போதை இல்லாத

  குஜராத்

‘‘போதைப் பொருள் இல்­லாத இந்­தி­யாவை உரு­வாக்­கு­வோம்” என்று பிர­த­மர் மோடி பேசி இருக்­கி­றார்.

 போதைப் பொருள் இல்­லாதகுஜ­ராத்தை அவர் முத­லில் உரு­வாக்க வேண்­டும். அங்­கி­ருந்­து­தான்

அதி­க­மான போதைப் பொருள்­கள் வெளி­யில் வரு­கின்­றன என்­பது

பிர­த­ம­ருக்­குத் தெரி­யாதா?

வானொ­லி­யில் மாதம்­தோ­றும் ‘மன­தின் குரல்’ என்ற நிகழ்ச்சி

மூல­மா­கப் பேசி வரு­கி­றார் பிர­த­மர். கடந்த 28 ஆம் தேதி­யன்று பேசும் போது, நாட்­டில் போதைப் பொருட்­க­ளின் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­வ­தாக கவலை தெரி­வித்­துள்­ளார் பிர­த­மர். 

போதைப் பொருள் பிரச்­சினை தொடர்­பாக மக்­க­ளுக்கு ஆலோ­ச­னை­கள் சொல்ல, ‘மனஸ்’ என்ற உதவி மையம் தொடங்­கப்­ப­டு­வ­தாக அறி­வித்­துள்­ளார் பிர­த­மர்.

‘‘போதைப் பொருட்­க­ளின் பிடி­யில் தங்­கள் குழந்­தை­கள் சிக்­கி­ வி­டு­ வார்­களோ என ஒவ்­வொரு குடும்­ப­மும் கவ­லை­யில் உள்­ளது. எனவே இந்­தி­யா­வைப் போதைப் பொருட்­கள் இல்லா நாடாக உரு­வாக்க

ஒவ்­வொரு தனி­ந­ப­ரும் நிறு­வ­னங்­க­ளும் அனைத்து அமைப்­பு­க­ளும் உழைக்க வேண்­டும். போதைப் பொருட்­கள் இல்லா இந்­தி­யாவை உரு­வாக்க ‘மனஸ்’ உதவி மையத்தை பயன்­ப­டுத்­து­மாறு மக்­கள் அனை­வ­ரை­யும் அனைத்து குடும்­பங்­க­ளை­யும், அனைத்து நிறு­வ­னங்­க­ளை­யும் கேட்­டுக் கொள்­கி­றேன்” என்று பிர­த­மர் பேசி இருக்­கி­றார். 

அவ­ரது முன்­னெ­டுப்பு சரி­யா­ன­து­தான். இதனை முத­லில் அவர் குஜ­ராத்­துக்­கும் குஜ­ராத் மாநில அர­சுக்­கும்­தான் சொல்ல வேண்­டும். ஏனென்­றால் போதைப் பொருள் கிடங்­காக இருப்­பது குஜ­ராத் மாநி­லம்­தான். தடுப்­புப் பணி­களை முத­லில் அங்­கி­ருந்­து­தான் தொடங்க வேண்­டும்.

இன்­னும் சொன்­னால் நாட்­டி­லேயே அதி­க­மான போதைப் பொருள்

விற்­ப­னை­யா­கும் மாநி­லங்­கள் பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­கள்­தான்

என்­கி­றது ஒரு புள்­ளி­வி­ப­ரம். கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்­பர் 13 ஆம் தேதி மாநி­லங்­க­ள­வை­யில் வைக்­கப்­பட்ட அறிக்­கை­யின்படி, இந்­தி­யா­வில் உள்ள 28 மாநி­லங்­க­ளில் ராஜஸ்­தா­னில்­தான் அதி­க­மான போதைப் பொருள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. 

இது பா.ஜ.க. ஆளும் மாநி­லம் ஆகும்.

