கோட்டைவிட்ட அரசு?

 கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் தொழில் தொடங்க ரூ.50,000 தமிழ்நாடு அரசு உதவித் தொகை .

எம்எல்ஏ தளபதி வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு- அதிர்ச்சியில் தொண்டர்கள்.
கோவையில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியை நடத்த எவ்வித முன்அனுமதியும் இன்றி பொது இடத்தில் கூட்டம் கூட்டி பொதுமக்களுக்குப் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை இணைக்கக் கூடிய முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகப் பொதுமக்களுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோட்டைவிட்ட ஜால்ரா அரசு?

அகமதாபாத் பாஜக ஆளும் குஜராத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திர நகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜுனகர், கிர் சோம்நாத்,  அம்ரேலி, பவ்நகர் மற்றும் பொ டாட் உள்ளிட்ட 12 மாவட்டங்க ளில் 50 மிமீ முதல் 200 மிமீ வரை  கனமழை கொட்டித் தீர்த்தது. 


இத னால் வதோதராவின் விஸ்வாமித்ரி உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், 12 மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகள் தனித் தீவுகளாக மாறியுள்ளன.

வானிலை அறிக்கையை கண்டுகொள்ளாத  குஜராத் அரசு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கை அறி விப்பை ஆளும் குஜராத் பாஜக அரசு கண்டுகொள்ளாததால் கன மழை வெள்ளத்தில் சிக்கி 40,000க் கும் அதிகமானோர் உணவின்றி தவித்து வருகின்றனர். 

தேசிய பேரி டர் மீட்புப் படையின் (NDRF) 14  குழுக்களுக்கும், மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) 22 குழுக்க ளுக்கும் மற்றும் 6 இராணுவக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை 17,000 பேர் மட்டுமே மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 கனமழை காரணமாக வீடு இடிந்தும், தண்ணீ ரில் மூழ்கியும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரை  காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கிழக்கு ராஜஸ்தானில் இருந்து  சவுராஷ்டிரா பகுதியை நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தில் அடுத்த 72 மணிநேரத்தி ற்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இத னால் மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் அம்மாநில அரசு விடுத்துள் ளது.

 ஏற்கெனவே குஜராத்தின் 12 மாவட்டங்கள் கனமழை வெள் ளத்தில் விழிபிதுங்கி நிற்கும் நிலை யில், மேலும் 72 மணிநேரத்திற்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் குஜராத் மாநிலத்தின் நிலைமை மேலும் மோசமாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

மோடியை புகழ்பாடியே பொழுதைக் கழிக்கும் பாஜக முதல்வர்

கனமழை வெள்ளத்தால் மாநி லத்தின் 50% பகுதிகள் உருக்கு லைந்த நிலையில், குஜராத் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் மீட்பு நடவடிக்கை, உணவின்றி தவிக்கும் மக்கள் நலன் குறித்து பேசாமல் பிரதமர்  மோடியை புகழ்பாடுவதிலேயே பொழுதைக் கழித்து வருகிறார்.

 வியாழனன்று டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறுகையில்,”பிரதமர் நரேந்திர மோடி வியாழனன்று காலை மீண்டும் ஒருமுறை என்னுடன் தொலைபேசியில் உரையாடி நிலைமையை அறிந்து கொண்டார். வதோதராவில் விஸ்வாமித்ரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டுள்ளதால் கவலை தெரிவித்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார். 

ஒன்றிய அரசு அனைத்துவிதமான ஆதரவையும் வழங்கும் என்று மீண்டும் உறுதியளித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு நிகழ்ந்த பொழுது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,”வயநாட்டில் அதீத கனமழை பெய்யும், நிலச்சரிவு நிகழும், உயிழப்பு ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத் தது. ஆனால் கேரள அரசு இதனை கண்டு கொள்ளாததால் வயநாட்டில் பேரழிவு ஏற்பட்டது” என இந்திய வானிலை அறிக்கையில் கூறாததை கூறி அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில்  நாடாளு மன்றத்தில் பேசினார். 

ஆனால் தனது சொந்த மாநி லமான குஜராத், வானிலைஅறிக்கையைகண்டுகொள்ளாததன் காரணமாக வெள்ளத்தில் மிதக்கி றது. 

வானிலை அறிக்கையில் தனி நிபுணத்துவம் கொண்டவர் போல பேசும் அமித் ஷா குஜராத்மாநிலத்திற்காகஎதுவும்கூறவில்லையா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக