நிதி அறிவற்ற அரசு

 அதானி, அம்பானி களுக்கு வரிச்சலுகை கள், பல‌ இலட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன்கள் தள்ளுபடி என பாஜக அரசு வாரி வழங்கி வருவது நாட்டின் வருமானத்தில் பெரும் இழப்பை உருவாக்கி  யுள்ளது.

 பாஜக ஆட்சியில் நிதித்துறையில், தேசியமய மாக்கப்பட்ட வங்கிகளில், பங்குச் சந்தையில்  நடை பெற்று வரும் மோசடிகளைத் தடுப்பதற்கு எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படவில்லை. 

நிதி அமைச்சர் எல்லாவற்றையும் மறைத்தாலும் வரி வருவாய், கடன்அளவு, வட்டி செலுத்தும் நிலை மற்றும் செலவுகளை மறைக்க முடியாது அல்லவா!

நிதி அமைச்சர் கிண்டிய அல்வா எப்படி உள்ளது என்பதை நிதிநிலை அறிக்கையில் எடுத்துக்காட்டியுள்ள ஒத்த ரூபாய் பட விளக்கம் சரிந்து வரும் நிதி நிலையை அம்பலப்படுத்தியுள்ளதே!


ஒரு ரூபாயில் வருமான வரி மூலம் வரும் வருவாய் 19  விழுக்காடு. நிறுவன வரி மூலம் வரும் வருவாய் 17 விழுக்காடு. இங்கும் தனி நபர்கள் செலுத்தும் வருமான வரி அளவு அதிகம். பெரு நிறுவனங்கள்  இலாபத்தில் இருந்து செலுத்துவது குறைந்த வரி.

கடன் அல்லாத மூலதன வருவாய் 1 விழுக்காடு

ஓய்வூதியம் 4 விழுக்காடு, ஒன்றிய அரசு நிறைவேற்றும் திட்டங்கள் 8 விழுக்காடு, நிதிக் குழுப் பரிந்துரையின் படி செய்யப்படும் செலவு 9 விழுக்காடு, மாநிலங்களின் வரி பகிர்வு செலவு 21 விழுக்காடு, மற்ற செலவுகள் 9 விழுக்காடு, பாதுகாப்புத் துறைக்கு 8 விழுக்காடு, உதவித் தொகை 6 விழுக்காடு, 

ஒன்றிய அரசு செலவு செய்யும் நேரடி திட்டங்கள் செலவு 16 விழுக்காடு. 

ஒன்றிய அரசு வாங்கிய கடனுக்குச் செலுத்தும் வட்டி 19 விழுக்காடு.  

ஓய்வூதியம் 4 விழுக்காடு, ஒன்றிய அரசு நிறைவேற்றும் திட்டங்கள் 8 விழுக்காடு, நிதிக் குழுப் பரிந்துரையின் படி செய்யப்படும் செலவு 9 விழுக்காடு, மாநிலங்களின் வரி பகிர்வு செலவு 21 விழுக்காடு, மற்ற செலவுகள் 9 விழுக்காடு, பாதுகாப்புத் துறைக்கு 8 விழுக்காடு, உதவித் தொகை 6 விழுக்காடு, ஒன்றிய அரசு செலவு செய்யும் நேரடி திட்டங்கள் செலவு 16 விழுக்காடு. 

ஒன்றிய அரசு வாங்கிய கடனுக்குச் செலுத்தும் வட்டி 19 விழுக்காடு.  

ஒன்றிய அரசின் அதிகாரக்குவிப்பும் நெறியற்ற மோசமான நிதி மேலாண்மையையும் இந்தச் செலவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.


இந்த நிதிநிலை அறிக்கையில் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை யானைப் பசிக்குக் கொடுக்கப்பட்ட சோளப் பொரியை ஒத்ததாகும்.

 மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை போதுமானது அன்று. இந்த நிலையில் பீகாருக்கும் ஆந்திராவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை நிதியியலின் பொதுத்தன்மையைச்  சீர் குலைக்கும் செயலாகும்.

ஆந்திராவின் கோரிக்கையை 10 ஆண்டுகளாக பாஜக அரசு ஏன் புறந்தள்ளியது?

பீகாரில் நிதிஷ் குமாருடன் இணைந்து, பிரிந்து பாஜக செய்த செய்து வரும் அரசியல், ஆபாசத்தின் உச்சம். தமிழ்நாடு உட்படப் பல மாநிலங்களின் நேர்மையான கோரிக்கைகளை ஏற்காமல், தனது அரசிற்கு ஆதரவு அளிப்பதனால் அதிக நிதி ஒதுக்கீடு செய்வது அப்பட்டமான நிதியியல் மோசடியாகும்.

அரசமைப்புச் சட்டத்தின்படி இயங்கும் தன்னாட்சிப் பெற்ற அனைத்து அமைப்புகளையும் மிரட்டிப் பணிய வைத்து ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகளைக் கடந்த 10 ஆண்டுகளாகச் சிதைத்துச் சீரழிவை ஏற்படுத்திய ஒன்றிய அரசு, நிதி நிலை அறிக்கை மீதும் பாசிசத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 


இது தான் இந்த நிதிநிலை அறிக்கை எடுத்துரைக்கும் உண்மை யாகும். 

இதற்கு ஒரே தீர்வு மாநிலங்கள் எல்லாத் துறைகளிலும் தனது உரிமைகளை மீட்டெடுக்கக் களம் காணவேண்டும்.

                                               -பேரா,மு.நாகநாதன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?