ராஜஸ்­தான், பஞ்­சாப், மத்­தி­யப்­பி­ர­தே­சம், ஜார்­கண்ட், மணிப்­பூர்,

குஜ­ராத், அரி­யானா, பீகார், மேற்கு வங்­கம், உத்­தி­ரப்­பி­ர­தே­சம் ஆகிய பத்து மாநி­லங்­க­ளில்­தான் அதி­க­மாக பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளன. 

இதில் ஏழு மாநி­லங்­கள் பா.ஜ.க. ஆளும், ஆளும் கூட்­ட­ணி­யில் இருக்­கும் மாநி­லங்­கள். இந்த மாநி­லங்­க­ளில் இருந்து தனது போதை ஒழிப்பை பிர­த­மர் தொடங்க வேண்­டும்.

இந்­தி­யா­வில் போதைப் பொருள் கடத்­த­லின் தலை­ந­க­ராக இருப்­பது குஜ­ராத் மாநி­லம்­தான் என்­பதை அங்­கி­ருந்து வரும் செய்­தி­கள் தொடர்ந்து மெய்ப்­பித்­துக் கொண்­டி­ருக் கின்­றன.

ஹெரா­யி­னுக்கு முக்­கிய மூலப்­பொ­ரு­ளாக ஓபி­யம் உள்­ளது. உல­கின் மிகப்­பெ­ரிய ஓபி­யம் உற்­பத்­தி­யா­ளர் களால் ஆப்­கா­னிஸ்­தா­னில் இருந்து இந்­தி­யா­விற்கு குஜ­ராத் வழி­யாக வரு­கி­றது. ஆப்­கா­னிஸ்­தா­னில் தயா­ரா­கும்

ஹெரா­யின்­கள், இந்­தி­யப் பெருங்­க­டல் வழி­யாக கிழக்கு மற்­றும் தெற்கு ஆப்­பி­ரிக்­கா­வுக்­குக் கடத்­தப்­ப­டு­வ­தாக ஐ.நா.வின் போதைப் பொருள் மற்­றும் குற்­றம் தொடர்­பான அலு­வ­ல­கம் கூறு­கி­றது. 

2017 – 21 ஆகிய ஐந்து ஆண்­டு­க­ளில் மட்­டும் ரூ.2.5 லட்­சம் கோடி மதிப்­பி­லான போதைப் பொருட்­கள் குஜ­ராத்­தில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

* குஜ­ராத் மாநில கடற்­ப­கு­தி­யில், ஒரு கப்­ப­லில் இருந்து 1,500 கிலோ ஹெரா­யினை இந்­திய கட­லோ­ரக் காவல் படை அதி­கா­ரி­கள் 2017 ஆம் ஆண்டு கைப்­பற்­றி­னார்­கள். இந்த ஹெரா­யின் மதிப்பு கிட்­டத்­தட்ட 550 மில்­லி­யன் டாலர் இருக்­கும் என கட­லோ­ரக் காவல்­படை அறிக்­கையே வெளி­யிட்­டது.

 ‘‘இவ்­வ­ளவு போதைப் பொருள்­கள் ஒரே நேரத்­தில் பறி­மு­தல் செய்­யப்பட்­டி­ருப்­பது இதுவே முதல்­முறை” என்று கடற்­படை செய்தி தொடர்­பா­ளர் டி.கே.சர்மா சொன்­னார்.

* 2021 ஆம் ஆண்டு குஜ­ராத் மாநி­லத்­தில் உள்ள முந்­திரா

துறை­மு­கத்­துக்கு ரூ.21 ஆயி­ரம் கோடி மதிப்­புள்ள போதைப் பொருள் வந்து இறங்­கி­யது.

* 2022 ஆம் ஆண்டு கஞ்சா, மெத்­தாம்­பி­ட­மைன் மற்­றும் ஹெரா­யின் போன்ற போதைப் பொருட்­கள் 760 கிலோ கண்­டு­பி­டிக்­கப்­ ­பட்டன. இதன் சர்­வ­தேச மார்க்­கெட் விலை ரூ.2,000 கோடி.

