குழப்பத்தில்....

டெலிகிராம் நிறுவன சி.இ.ஓ. பாவெல் துரோவ், போலீஸ் காவலில் இருந்து விடுதலை - பிரான்ஸை விட்டு வெளியேற தடை.

உ.பி,அரசை புகழ்ந்தால் ரூ.8 லட்சம் பரிசு! விமர்சனம் செய்தால் கைது!
 உ.பி அரசின் புதிய டிஜிட்டல் கொள்கை.

தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா தேர்வு.
32 சவரன் தங்க நகை அபகரிப்பு புகாரில், திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கீதா கைது.
பொருளாதார குற்றப்பிரிவில் 800க்கும் மேற்பட்டோர் புகார்; மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 300 கிலோ தங்கம் எங்கே..? மோசடி மன்னன் வின் டிவி தேவநாதனிடம் விசாரணை.

குழப்­பத்­தில் பா.ஜ.க. கூட்­டணி!

இம்­முறை ஆட்சி அமைக்­கும் பெரும்­பான்மை பலத்தை பா.ஜ.க. பெற­வில்லை. சில கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன்­தான் பிர­த­மர் நாற்­கா­லி­யில் நரேந்­திர மோடி உட்­கார்ந்­தி­ருக்­கி­றார். இந்­தக் கட்­சி­கள், மோடி சொல்­­வதற்கு எல்­லாம் தலை­யாட்­டும் கட்­சி­களா, ஏற்­றுக் கொள்­ளும் கட்­சி­களா என்­றால் அது­வும் இல்லை. பா.ஜ.க.வின் எண்­ணங்­க­ளுக்கு எதி­ரானகட்­சி­க­ளாக, அதனை எதிர்க்­கும் கட்­சி­க­ளாக இவை அமைந்­துள்­ளன.

இத்­த­கைய ‘கொள்கை எதி­ரி­கள்’ தய­வில்­தான் பிர­த­மர் நாற்­கா­லி­யில் அமர்ந்­தி­ருக்­கி­றார் நரேந்­தி­ர­மோடி.

‘சாதி வாரி கணக்­கெ­டுப்பு நடத்த வேண்­டும்’ என்ற கொள்­கை­யா­னது கோரிக்­கை­யாக இந்­திய நாடு முழு­வ­தும் எதி­ரொ­லித்­துக் கொண்டுஇருக்­கி­றது. 

தி.மு.க., காங்­கி­ரஸ் உள்­ளிட்ட ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சி­யின் கோரிக்­கை­யாக மட்­டு­மல்ல, பெரும்­பான்­மைக் கட்­சி­க­ளின் கோரிக்­கை­யாக அது மாறி­விட்­டது.

“சாதி வாரிக் கணக்­கெ­டுப்பை தடுத்து நிறுத்­த­லாம் என்று பிர­த­மர் மோடி கனவு காண்­கி­றார். ஆனால் சாதி வாரி கணக்­கெ­டுப்பை எந்த சக்­தி­யா­லும் தடுக்க முடி­யாது. விரை­வில் 90 விழுக்­காடு இந்­தி­யர்­கள் சாதி வாரி

கணக்­கெ­டுப்பை ஆத­ரித்து போரா­டு­வார்­கள். தற்­போ­தைய ஒன்­றிய அரசு சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்­புக்கு உத்­த­ர­வி­டா­விட்­டால், அடுத்த பிர­த­மர் அதைச் செய்­வதை நரேந்­தி­ர­மோடி பார்க்க நேரி­டும்” என்று காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல்­காந்தி எச்­ச­ரித்­துள்­ளார். இது பா.ஜ.க. கூட்­ட­ணிக் கட்­சி­க­ளை­யும் அசைத்­துப் பார்த்­துள்­ளது.

