செல்வ இறையாண்மை?

 பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம் .

ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை.
கோவையில் கலைஞர் நூலகம்: கட்டுமான பணிக்கு டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு.
பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு.

25 நாடுகளில் 130 நகரங்களில்

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதிகேட்டு, 25 நாடுகளில் 130-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொல்கத்தாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், இச்சம்பவத்துக்கு நீதி கேட்டு 25 நாடுகளில் உள்ள 130-க்கும் மேற்பட்ட நகரங்களில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப்பட்டது.

ஜப்பான், ஆஸ்திரேலியா, தைவான், சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் 60 நகரங்களில் இந்த போராட்டம் நடந்தது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள செர்கெல்ஸ் டார்க் சதுக்கத்தில் பெண்கள் அதிகளவில் கூடி, இந்திய பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி வங்காள மொழியில் பாட்டு பாடினர்.


லண்டனில் போராட்டம் நடத்திய மருத்துவர் தீப்தி ஜெயின், கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியில் பயின்றவர். உலகளாவிய போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர் இவர் .

பணக்காரன்-பண முதலை!

லட்சங்களில் சொத்துக்களை வைத்திருந்தால் அவரை லட்சாதிபதி என்போம். கோடிகளில் வைத்திருந்தால் கோடீஸ்வரர், ஆங்கிலத்தில் பில்லியனர் என்பார்கள். 

அதையும் தாண்டினால், டிரில்லியனர் (ஒரு லட்சம் கோடி). இதுவரையிலும், மைக்ரோசாப்ட், நிவிடியோ ஆப்பிள், ஆல்பாபெட், அமேசான், சவுதி அராம்கோ, மெட்டா போன்ற சில பன்னாட்டு நிறுவனங்கள் தான் 1 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை தாண்டி உள்ளன. 

இந்த இடத்தை விரைவில் தனிநபர்களும் பிடிப்பார்கள் என இன்பார்மோ கனெக்ட் அகடமி நிறுவனம் கணித்துள்ளது.

அதன்படி அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் சமூக ஊடகம் போன்ற நிறுவனங்களின் தலைவரும், உலகின் நம்பர்-1 கோடீஸ்வரருமான எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது. 

தற்போது மஸ்க் 237 பில்லியன் டாலர் (ரூ.21 லட்சம் கோடி) சொத்துக்களுடன் 110 சதவீத வருடாந்திர வளர்ச்சியுடன் உள்ளார். இன்னும் 3 ஆண்டில் 2027ல் உலகின் முதல் டிரில்லியனர் ஆகி விடுவார். 

இந்தியாவில் வேலையின்மை அதிகரிக்பும் அதே வரையில் பணக்காரன் மேலும் பணமுதலையாகிறான்.மோடி அரசு அதற்கு சாமரம் வீசுகிறது

குஜராத் தொழிலதிபர் கவுதம் அதானி இப்போது 81 பில்லியன் டாலருடன் (ரூ.6.75 லட்சம் கோடி) இருந்தாலும், 123 சதவீத சராசரி வளர்ச்சியுடன் 2028ல் டிரில்லியனர் ஆவார். 

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான அம்பானி 2033ம் ஆண்டில் டிரில்லியனர் ஆகலாம்.

செல்வ இறையாண்மை?

மோடி அரசு உலகளவில் தனது நிதி இறை யாண்மையை நிலைநாட்டும் பொருட்டு ‘செல்வ இறையாண்மை நிதியத்தை’ உருவாக்க முடிவு செய்துள்ளது. 


அதற்காக நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளையும், சொத்துக்களையும் விற்று நிதி திரட்டுவது என்ற மிக ஆபத்தான பாதையை தேர்வு செய்துள் ளது. கண்ணை விற்று சித்திரம் வாங்குவது என்ப தற்கு மிகச் சிறந்த உதாரணம் இது. 

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி எவ்வி தத் தீர்வும் இல்லாமல் நாடுகளை அதிதீவிர நெருக்கடிகளின் பிடியில் சிக்கச் செய்கிறது. இந்தப் பின்னணியில் பல நாடுகள் தங்களது நிதி இறையாண்மையை உறுதி செய்வதற்காக - அதாவது, எந்தச் சூழலிலும் திவால் ஆகிவிடா மல் நிதி ரீதியாக வலுவாக நிலைநாட்டிக் கொள்வ தற்காக - வலுவான செல்வ ஆதாரங்கள் கொண்ட  நிதியத்தை உருவாக்கி பேணி வருகின்றன. 

குறிப்பாக சீனா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீ ரகம் உள்பட 40 நாடுகள் இத்தகைய நிதியத்தை சமீப காலத்தில் உருவாக்கி வலுப்படுத்திக் கொண்டுள்ளன. இந்தியாவில் இதுவரை அப்படி ஒரு நிதியம் இல்லை. உலகளாவிய பல்வேறு வகையான நெருக்கடிகள் முற்றி வரும் நிலை யில், இத்தகைய ஒரு நிதியத்தை உருவாக்கிக் கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதில் அதிர்ச்சிகரமான அம்சம் என்னவெனில், ஒன்றிய அரசுக்கு சொந்தமான 48 பொதுத்துறை நிறுவனங்களில், அரசுக்கு சொந்த மான பங்குகளை கணிசமாக விற்று அதன்மூலம் 50 லட்சம்கோடி ரூபாயை திரட்டுவது என மோடி அரசு திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்தான். 

இப்படி திரட்டப்படும் நிதியைக் கொண்டு இந்திய இறையாண்மை நிதியத்தை உருவாக்கி, அதை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முத லீடு செய்து பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. 

உலகப் பெரும் முதலாளிகளின் லாபவேட்கை க்கு சேவை செய்யும் விதத்தில் நவீன தாராளமயக் கொள்கைகளை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ள மோடி அரசு தனது ஆட்சிக் காலம் முழுவதிலும் பொதுத்துறை நிறுவனங்களை பலவீனப்படுத்துவது, தனியார்மயமாக்குவது, எஞ்சியுள்ள பங்குகளையும் விற்றுத் தீர்ப்பது, அவற்றின் சொத்துக்களை எல்லாம் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மடை மாற்றுவது என முற்றிலும் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதை தடுத்து நிறுத்த தொழிற் சங்கங்களும், தொழிலாளர் வர்க்கமும் வலுவான போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளன. 

ஆனால் எதற்கும் செவி சாய்க்காத மோடி அரசு, தற்போது ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்க ளின் பங்குகளை தனியாருக்கு வாரி வழங்குவது என ஆலோசித்திருப்பது மிக  மிக ஆபத்தானது. இந்த பொதுத்துறை நிறுவனங்கள் தான் இந்திய நிதி இறையாண்மையின் அடித்தளங்கள் என் பதை மறந்து அவற்றை தகர்க்கப் பார்க்கிறது மோடி அரசு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?