* 2022,23 ஆகிய இரண்டு ஆண்­டு­க­ளில் மட்­டும் குஜ­ராத்­தில் உள்ள 25 மாவட்­டங்­க­ளில் இருந்து ரூ.4 ஆயி­ரம் கோடிக்­கும்

அதி­க­மான போதைப் பொருட்­கள் பறி­மு­தல் செய்­தி­ருப்­ப­தாக அந்த மாநில அரசே சொல்லி இருக்­கி­றது.

* கடந்த பிப்­ர­வரி மாதம் குஜ­ராத்­தில் ரூ.2 ஆயி­ரம் கோடி மதிப்­பி­லான போதைப் பொருட்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. 3,300 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்­கள் இவை. ஐந்து பேரைக் கைது செய்­தது காவல்­துறை. இவர்­கள் பாகிஸ்­தா­னைச் சேர்ந்­த­வர்­கள். 

பாகிஸ்­தா­னைச் சேர்ந்­த­வர்­கள் உள்ளே நுழைந்து போதைப் பொருள் விற்­கும் அள­வுக்கு ‘பாது­காப்­பான’ மாநி­ல­மாக குஜ­ராத் இருக்­கி­றது.

குஜ­ராத் போலீஸ் அதி­காரி ஒரு­வர் அளித்­துள்ள பேட்­டி­யில், ‘‘போதைப் பொருட்­கள் குஜ­ராத் வந்­த­தும் டெல்லி, பஞ்­சாப் மாநி­லத்­துக்கு கடத்­தப்­படு­கி­றது. 

குஜ­ராத்­தில் இருந்து ரயில், பேருந்து,கார் மூலம் கடத்­தப்­ப­டு­ கி­றது” என்று சொல்லி இருக்­கி­றார். குஜ­ராத்­துக்கு போதைப் பொருள் வரும் பாதை­யை­யும், அங்­கி­ருந்து வெளி­யில் அனுப்பி வைக்­கப்­ப­டும் பாதை­யை­யும் முத­லில் அடை­யுங்­கள். 

போதைத் தடுப்­பின் முதல் நட­வ­டிக்­கை­யாக அது அமை­யட்­டும்.

ப்ரீத்தி சுதன் ?

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யுபிஎஸ்சி) தலைவராக முன்னாள் மத்திய சுகாதார செயலாளர் ப்ரீத்தி சுதன் நியமிக்கப்பட்டுள்ளார். 

யுபிஎஸ்சி உறுப்பினரான பிரீத்தி சுதன் ஆகஸ்ட் 1 வியாழக்கிழமை அந்தப் பதவியை ஏற்கிறார்.

ப்ரீத்தி சுதன் 1983 பேட்ச் ஆந்திர மாநில பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அரசாங்க நிர்வாகத்தில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் சுமார் 37 வருட அனுபவம் கொண்டவர்.


லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பொருளாதாரம் மற்றும் சமூகக் கொள்கை மற்றும் திட்டமிடலில் பட்டம் பெற்ற அவர், வாஷிங்டனில் பொது நிதி மேலாண்மையில் பயிற்சி பெற்றார்.


ஜூலை 2020 வரை மூன்று ஆண்டுகள் மத்திய சுகாதார செயலாளராக பணியாற்றினார். அவரது பணிக்காலத்தில், கோவிட் -19 தொற்றுநோய் காலங்களில் சுதன் முக்கிய திட்டம் தீட்டுபவராக இருந்தார்.


இதற்கு முன்பு, சுதன் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளராக இருந்தார். பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய அவர், நிதி மற்றும் திட்டமிடல், பேரழிவு மேலாண்மை, சுற்றுலா மற்றும் விவசாயம் ஆகியவற்றைக் கையாண்டார். முன்னதாக, அவர் உலக வங்கியில் ஆலோசகராக இருந்தார்.