பா.ஜ.க.வின் கூட்­ட­ணிக் கட்­சி­யான லோக் ஜன­சக்தி கட்­சி­யும் சாதி வாரி கணக்­கெ­டுப்­புக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது. “நாடு முழு­வ­தும் சாதி வாரி கணக்­கெ­டுப்பு நடத்த வேண்­டி­யது அவ­சி­யம்” என லோக் ஜன­சக்தி கட்­சி­யின் தலை­வ­ரும் பிர­த­மர் மோடி அமைச்­ச­ர­வை­யில் ஒன்­றிய அமைச்­ச­ராக இருப்­ப­வ­ரு­மான சிராக் பஸ்­வான் சொல்லி இருக்­கி­றார். ஒன்­றிய அர­சில் உணவு பதப்­ப­டுத்­து­தல் தொழில்­துறை அமைச்­ச­ராக அவர் இருக்­கி­றார். “அரசு செயல்­ப­டுத்தி வரும் திட்­டங்­கள் பல்­வேறு பிரி­வி­னரை அடிப்­ப­டை­யா­கக் கொண்­டது. அர­சின் திட்­டங்­கள் உரி­ய­வர்­க­ளுக்­குச் சென்று சேர்­வதை உறுதி செய்ய சாதி வாரிக் கணக்­கெ­டுப்பு அவ­சி­யம்” என்று சிராக் பஸ்­வான் சொல்லி இருக்­கி­றார்.

“நாடு முழு­வ­தும் சாதி­வா­ரிக் கணக்­கெ­டுப்பை ஒன்­றிய அரசு நடத்த வேண்­டும் என்­ப­தில் லோக் ஜன­சக்தி கட்சி உறு­தி­யாக உள்­ளது. மக்­களை முன்­னேற்ற சாதி அடிப்­ப­டை­யி­லான மக்­கள் தொகை விப­ரம் அர­சுக்­குத் தேவை” என்­பதை வலி­யு­றுத்தி வரு­கி­றார் சிராக் பஸ்­வான்.

இட­ஒ­துக்­கீடு எனப்­ப­டும் சமூ­க­நீ­தியை ஒழிக்­கும் வகை­யில் நேரடி நிய­மன முறையை ஒன்­றிய அரசு புகுத்­தப் பார்த்­தது. தி.மு.க. உள்­ளிட்ட கட்­சி­ க­ளின் கடு­மை­யான எதிர்ப்­பைத் தொடர்ந்து அதனை திரும்­பப் பெற்­றது பா.ஜ.க. அரசு. அதன் கூட்­ட­ணிக் கட்­சி­யான லோக் ஜன­சக்­தி­யும் இதனை எதிர்த்­தது. ‘இது எனக்கு மிகுந்த கவலை தரு­கி­றது’ என்று சிராக் பஸ்­வான் சொல்லி இருந்­தார். கூட்­ட­ணிக் கட்­சி­களே எதிர்த்த நிலை­யில் வேறு

வழி­யில்­லா­மல் பின் வாங்­கி­யது பா.ஜ.க.. வக்ஃப் சட்­டத்­தை­யும் சிராக்

பஸ்­வான் எதிர்த்து விட்­டார்.

வக்ஃப் வாரி­யச் சட்­டத்­தி­லும் இதே நிலை­மை­தான். வக்ஃப் வாரி­யச்

சட்­டம் -– 1995 என்ற பெயரை ஒருங்­கி­ணைந்த வக்ஃப் மேலாண்மை, அதி­கா­ர­ம­ளித்­தல், திறன் மேம்­பாடு சட்­டம் - 1995 என்று பெயர் மாற்­றம் செய்­துள்­ளார்­கள். வக்ஃப் வாரிய சட்­டத் திருத்த மசோ­தா­வின் படி வக்ஃப் வாரி­யத்­தின் சொத்­து­க­ளைத் தீர்­மா­னிக்­கும் அதி­கா­ரம் மாற்­றப்­ப­டு­கி­றது.

