2ஜியும் செபியும் ஊடகவரைவின்னரும்
பங்குச்சந்தையை ஒழுங்குப்படுத்தும் பணியை செயல்படுத்தி வருவது செபி எனப்படும் பங்கு, பரிவர்த்தனை வாரியம். செபியின் தலைவரை பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ள கேபினட் கமிட்டியே நியமிக்கிறது. அந்த வகையில், கடந்த 2017ம் ஆண்டு 'செபி'அமைப்பின் முழு நேர உறுப்பினராக இணைந்த மாதவி புரி புச், கடந்த 2022ல் இருந்து தற்போது வரை செபி அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.
2017-ல் இருந்து இதுவரை ரூ.16.8 கோடியை ஐசிஐசிஐ வங்கியில் ஊதியமாக மாதவி புரி புச் பெற்றுள்ளதாக காங்கிரசின் பவன் கெரா குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், ''செபி தலைவர் மாதவி, 2017 முதல் 2024 வரையிலான காலக்கட்டத்தில் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வருமானமாக ரூ.16.8 கோடியை பெற்றுள்ளார். செபியின் முழு நேர அதிகாரியாக இருக்கும் மாதவி, ஐசிஐசிஐ வங்கியில் எப்படி ஊதியம் பெறலாம்?'' என பவன் கெரா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய பங்குச் சந்தைகளை அதிகாரத்தைப் பயன்படுத்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் தலைவரான மாதவி புரி பிச் சூறையாடிய முறைகேடுகளை அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக தேசிய பங்குச் சந்தை நிஃப்டியையும் வெளியே தெரியாத மர்ம நபர்கள் சூறையாடிய உடந்தையாக இருந்ததாக அதன் முதலாவது பெண் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணா கைதுசெய்யப்பட்டுசிறையிலடைக்கப்பட்டார்.
இந்திய பங்குச் சந்தைகள் எப்போதும் சர்ச்சைக்கும் பேரிழப்புகளுக்குமான இடமாகவே இருந்து வருகிறது. 'திருபாய்அம்பானி (இன்றைய அம்பானிகளின் அப்பா) காலம் முதல் ஹர்ஷத் மேத்தா, சித்ரா ராமகிருஷ்ணன் தொடங்கி இன்றைய மாதவி புரி பிச் வரை 'பந்தாடப்பட்ட' பொருளாகவே பங்குச் சந்தை இருந்து வருகிறது. அதிலும் பங்குச் சந்தை தொடர்பான முதன்மை பதவிகள் வகித்த பெண்களான சித்ரா ராமகிருஷ்ணனும் மாதவி புரி புச்சும் 'ஆடிய' ஆட்டங்கள்தான் இப்போது எல்லோரையும் தலைகிறுக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியின் முதலாவது பெண் இயக்குநர்தான் சித்ரா ராமகிருஷ்ணன். தேசிய பங்குச் சந்தையின் ரகசியங்கள் அனைத்தையும் ஏதோ ஒரு இமயமலை சாமியாருக்கு 'கடைவிரித்து' விளையாடியவர்தான் சித்ரா ராமகிருஷ்ணன். இதனால் பல்லாயிரம் கோடியை சோ கால்ட் இமயமலை சாமியார் எனும் மர்ம ஆசாமிகள் அள்ளிக் குவிக்க வெளிநாடுகளில் துள்ளித் திரிந்தார் சித்ரா. ஒருவழியாக சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணியவர்; தொலைபேசி ஒட்டுக் கேட்பு விவகாரத்திலும் வசமாக பிடிபட்டவர் சித்ரா ராமகிருஷ்ணன்.
ஆனால் சித்ராவின்சித்துவிளையாட்டுகளை ஏதோ சில சக்திகள் ,ஊடகங்கள் பரபரப்பாக்காமலேயே பம்மிக் கொண்டிருந்தன.ஒன்றுமே இல்லாத 2ஜி க்கு கொடுத்த வெளிச்சத்தில் 1% விழுக்காடு கூட இந்த பார்பண ஊடகங்கள் தரவில்லை.
இப்போது சிக்கியிருப்பவர் மாதவி புரி பிச். இந்திய பங்குச் சந்தையை இப்போது முறைகேடாக பயன்படுத்தி வரும் அதானி குழுமத்தின் பல நூறு வெளிநாட்டு பொலி கம்பெனிகளில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியமான செபியின் தலைவர் மாதவி புரி புச் மற்றும் அவரது கணவரது பெயரிலும் ஏராளமான பங்குகள் இருந்தன என அம்பலப்படுத்தி இருக்கிறது அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கை.இதனை மாதவி புரி புச், அவரது கணவர் மறுத்துள்ளனர்தான்.
ஆனால் கடந்த பல ஆன்டுகளாக அதானி குழுமத்துடன் எப்படி எல்லாம் மாதவி புரி புச் நெருக்கமாக இருந்து ஆதாயமடைந்தார் என ஆதாரங்களை அல்லவா அமெரிக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவிலும் இனிவரும் நாட்களில் இந்த விவகாரம் பெரும் புயலாய் வெடிக்கத்தான் போகிறது.வெடிக்க வேண்டும்.அதுதான் பொருளாதாரத்திற்கு நல்லது.