புகையிலை கட்டுப்பாடு தொடர்பான கட்டமைப்பு மாநாட்டின் சிஓபி -8 இன் தலைவராகவும், தாய், பிறந்த குழந்தை மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான கூட்டாண்மையின் துணைத் தலைவராகவும், உலகளாவிய டிஜிட்டல் சுகாதார கூட்டாண்மையின் தலைவராகவும், தொற்றுநோய் தயாரிப்பு மற்றும் பதிலுக்கான உலக சுகாதார அமைப்பின் சுயாதீன குழுவின் உறுப்பினராகவும் ப்ரீத்தி சுதன் பணியாற்றியுள்ளார்.


பேட்டி பச்சாவ் பேட்டி படாவோ மற்றும் ஆயுஷ்மான் பாரத் தொடங்குதல், இ-சிகரெட் மீதான தடை மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்டம் போன்ற பல்வேறு தேசிய அளவிலான திட்டங்களில் இவர் பல குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

மாணவர்கள் போராட்டம்

டெல்லியின் ராஜீந்தர் நகரில் உள்ள பயிற்சி நிறுவனங்களுக்கு வெளியே புதன்கிழமை நான்காவது நாளாக போராட்டங்கள் தொடர்கின்றன,


ராவ் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட வெள்ள சம்பவத்தில் 3 யுபிஎஸ்சி தேர்வுக்காக படிக்க வந்தவர்கள் உயிர் இழந்தனர். தங்களது கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மாணவர்கள் கூறி போராட்டத்தில் குதித்துள்ளனர்.


போராட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த மாணவர் ராபின் கூறுகையில், "'ஐ.ஏ.எஸ்' மையத்தில் தீ விபத்து நடந்தபோது எங்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டது, ஆனால் ஒரு வாரத்திற்குப் பிறகு பயிற்சி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

உறுதிமொழிகளைக் கேட்ட பிறகு எங்கள் போராட்டத்தை பலவீனப்படுத்த நாங்கள் விரும்பவில்லை.

எங்களுக்கு உத்தரவாதங்கள் தேவையில்லை; எங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். நாங்கள் நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம்" என்றார்.

"போராட்டத்தை திரும்பப் பெற போலீசார் தில்லுமுல்லு செய்ய முயன்றனர். இது ஒரு சிறிய பிரச்சினை அல்ல.

நடந்து கொண்டிருக்கும் போராட்டம் ஒரு சிறிய மட்டத்தில் உள்ளது; போராட்டம் பெரிய அளவில் நடக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை" என்று அவர் கள் கூறினார்.

நிதியமைச்சரின் 

10 பெருமைகள்

1 மிகவும் அரிதான விதத்தில் சாதனை புரிந்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி அமைச்சர் அவர் களுக்குப் பல பெருமைகளை அளித்துள்ளது.  

அவர் இந்திய நாடாளுமன்றத் தில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் பீகாருக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்து ஓர்  அரிய சாத னையை நிகழ்த்தியிருக்கிறார். 

2அவர் ஆற்றிய உரையின் 58 பக்கங்களை யும்  பார்வையிட்டபோது மற்றொரு  அம்  சத்தையும் கண்டேன். இந்த பட்ஜெட் டில் ஒரேயொரு இடத்தில்தான் அவர் பிரத மரின் பெயரை உச்சரித்திருக்கிறார். 

இது ஆச்சர்  யமளிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில்,  அதிலும் பாஜகவில் உள்ள ஒருவர் பிரதமரின்  பெயரைக்கூறாதது ஆச்சர்யம் இல்லையா?  அதற்காகவும் அவர் பெருமைக்குரியவரா கிறார்.

3மூன்றாவதாக அவர் பெறும் பெருமை  என்பது என்டிஏ (NDA) என்னும் தேசிய  ஜனநாயகக் கூட்டணிக்கு அவர் ஒரு  புதிய பெயரை உருவாக்கி அளித்தி ருக்கிறார்.

