"தகுதி"ன்னா என்னா?

 அமித்ஷா தனது மகன் ஜெய்ஷாவை உலகின் அதிபதிகளில் ஒருவராக ஆக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 ஏற்கெனவே பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவராக - எந்த கிரிக்கெட் பின்புலமும் - விளையாட்டு தகுதியும் - விளை யாட்டு அமைப்புகளை நிர்வகிக்க தகுதியும் இல்லாமலே - நியமிக்கப்பட்டு, ஒரு ராஜ்ஜியம் போல அந்தப் பதவியின் ஆடம்பரங்களை அனுப வித்துக் கொண்டிருந்த ஜெய்ஷா, இப்போது சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக முன்னிறுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலக கிரிக்கெட்டில், இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பிசிசிஐ) என்பது மிகவும் பணக் கார, மிகவும் அதிகாரம் வாய்ந்த அமைப்பாக இருக்கிறது என்றால் மிகையல்ல.  

 ஊடகங்களா லும் அரசு நிர்வாகத்தாலும் மிகப் பெரிய அள விற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டு, அதன் வாயி லாக ஒருவித மயக்க நிலைக்கு ஆட்படுத்தப் பட்டுள்ள கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கண்களும் உள்ளமும் கிரிக்கெட் வீரர்களின் லாவகமான ஆட்டங்களை ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில்; பல்லாயிரம் கோடி பெறுமான மிகப் பெரிய ஒப்பந்தங்களை, பேரங்க ளை செய்து முடித்து பணத்தை மடைமாற்றும் சக்தி வாய்ந்த அமைப்பு பிசிசிஐ என்பதை அறிந்து, மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது மகனை அதன் தலைவராக ஆக்கினார். 

எந்தவொரு ரசிகராலும் கண்காணிப்புக்கும் கேள்விக்கும் உள்ளாக்கப்படாத அமைப்பு இது என்பது அமித்ஷா மற்றும் ஜெய்ஷா கும்பலுக்கு வசதியாகப் போய்விட்டது.

பெரும் பணம் குவியும் பிசிசிஐ அமைப்பின் தலைவர்; இந்தியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த நபரின் மகன்- என இரண்டும் சேர்ந்து, எந்த தகுதியுமே இல்லாத ஜெய்ஷாவுக்கு ஒரு பேரரசர் என்ற மமதையைக் கொடுத்தது.

 அந்த  அதிகார ஆணவம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ஒவ்வொரு முறையும் வெளிப் பட்டது என்கிறார் சர்வதேச கிரிக்கெட் கவுன்சி லின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். இந்தக் கூட்டங்களில் இந்தியாவின் உள்துறை அமைச் சர் போலவே ஜெய்ஷா நடந்து கொள்வார் என்கிறார்கள்.

இத்தகைய செல்வாக்கை தொடர்ந்து வலுப் படுத்தி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவ ராகவே ஜெய்ஷா ஆகியிருக்கிறார்.

ஆனால் அடிப்படையில் அவர் மாநில கிரிக்கெட் கவுன்சி லில் நீடிப்பதற்குக் கூட தகுதியற்றவர் என்று, கிரிக்கெட் வணிக விவகாரங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட லோதா கமிட்டி அறிக்கை கூறி யிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய கிரிக்கெட்டில் ஜெய்ஷாவால் பணம் குவித்த சிலர் தவிர, மற்றவர்கள், அவர் சர்வதேச  கிரிக்கெட் கவுன்சில் தலைவராக தேர்வு செய்யப் பட்டதை விமர்சித்துள்ளனர்.

 திரைக்கலைஞர் பிர காஷ்ராஜ், “இந்திய கிரிக்கெட்டின் எல்லாமும் ஆனவர் இப்போது உலகக் கிரிக்கெட்டின் எல்லா மும் ஆகிவிட்டார்” என்று கூறியிருப்பது பொருத்தமான விமர்சனம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக