்டிய கட்டடங்கள் பட்டியலில் இருந்தன.


மோடியின் ஆர்எஸ்எஸ் திருத்தல்வாத திட்டங்கள் முந்தைய அரசுகள் விட்டுச் சென்ற தடத்தை துடைத்தெறிவதாகவும், தன்னை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் உள்ளன. மோடியின் அரசியல் கருத்தியல் திட்டங்க ளுக்கு உருவம் கொடுக்கும்  பிரதான கட்டடக் கலைஞராக பிமல் பட்டேல் இருக்கிறார்.


காலத்தைக் கடந்து நிற்குமா  பிமல் பட்டேலின் கட்டடங்கள்

கட்டடக்கலைத் துறையில் உள்ள பட்டே லின் சக நண்பர்கள், பாரம்பரிய வரலாற்றிடப் பாதுகாவலர்கள், அறிஞர்கள் பிமல் பட்டேல் மீது கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர்.பிமல் பட்டேலின் திட்டங்கள் அனைத்தும் பாரம்பரியச் சின்னங்களை இடித்து தரை மட்டமாக்குவதையும், ஏழைகளை கூண்டோடு அப்புறப்படுத்துவதாகவுமே (சபர்மதி நதிக்க ரைத் திட்டம்)உள்ளன என்கின்றனர்.

அவரது கட்டுமானத் திட்டங்கள் செயலாக்கத்தில் வெளிப்படைத் தன்மையோ ,பொதுமக்களின் பங்கேற்போ அறவே இல்லை என்கின்றனர். 


நியூஸ்லாண்டரி இதழில் அல்பனா கிஷோர் என்னும் நகர்ப்புற செயல்பாட்டாளர்  சென்ட்ரல் விஸ்டா திட்டம் மக்கள் எளிதில் அணுக முடி யாதது, சுழலியல் ரீதியாக நிலைப்புத் தன்மை யற்றது, மக்களை மையப்படுத்தியதாக இல்லா மல் அதிகார மையத்துவம் கொண்டது எனக் குற்றம் சாட்டுகிறார்.

இத்திட்டத்திற்கு பிமல் பட்டேல் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

மோடியின் அளவுகோல்களின்படி பட்டேல் தான் இதற்குப் பொருத்தமானவர்.


அவரது அரசியல் கருத்துகளுக்கு  தோதானவர். வலதுசாரிகளின் விசுவாசி. அவர்களின் திட்டங்களை செயல்படுத்துவதற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளி என்கிறார் அல்பனா கிஷோர்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயல்படுத்த பிமல் பட்டேலின் எச்சிபி நிறுவனம் தேர்வான வுடன், “ நாம் ( இந்தியர்கள்)யார்? நாம்  எங்கே செல்கிறோம் , என்பதை புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதிபலிக்கும்” என்றார்.மோடியின் திட்டம் தனது ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை மிகத் துரிதமாக செய்து முடிப்பது.


மோடியின் தேசிய அரசியலுக்கு நுழைவதற்கான வாயிலாக 2012இல்  சபர்மதி திட்டத்தை நிறைவேற்றினார். காசி விசுவநாதர் கோயில் நடைக்கூடத்தை 2021இல் தொடங்கி  உ.பி. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக நான்கே மாதத்தில் முடித்தார். 2024 நாடாளு மன்ற தேர்தலுக்கு முன்பாக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை முடித்தார்.


இந்த வேகத்திற் கான தேர்வு பட்டேல். இவரது நிறுவனம் மோடியின் நிகழ்ச்சி நிரலை மரண வேகத்தில் நிறைவேற்றுகிறது.

இப்படி பணிகளை சடுதியாக நிறைவேற்று வதற்கான பட்டேலின் உத்தி கான்கிரீட் தான். பட்டேலுடன் படித்த மாணவர் ஒருவர்” அவரது கட்டடப் பாணியை பாருங்கள்.


ஒரே கான்கிரீட் கடல் தான்” என்கிறார்.அவரது கட்டுமானப் பணிகள் பச்சோந்தித் தனமானது; சந்தர்ப்பவாதமானது; நிலைப்புத் தன்மையற்றது என்றும் குற்றம் சாட்டுகிறார். இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்து கான்கிரீட் தான் அதிகப்படியாக ஆக்கிரமித்துள் ளது என்று சூழலியலாளர்கள் கவலைப்படு கின்றனர். கான்கிரீட் வெப்பத்தை உறிஞ்சும். மரங்களை வளர விடாது.


கான்கிரீட் கொட்டப் பட்டால் நீர் தேங்குவது அதிகரிக்கும்.

அவரது கட்டுமானப் பணிகள் பச்சோந்தித் தனமானது; சந்தர்ப்பவாதமானது; நிலைப்புத் தன்மையற்றது என்றும் குற்றம் சாட்டுகிறார். இப்போது பூமியில் தண்ணீருக்கு அடுத்து கான்கிரீட் தான் அதிகப்படியாக ஆக்கிரமித்துள் ளது என்று சூழலியலாளர்கள் கவலைப்படு கின்றனர். கான்கிரீட் வெப்பத்தை உறிஞ்சும். மரங்களை வளர விடாது.


கான்கிரீட் கொட்டப் பட்டால் நீர் தேங்குவது அதிகரிக்கும்.

அகமதாபாத் கட்டடப் பொறியாளர் ரியாஸ் தயீப்ஜி பட்டேல் என்பவர் பிமல் பட்டேலின் கட்டுமானங்கள் மக்களை நெருங்க விடாத தூய்மை வாதத்தைக் கொண்டுள்ளது.


அவரது திட்டங்கள் பொது இடங்கள் இல்லாத அகமதா பாத் நகரை மேலும் மோசமாக்கி விட்டது என்கி றார். தில்லியில் உள்ள தேசியக் கலைகள் மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறு வனத்தின் தலைவர் ஏ.ஜி.கே மேனன் என்பவர் பிமல் பட்டேலின் கட்டுமானங்கள் கார்ப்பரேட் சந்தைமயம் சார்ந்தது. அவர் நவீன தாராளமய திட்டவியலாளர் என்கிறார்.


கட்டடக்கலையில் பன்முகத்தன்மையை,  தேசத்தின் பங்களிப்பை  ஊக்குவித்த  நேரு

நாடு விடுதலை பெற்றதும் நாட்டின் தலை நகரில் புதிதாகக் கட்டடங்களை எழுப்ப நேரு  கட்டட வடிவமைப்பாளர்களையும், பொறியா ளர்களையும் நாடெங்கும் தேடினார். தேசத்திற்கு  அழைப்பு விடுத்தார். ஹபீப் ரஹ்மான், அச்கியூட் கன்விண்டே, ஜேகே.சவுத்ரி,சார்லஸ் கோரியா ,குல்தீப் சிங், ராஜ் ரேவால் போன்றவர்களுடன் மற்றவர்களும் புதிய தலைநகரை உருவாக்குவதில் தங்க ளது பங்களிப்பை நல்கினர். தேசத்தை நிர்மா ணிக்கும் பணியில் ஊக்கத்துடன் செயல்பட்ட னர்.


கட்டுமானப் பணிகளின் அடிநாதமாக நேருவின் தேசிய ,சோசலிசக் கொள்கைகள் இருந்தன. கட்டடக்கலையும், நகரமயமாதலும் நவீன மயமாக்கத்தில் மிக முக்கியமானது என்று கருதினார்.

ஆங்கிலேயக் காலனி அரசின் தலைநகர மாக இருந்த தில்லியை பொதுமக்கள் தாரா ளமாக பயன்படுத்தும் நகரமாக்கத் திட்ட மிடப்பட்டது. கல்வி- கலாச்சார நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கூட்ட அரங்குகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங் கள், நினைவாலயங்கள் அருங்காட்சியகங்கள் ஆகியவை கட்டப்பட்டன.


அடுத்த 20 ஆண்டுகளில் தில்லியின் பெருமைமிக்க நவீன கட்டடங்களான லலித்கலா அகாடமி, பல்கலைக்கழக மானியக் குழு ஆணையம், ஐஐடி, இந்திய சர்வதேச மையம், அசோகா ஓட்டல் ஆகியன உருவாக்கப்பட்டன.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்வேறு கட்டடக்கலைப் பாரம்பரியம் கொண்டவர்கள் இணைந்து இவற்றையெல்லாம் உருவாக்கி னார். லே கொர்பூசியரின் கட்டிடக்கலை பாரம்ப ரியம், அமெரிக்கா கட்டிடக்கலை பாரம்பரியம், இந்தியக் கட்டிடக்கலை பாரம்பரியம் இணைந்து அழகியல் தன்மையோடு கட்ட டங்கள் கட்டப்பட்டன.


நாடு பிரிவினையின் போது லட்சக்கணக் கில் அகதிகளாக வந்தவர்களுக்கு குடியிருப்பு தேவை நெருக்கடி ஏற்பட்டது. 1953 இல் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் மேற் கொள்ளப்பட உலகம் முழுவதிலிருந்தும் கட்டட வடிவமைப்பாளர்களும், பொறியாளர்க ளும் தேவை என்றார் நேரு. இதற்காக கருத்த ரங்குகள் மாநாடுகள் நடத்தப்பட்டன.


நாடு  முழுவதும் ஆலோசனைகள் வரவேற்கப் பட்டன. பின்னர் ஆர்.கே.புரத்தில் குறைந்த செலவில் வீடுகள் கட்டப்பட்டன. மக்களுக்கான அவசரத் தேவையை நிறைவேற்ற திட்டமிடப் பட்டது. மேற்குலகை அதிகமாகச் சார்ந்து இருக்காமல் பொருத்தமான கட்டடக்கலை உடன்- அதே நேரத்தில் அழகியல் தன்மை யுடன் கட்டடங்கள் கட்டப்பட்டன. முன்னோர்க ளின் கட்டடக்கலை மட்டுமல்ல, அது வெளிச்சம், காற்று, நீர், நிலம், மனிதர்கள் ஆகியவற்றின் அதிகபட்ச பயன்பாடு கூடவே அழகியல்தன்மை என அனைத்தையும் உள்ளடக்கியதாக விடுதலை இந்தியாவில் கட்டடக்கலை வளர்ந்தது.


அப்போதுதான் விடுதலை பெற்ற இந்தியா வில் நம்மை அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் கட்டிய நாடாளுமன்றத்தை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. அதன் கட்டுமானத் தின் தரம், அதற்கான செலவினம் இவற்றை யெல்லாம் கருத்தில் கொண்டு,தேவையான மாற்றங்களுடன் அதை தொடர்ந்து பயன் படுத்திக்  கொள்வது என்று முடிவானது.இதோடு கூடவே சோதனை முயற்சிகளும் மேற்கொள் ளப்பட்டன.


சர்வதேச கட்டிட வடிவமைப்பாளர்கள் சார்லஸ், எட்வர்ட் ஜென்னர்ட் திட்டமிடலில் சண்டிகர் தலைநகரம் உருவாக்கப்பட்டது

இன்று மோடியின் அரசு   எல்லாவற்றையும் இடித்து  தரைமட்டமாக்குவதையும், அன்று நேருவின் அரசு சென்ட்ரல் விஸ்டாவை ஏற்றுக்கொண்டு புதுப்பித்தல் பணிகளை மட்டுமே மேற்கொண்டதையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.


குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தியக் குடியரசின் சின்னங்கள் பொருத்தப் பட்டன. ஆங்கிலேயரின் பொருட்கள் அகற்றப் பட்டு இந்தியச் சிற்பங்கள், வளைவுகள், திரைச் சீலைகள் ,மேசைகள், விரிப்புகள் ஆகிய வற்றுடன் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இடித்துத் தரைமட்டமாக்கும்  புல்டோசர் பாஜக தலிபான்கள்

பிரகதி மைதானத்தில் விடுதலை வெள்ளி விழா நினைவாக” ஹால் ஆப் நேஷன்ஸ் “ கட்டப்பட்டது.இந்திய கட்டடக்கலை, நவீனம் கைவினைத் திறனுடனும் அது கம்பி இல்லாத ஆர்.சி. கான்கிரீட் மட்டுமே பயன்படுத்தி கட்டப் பட்டது.


இது கட்டடக்கலையில் ஒரு புதுமை.விடு தலை இந்தியாவின் கட்டடக்கலை சாட்சியம்.

உலக பாரம்பரியச் சின்ன பாதுகாவலர்க ளின் கடும் எதிர்ப்பையும் மீறி மோடி அரசு இந்தக் கட்டடத்தை ஜி20 மாநாடு நடத்துவ தற்காக  இடித்து தள்ளியது. 50 ஏக்கரில் 2,00,700 கோடியில் கட்டப்பட்ட இந்த புதிய பாரத் மண்டபக் கட்டடத்தை மோடி 2023 இல் துவக்கி ஜி 20 மாநாட்டை நடத்தினார்.


அடுத்து தீன் மூர்த்தி வளாகத்தில் உள்ள நேரு அருங்காட்சியகம், நேரு நினைவு நூல கத்தின் மீது கை வைத்தார்.இதுதான் நேரு வாழ்ந்த இடம். இது போதாதா மோடி அரசுக்கு! நூலகத்தை பிரதம மந்திரி சங்கராலயம் என்று பெயர் மாற்றினார். இப்போது இரண்டு லட்சம் அருங்காட்சியக பொருள்கள் கால்மாடு, தலை மாடாக  மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.


ஆர்எஸ்எஸ் குணத்தின்படி வெளிப்படைத் தன்மையற்றுச் செயல்படும் மோடியின் அரசு

பெயர் மாற்றம், புதிய கட்டடம், கட்டட வடிவ மைப்பு, கட்டடங்களை இடித்தல் எல்லாமே மோடியின் ஆட்சியில் மூடு மந்திரம் தான். சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்பது புதிய நாடாளு மன்றக் கட்டடம், புதிய அருங்காட்சியகம், தேசிய ஆவண காப்பகம், தலைமைச் செயலகம் ,பிரதமர் மற்றும்  குடியரசு துணைத் தலைவர் இல்லங்கள் மற்றும் ராஜபாதை ஆகிய மெகா திட்டங்களை நிலநடுக்கத்திற்கு இலக்காகும் மண்டலத்தில், முழுமையான ஆய்வின்றி அசுரவேகத்தில் ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது.


ஐ.ஐ.டி.யில் படித்த கட்டட வடிவமைப்பாளர் கள் இன்னும் பல்வேறு அறிஞர்கள் இது குறித்து கவலை தெரிவிக்கின்றனர். சென்ட்ரல் விஸ்டா போன்ற மெகா திட்டத்திற்கு முதலில் வடிவமைப்பு போட்டி நடத்த வேண்டும். ஒரு  தனிப்பட்ட நிறுவனத்திடம் மட்டுமே கட்டட வடிவமைப்பு, கட்டுமானத்தை ஒப்படைப்பது சரி அல்ல என்று 18 கட்டட வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், அறிஞர்கள் வீடு மற்றும் நகர்ப் புறத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் மனு கொடுத்தனர். அதற்குப் பதில் இல்லை.


மோடி அரசின் சென்ட்ரல் விஸ்டா கட்டுமா னத் திட்ட ரகசியத்தை அறிந்தவர் மட்டுமே டெண்டரில் கலந்து கொள்ளுமாறு விதிமுறை கள் திருத்தம் செய்யப்பட்டன. போட்டியில் பங்கு  கொள்ளும் நிறுவனம் ஏற்கனவே ஒன்றிய அர சின் திட்டத்தை 250 கோடிக்கு குறையாமல் நிறைவேற்றி இருக்க வேண்டும். 50 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றெல் லாம் விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன.


டெண்டர் அறிவித்த ஒரு மாதத்தில் (அக்டோ பர் 18) எச்சிபி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்திற்கு கட்டுமானக் கூலியாக 300 கோடி ரூபாய்  வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.


கொரோனா பேரிடர் காலத்தில் நாடே அடங்கிக் கிடந்த போது புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு டெண்டர் முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்ததாரரை தேர்வு செய்வதற்கான 12 பேர் கொண்ட குழுவில் ஐஐடியில் படித்த கட்டட வடிவமைப்பாளர்கள், நகர வடிவமைப்பா ளர்கள், சூழலியலாளர்கள்  என்று எவரும் இல்லை.எந்த விவாதமும் நடக்கவில்லை.


மக்களை அந்நியப்படுத்துதல் - விடுதலை பாரம்பரியத்தை அறுத்தெறிதல்

கூட்ட நடவடிக்கைகள் பதிவேட்டில் எந்தப் பதிவும் இல்லை.  இடிக்கப்பட உள்ள கட்டிடங்கள் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை.


நாட்டின் சொத்துக்களின் உரிமையாளர்க ளான குடிமக்களுக்கு எந்த விபரமும் தெரி விக்கப்படவில்லை.

ஏ .ஜி .கே மேனன் போன்ற பல்வேறு நிபு ணர்களும் அரசுக்கும் பட்டேலுக்கும் சென்ட்ரல்  விஸ்டா திட்டத்தில் எதையும் எதிர்பார்க்காமல் ஒத்துழைக்கிறோம் என்ற அறிவித்தனர். அவர்களது எதிர்பார்ப்பு பொய்யானது.


கருத்த ரங்குகளும், கூட்டங்களும், கடிதங்களும் அரசை அசைக்கவில்லை.  மோடி அரசு ராணுவ ரகசியம் போல் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை முன்னெடுத்தது.

சென்ட்ரல் விஸ்டா திட்டக்  கட்டுமானங்கள் அனைத்தும் கார்ப்பரேட் தலைமையகம் போல, மூடப்பட்ட அரங்குகளும், பாதுகாப்பு ஏற்பாடு களும், மக்கள் அந்நியப்படுத்தப்பட்டு, விடு தலை பாரம்பரியம் அறுத்தெறியப்பட்டதாக உள்ளது.


பிமல் பட்டேலின் குஜராத் மாடல் திட்டங்கள்- அது பேருந்து நிலையம், பூங்கா கூட பொதுமக்களை நெருங்க விடாத மாட லாகவே உள்ளன.  பிமல் பட்டேல்உருவாக்கிய சபர்மதி நதிக்கரைத் திட்டம் சுற்றுச் சூழலை நாசமாக்கி விட்டது. சபர்மதி அரபிக் கடல் சேர்வ தற்கு முன்பாக 20 கிலோ மீட்டர் தூரம் தொழிற் சாலைக் கழிவுகளையும், சாக்கடைகளையும் சுமந்து கொண்டு தேங்கிய குட்டையாகவே மாறிவிட்டது.சபர்மதிக்கு சரி செய்யப்படாத சேதாரம் இழைக்கப்பட்டு விட்டதாக சூழலியல் வாதிகளும் ,நிபுணர்களும் குற்றம் சாட்டு கின்றனர்.


பிமல் பட்டேலின் ஜனநாயக விரோதக்  கருத்துக்களும், செயல்பாடுகளும்

மோடியின் கட்டட வடிவமைப்பாளர் பிமல் பட்டேலோ எதைப் பற்றியும் கவலைப்பட வில்லை. தனது திட்டங்கள் குறித்து எதிலும் அவருக்கு சந்தேகம் இல்லை. தனது நிறுவனம் தேர்வான விதம், கட்டட வடிவமைப்பு, மோடி அரசின் வெளிப்படைத் தன்மையற்ற செயல் பாடு எல்லாவற்றையும் மோடியின் வாடிக்கை யாளர் என்ற முறையில் அல்ல, இவரே மோடி யாக மாறி நியாயப்படுத்துகிறார்.


சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு பிரத்யேக மாக கட்டட வடிவமைப்பு போட்டி நடத்தப்பட வேண்டியதில்லை. அது கட்டுமான வடிவ மைப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டிய வேலை.  அவர் தனது வாடிக்கையாளரான அரசுடன் மட்டும் கலந்தாலோசித்து பணிகளை மேற் கொள்வார் என்கிறார்.


தான் செய்ய வேண்டியது எல்லாம் தனது வாடிக்கையாளரான மோடியை மட்டுமே திருப்தி செய்தால் போதும், மக்களையோ, மக்கள் பிரதிநிதிகளையோ, கலைஞர்களையோ அல்ல என்பதில் உறுதியாக இருக்கிறார்.


புதிய நாடாளுமன்றக் கட்டடம் குறித்து நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் கூட விவாதிக்க வில்லை. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடும் அரங்கம் இவ்வளவு பெரிய அளவில் வேண்டாமே! வருடத்திற்கு இரண்டு முறை தானே கூடுகிறோம் என்று மோடி சொன்னதும் இரண்டு அவைகளின் கூட்டு கூட்டரங்கை சிறிதாக்கி, மக்களவை அரங்கை பெரிதாக்கிவிட்டதாக பிமல் பட்டேல் கூறுகிறார்.


இந்தச் செயல் நாடாளுமன்றத்தையும் ஜன நாயகத்தையும் அவமதிப்பதாகும். ஏற்க னவே 2009 இல் இரண்டு அவைகளின் கூட்டுக் குழு எதிர்கால நாடாளுமன்ற இடத்தை அதிக ரிப்பதற்கு பரிந்துரை செய்திருந்தது.


இந்த பரிந் துரையை எல்லாம் மோடியோ, பிமல்பட்டே லோ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் பிமல் பட்டேல் என்ன சொல்கி றார்? நாம் ஜனநாயக நாட்டில் வாழ்வதால், முக்கியமான பிரச்சனைகள் அனைத்தையும் தாங்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம்  என மக்கள்  நினைத்துக் கொள்கின்றனர் என்கிறார்.


பேராசிரியரும் ,கட்டட வடிவமைப்பாளரு மான பிரேம் சந்திரவார்க்கர் என்பவர் சென்ட்ரல்  விஸ்டா ,நமது ஜனநாயக செயல்பாடுகளின் மையமாகும். நமது ஜனநாயக லட்சியம் பாரம் பரியத்திற்கு மோடியின் மறு நிர்மாணத் திட்டம் மரியாதை அளித்திருக்க வேண்டும். பட்டேல் போன்று எந்த கட்டட வடிவமைப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஆட்சி நிர்வா கத்திலும் அரசியல் தத்துவத்திலும் நிச்சயமாக நிபுணர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். 


பிமல் பட்டேல் போன்றவர்களின் வியாக்கியா னங்களை ஜனநாயக நாடு அனுமதிக்கக் கூடாது என்கிறார். 


இந்தியாவில் கட்டட வடிவமைப்பாளர்க ளுக்கு பஞ்சமில்லை. சென்ட்ரல் விஸ்டா திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக தேசிய அளவில் அரசியல், ஜனநாயகம், கட்டடக்கலை, வடிவமைப்பு குறித்து விவாதம் நடைபெற்று இருக்க வேண்டும் என்கிறார்.


ஆனால் சென்ட்ரல் விஸ்டா திட்டம் மோடி பிளஸ் பிமல் பட்டேல் கூட்டு நடவடிக்கையாக மாறிவிட்டது.எனவே பிமல் பட்டேல் தனது எஜ மானரின் உத்தரவை பின்பற்றுவது போலவே அவரது குரலிலேயே பேசவும் செய்கிறார். 


நன்றி:  கேரவன், ஜூன்,2024

தமிழில் :  ம.கதிரேசன்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?