 அதாவது ‘நிதிஷ்-நாயுடு டிபண்  டன்ட் அலையன்ஸ் (Nitish-Naidu Dependant  Alliance)’ அதாவது ‘நிதிஷ்- நாயுடுவைச்  சார்ந்திருக்கும் கூட்டணி’ என்னும் புதிய பரி ணாமத்தை ஏற்படுத்தியிருக்கிறார். அதற்காக வும் அவர் பெருமைக்குரியவராகிறார். 

4ஜவஹர்லால் நேருவை எந்த இடத்தி லும் குறைகூறாமல் இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 

அதற்காக வும் அவர் பெருமைக்குரியவராகிறார்

5ஐந்தாவதாக நான் நிதியமைச்சருக்கு அளிக்கவிரும்பும் பெருமை என்பது,  இந்தியாவின் பூகோள எதார்த்த நிலை மைகளையே அவர் மாற்றிய மைத்திருப்பதற்காகும்.

 இதுவரை இருந்த நிதி யமைச்சர்கள் எல்லாம் இந்தியாவை அரசியல்  ரீதியாகவும், சமூக ரீதியாகவும், ஏன், கலாச்சா ரம் மற்றும் பொருளாதார ரீதியாகவும்தான் கை யாண்டார்கள். ஆனால்  இவர் இந்தியாவின் பூகோள எதார்த்தங்களையே மறுவரையறை செய்திருக்கிறார். இதுவரையிலும் நான் ஆந்தி ரப் பிரதேசம் என்பது தென்னிந்தியாவின் ஒரு பகுதி என்றுதான் கருதிக்கொண்டிருந்தேன்.

 திடீ ரென்று ஆந்திரப்பிரதேசம் ஆட்சியாளர்களின் கிழக்குப் பகுதியின் பிரிக்கமுடியாத பகுதியாக  மாறிவிட்டது. இதுபோன்ற சாதனையை எவரால்  தான் சாதித்திட முடியும்? இந்தப் பெருமைக்குரி யவர் இப்போதுள்ள நிதியமைச்சர் தான். 

6ஆறாவதாக நான் அவருக்கு அளித்தி டும் பெருமை, அவர் ஓர்  அரை கடவுள் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். இந்த  பட்ஜெட் மூலமாக அவர் இந்தியாவில்  தேசியப் பேரிடர்கள் என்பவை மூன்று அல்லது  நான்கு மாநிலங்களுக்கு மட்டும் தான் என்று  வரையறுத்திருக்கிறார். அவரைப் பொறுத்த வரைக்கும் கேரளாவில் பருவமழை சீற்றம் இல்லை, கேரளாவில் வெள்ளம் இல்லை. 

இனி வருங்காலங்களில் இந்தியாவில் மூன்று அல்லது நான்கு மாநிலங்களில் மட்டும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும். நீங்கள் பட்ஜெட்டைப் படித்துப் பாருங்கள். அதில் அப்படித்தான் கூறப்பட்டிருக்கிறது.

7ஏழாவதாக நான் அவருக்கு  அளித்தி டும் பெருமை என்பது, கார்ப்பரேட்டு களுக்கு  அவர் அளித்திருக்கும் சலுகை களுக்காக. கார்ப்பரேட்டுகள் பல லட்சம்  கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டுத் திருப்பிச்  செலுத்தாதபோதிலும்கூட, அவர்களுக்கு வரிச் சலுகைகள், தள்ளுபடிகள் அளித்து அவர்களை இரக்கத்துடன் மன்னித்திருப்பதற்காகும். 

இவற்றை பொருளாதார  ஆய்வறிக்கைகள் தெளிவாகவே காட்டுகின்றன. (குறுக்கீடு)

பொருளாதார அறிக்கை, கார்ப்பரேட்டுகள் முதலீடுகளைச் செய்திடவில்லை என்று தெளி வாகவே கூறியிருக்கிறது. அவர்கள் மூலதனச்  செலவினங்களைச் செய்திடாமல் ஒதுங்கி யிருக்கிறார்கள் என்று தெளிவுபடத் தெரிவித்தி ருக்கிறது. 

அவர்கள் வேலைவாய்ப்பை உரு வாக்கவில்லை என்றும் அது கூறியிருக்கிறது.   முதலீடுகளை அவர்கள் செய்யாதபோதும், வேலைவாய்ப்புகளை அவர்கள் உருவாக்காத போதும், அவர்களுக்கு மிகவும் தாராளமாக இப்  போதும் நிதியமைச்சர் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறார். 

வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு (Employment-linked  incentive) என்றும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு  (production-linked incentive) என்றும் அதற்குப் பெயர்.

கார்ப்பரேட்டுகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு அளித்துள்ளபோதிலும், உற்பத்தித் துறையில் உற்பத்தித்திறன் (the productivity in manufacturing) என்பது 2.8 விழுக்காட்டிற்கு வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இப்போது இவர்களின் புதிய முழக்கம் என்ன? 

புதிதாக வேலைகள் கிடையாது. மாறாக  பயிற்சி. (No jobs but internship) நாங்கள் உங்க ளுக்கு பயிற்சி தருவோம் (“we will give you  internship”)

8நான் அரசிடம் வேலையின்மை தொடர் பாக கேட்டிருந்த கேள்விக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. 

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த அவை யில் குறைந்தபட்சம் அரசாங்கத்திலும், பொதுத்  துறை நிறுவனங்களிலும் 30 லட்சம் பணி யிடங்கள் காலியாக இருக்கின்றன என்று கூறி னார்.

இந்த அரசிடம் இரண்டு கேள்விகள்தான்...   ஒன்றிய அரசாங்கத்திலும், பொதுத் துறை நிறு வனங்களிலும் எத்தனை பணியிடங்கள் காலி யாக இருக்கின்றன? ரயில்வேயில் எத்தனைப்  பணியிடங்கள் காலியாக இருக்கின்றன?

 எவ்வ ளவு பணியிடங்கள் காலியாக இருக்கின்றன என்று எவருக்கும் தெரியாது.  எவ்வளவு பணி யிடங்கள் காலியாக இருக்கின்றன என்று சொல்  வதற்கு அரசாங்கம் ஏன் தயங்க  வேண்டும்?

 அத னால்தான் மக்கள் 30 லட்சம் என்றும், 25 லட்சம்  என்றும் 50 லட்சம் என்றும் கூறிக்கொண்டிருக்கி றார்கள். எனவே உண்மையான விவரங்கள் இந்த அரசாங்கம் கூற வேண்டும்.

9ஒன்பதாவதாக நான் நிதியமைச்சருக்கு அளிக்கும் பெருமை என்பது அவர் அனைத்துப் புள்ளிவிவரங்களையும் துண்டித்திருப்பதற்காக. கடந்த ஐந் தாண்டுகளில் வேலைவாய்ப்பு 18 கோடிக்கும் அதிகமாகும் என்று சில ஆய்வுகள் கூறுவதாகக் கூறியிருப்பது உங்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கும். 

உண்மையில் இது பிரதமரின் வாக்குறுதியைக் கூட மீறியிருக்கிறது. ஆனால்  பொருளாதார ஆய்வறிக்கை என்ன கூறுகிறது?  நாட்டில் 18.3 விழுக்காட்டினர்தான் வேலையிலி ருக்கிறார்கள் என்கிறது. 

அவர்களுக்கும் உரிய  ஊதியம் இல்லை. இதுதான் நம்முன் உள்ள புள்ளி விவரங்கள்.

10சீனாவிலிருந்து அந்நிய நேரடி முதலீடு குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டி ருக்கிறது. 

சீனாவுடன் தொடர்பு டைய ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தார் என்று  கூறி பிரபீர் புர்கயஸ்தா என்னும் இதழாளரை  கைது செய்து சிறையிலடைத்தீர்களே,அதை தவறுஎன்றுஇதன்மூலம்ஒப்புக்கொள்கிறீர்கள் !

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?