அடிமாட்டு விலைக்கு...
ராஜஸ்தான் மாநில அரசின் திட்டங் களை நேரடியாக ஒளி பரப்புவதற்கான சேவைகளை வழங்க ஏலம் மூலம் ஒப்பந்தம் கொள்வதற்கான அறிவிப்பு ஜூன் 7 அன்று வெளியிட்டபட்டது.
குறைந்த ஏல கொள்முதல் தொகை ரூ.1 கோடியாக இருக்க வேண்டும்” என கூறப்பட்டது.
தொடர்ந்து ஜூன் 18 அன்று ஏஎன்ஐ மீடியா பிரைவேட் லிமிடெட் (ஏல எண் : 2811045), ஏசி யன் பிலிம்ஸ் டிவி பிரைவேட் லிமி டெட் (ஏல எண் : 2812040) மற்றும் யெல்லோகேட் வென்ச்சர்ஸ் (ஏல எண் : 2812070) ஆகிய 3 நிறு வனங்கள் மட்டுமே ஏலத்தில் பங் கேற்க விண்ணப்பித்துள்ளதாக ஆர்ஜே - டிஐபிஆர் தகவல் தெரி வித்தது.
அதன்பிறகு ஏலம் நடந்ததாக எந்த செய்திகளும் வெளியாக வில்லை.
ஆனால் ஆர்ஜே - டிஐ பிஆர் தனது ஏலத்தில் பங்கேற்ற ஏசி யன் பிலிம்ஸ் டிவி மற்றும் யெல் லோகேட் வென்ச்சர்ஸ் ஆகியவை தொழில்நுட்ப காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.
அதே நேரத் தில் ஏஎன்ஐ மீடியா ரூ. 94 லட்சத் திற்கு ராஜஸ்தான் மாநில அரசின் திட்டங்களை நேரடியாக ஒளிபரப்பு வதற்கான சேவை ஒப்பந்தத்தை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ராஜஸ்தான் அரசு ஏலத்தில் நிர் ணயித்த குறைந்த கொள்முதல் தொகையை (ரூ.1 கோடி) விட குறை வான தொகையிலேயே ஏஎன்ஐ மீடியா ராஜஸ்தான் மாநில அரசின் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள் ளது.
இது சர்ச்சையை ஏற்படுத்தி னாலும் இதைவிட மேலும் ஒரு முக் கியமான சர்ச்சை ஒன்றும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த ஏல நிகழ்வில் குறைந்தது 3 நிறுவனங்கள் பங்கேற்க வேண் டும் என ராஜஸ்தான் அரசு கூறி யது.
அதற்கேற்ப ஏஎன்ஐ மீடியா பிரைவேட் லிமிடெட், ஏசியன் பிலிம்ஸ் டிவி பிரைவேட் லிமிடெட், யெல்லோகேட் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த மூன்று நிறுவனங்களுமே ஏஎன்ஐ மீடியாவின் இயக்குநர்களுக்கு சொந்தமானவைதான்.
ஏஎன்ஐ மீடி யாவிற்கு பிரேம் பிரகாஷ், ஸ்மிதா பிரகாஷ், சஞ்சீவ் பிரகாஷ் சபர் வால் (பிரேமின் மகன், ஸ்மிதாவின் கணவர்), இஷான் பிரகாஷ் (சஞ்சீவ் - ஸ்மிதா தம்பதிகளின் மகன்) ஆகிய 4 பேர் இயக்குநர்களாக உள்ள நிலையில், ராஜஸ்தான் அரசு ஏலத்தில் ஏஎன்ஐ மீடியா சார்பில் ஸ்மிதா பிரகாஷும், ஏசியன் பிலிம்ஸ் டிவி பிரைவேட் லிமிடெட் சார்பில் சஞ்சீவ் பிரகாஷ் சபர்வா லும், யெல்லோகேட் வென்ச்சர்ஸ் சார்பில் இஷான் பிரகாஷும் பங் கேற்றனர்.
ராஜஸ்தான் அரசு ஒப்பந்த ஏலத் தில் வென்ற ஏஎன்ஐ மீடியாவின் இயக்குனர்களில் ஒருவரான ஸ்மிதா பிரகாஷ், ஏலத்தில் போட்டி நிறுவனமாக பங்கேற்ற ஏசியன் பிலிம்ஸ் டிவி பிரைவேட் லிமிடெட், யெல்லோகேட் வென்ச்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இயக்குனராக உள்ளார்.
முகவரி யை மட்டும் மாற்றிக் கொடுத்து மோசடி மூலம் ராஜஸ்தான் அர சின் ஒப்பந்தத்தை கைப்பற்றியுள் ளது ஏஎன்ஐ மீடியா.
மோடி பிரதமர் ஆன பின்பு நாட் டின் பல பிரதான ஊடகங்கள் பாஜக வின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அவை “கோடி மீடியா” (கோய பல்ஸ் - மோடி மீடியா) என அழைக் கப்பட்டு வரும் நிலையில், இந்த “கோடி மீடியா”வின் தலைமை பொறுப்பாளர் போல ஏஎன்ஐ ஊடக ஏஜென்சி உள்ளது.
பாஜக, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை மட்டுமே நேர்த்தியாக ஒளிபரப்பும் ஏஎன்ஐ மீடியா நிறுவனம் எதிர்க்கட்சியினரின் பேச்சுக்கள், மோடி ஆட்சியின் ஊழல்கள், விபத் துக்களை அவ்வளவாக வெளிக் காட்டுவது கிடையாது.
கிட்டத்தட்ட மோடி அரசின் கைப்பாவையா கவே கடந்த 11 ஆண்டுகளாக ஏஎன்ஐ மீடியா சுழன்று வரும் நிலையில், இதற்கு கைமாறாக அடிமாட்டு விலையில் பாஜக ஆளும் ராஜஸ் தான் மாநிலத்தின் அரசுத் திட்ட நேரடி ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது அம்பலமாகியுள் ளது.
மோடியின் நெருங்கிய நண்ப ரான அதானி, நிலக்கரி சுரங்க ஏலத்தில் தனது
நிகழ்வில் பங்கேற்க வைத்து சுரங்கங்களை கைபற்றி யது போல, ராஜஸ்தான் பாஜக
அரசு - ஏஎன்ஐ மீடியா இணைந்து கூட்டுச் சதி மூலமாக ராஜஸ்தான் அரசு மாநில
அரசின் நேரடி ஒளி பரப்பு உரிமையை கைப்பற்றியுள் ளது ஏஎன்ஐ மீடியா.
±--------_-------------------------------------------