அந்­தச் சட்­டத்­தின் 40 ஆவது பிரிவு நீக்­கப்­ப­டு­கி­றது. மத்­திய வக்ஃப் கவுன்­சில் என்­பதை உரு­வாக்­கு­கி­றார்­கள். அதில் முஸ்­லீம்­கள் மட்­டு­மல்ல, முஸ்­லீம்

அல்­லா­த­வர்­­களும் இருப்­பார்­கள். வக்ஃப் வாரிய நிலங்­களை கட்­டா­ய­மாக மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­தில் பதிவு செய்ய வேண்­டும். வக்ஃப் நிலமாஇல்­லையா என்­பதை மாவட்ட ஆட்­சி­யர்­கள் முடிவு செய்­வார்­க­ளாம். சிறு­பான்­மைச் சமூ­கத்­தி­னர் அவர்­க­ளின் சொத்­து­களை நிர்­வ­கிக்க அர­ச­மைப்­புச் சட்­டம் பிரிவு 30 அதி­கா­ரம் தரு­கி­றது.

 அதையே பறித்து மாவட்ட ஆட்­சி­யர்­க­ளி­டம் கொடுக்­கும் சட்­ட­வி­ரோத சட்­டம் இது. இதனை ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சித் தலை­வர்­கள் எதிர்த்து வரு­கி­றார்­கள்.

பா.ஜ.க. கூட்­ட­ணி­யில் இடம் பெற்­றுள்ள, மோடி­யின் நாற்­கா­லி­யைக் காப்­பாற்­று­வ­தில் முக்­கி­ய­மான இரு­வ­ரில் ஒரு­வ­ரான ஆந்­திர முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபு நாயுடு முத­லி­லேயே எதிர்ப்பை தெரி­வித்து விட்­டார். இரு­வ­ரின் மற்­றொ­ரு­வ­ரான நிதிஷ்­கு­மா­ரும் எதிர்ப்பு தெரி­வித்­து­விட்­டார். ‘இந்த சட்­டம் இசு­லா­மி­யர்­க­ளுக்கு அச்­சம் தரு­கி­றது’ என்று சொல்லி இருக்­கி­றார் நிதிஷ்­­குமார். பீகார் மாநி­லத்­தில் இசு­லா­மி­யர்­கள் 18 விழுக்­காடு இருக்­கி­றார்­கள். நிதிஷ்­கு­மார் ஏன் அச்­சம் அடை­கி­றார் என்று தெரி­கி­றதா?

நிதிஷ்­கு­மா­ரின் கட்சி முத­லில் வக்ஃப் சட்­டத்தை ஆத­ரித்­தது. அக்­கட்­சி­யின் எம்.பி.யான ராஜீவ் ரஞ்­சன் நாடா­ளு­மன்­றத்­தி­லேயே ஆத­ரித்து

பேசி­னார். இது பீகார் மாநி­லத்­தில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­யது. நிதிஷ் அமைச்­ச­ர­வை­யில் சிறு­பான்­மை­யி­னர் நலத் துறை அமைச்­ச­ராக

இருக்­கும் மொகத் ஜமா கான், சொந்­தக் கட்­சி­யையே எதிர்த்­து­விட்­டார்.

முத­ல­மைச்­சர் நிதிஷ்­கு­மாரை சந்­தித்து, தனது கோபத்தை அவர் வெளிப்­­படுத்­தி­னார். பீகார் நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­ரான விஜ­ய­கு­மார் சவுத்­தி­ரி­யும், வக்ஃப் சட்­டத்தை எதிர்த்து கருத்து கூறி­னார். நிதிஷ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் சில­ரும் கைகோர்த்து விட்­டார்­கள்.

நிதிஷ்­கு­மா­ரின் ஐக்­கிய ஜனதா தளத்­தின் செயல் தலை­வர் சஞ்­சய் ஜாவும், சிறு­பான்மை நலத் துறை அமைச்­சர் மொகத் ஜமா கானும் ஒன்­றிய சட்ட அமைச்­சர் கிரண் ரிஜி­ஜு­வைச் சந்­தித்து தங்­க­ளது அச்­சங்­களை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள்.

இப்­படி குழப்­பத்­தின் உச்­சத்­தில் கிடக்­கி­றது ஒன்­றிய பா.ஜ.க. கூட்­டணி அரசு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக