ஓராண்டு நிறைவு.
நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கப்பலை மோதி தாக்குதல்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வின்போது மக்கள் நலப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது தெரியவந்ததால் 4 அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைரீதியான வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பல்வேறு அரசுத்துறையை சேர்ந்த 120 அதிகாரிகள் பங்கேற்றனர்.
சுமார் இரண்டரை மணி நேரம் ஆய்வுக் கூட்டத்தை நடத்திய அமைச்சர், மக்கள் நலத்திட்ட பணிகளை விரைவாக நிறைவேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
முன்னதாக பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டார். அமைச்சரின் நேரடி ஆய்வு மற்றும் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தின் அடிப்படையில், மக்கள் நலத்திட்டப் பணிகளில் ஏற்பட்ட தொய்விற்கு காரணமான 4 அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், சுகாதார ஆய்வாளர் மற்றும் ஆதிதிராவிட நலத்துறையில் பணியாற்றிய ஒரு சமையலர் ஆகியோர் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 விடுதி காப்பாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை தெற்கு வட்டாட்சியர் சரவணன், திருப்பரங்குன்றம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும், இங்கிருந்த பூ.விஜயலட்சுமி மதுரை தெற்கு வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். செல்லம்பட்டி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சொ.கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும், இங்கிருந்த சி.செல்லப்பாண்டியன் செல்லம்பட்டி ஒன்றியத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
மணிப்பூர் அவலம்.
ஓராண்டு நிறைவு.
மணிப்பூரில் சிறுபான்மையினர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு பெரும்பான்மை சமூகமான மெய்தியினருக்கும் பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால், மாநிலத்தில் கலவரம் வெடித்தது.
இதில் குகி, சூமி ஆகிய சிறுபான்மையினத்தை சேர்ந்த மக்கள் பலர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். சாலைகளில் பெண்கள் துணியற்று நடக்க வைக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாகினர். இதனை, மணிப்பூர் காவல்துறையும் வேடிக்கை பார்த்தது.
இது போன்ற சூழ்நிலையில், கடந்த ஆண்டு கலவரம் தொடங்கிய ஓரிரு மாதங்களில், தான் முதல்வர் பதவியிலிருந்து விலகுவதாக சில நாட்களுக்கு நாடகமாடிய, பா.ஜ.க மூத்த தலைவரும், மணிப்பூர் முதல்வருமான பைரன் சிங், அவரது ஆதரவாளர்களின் பேச்சைக்கேட்டு பதவி விலகும் எண்ணத்தை கைவிட்டதாக தெரிவித்தார். இச்செய்தி, தேசிய அளவில் சர்ச்சை ஆனது.
பைரன் நிகழ்த்திய நாடகம் அரங்கேறியும், மணிப்பூர் கலவரம் தொடங்கியும் ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இயல்புநிலையும், அடிப்படை உரிமையும் மணிப்பூர் மக்களுக்கு எட்டாக்கனியாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில், மாநிலத்தில் மீண்டும் அட்டூழியங்கள் வலுக்கத்தொடங்கியுள்ளன. இதனால், அமைதி நிலையை மீட்டுத்தர தவறும் பா.ஜ.க ஆட்சியை எதிர்த்தும், அமைதி வேண்டும் என்ற கோரிக்கையை வலுயுறுத்திம் மணிப்பூர் மாணவர்களும், பெண்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர்.
“கடந்த ஆண்டு, பைரன் நிகழ்த்திய நாடகம் உண்மையில் நிகழ வேண்டும், முதல்வர் பதவி விலக வேண்டும்” என்ற முழக்கங்களும், மணிப்பூரில் வலுக்கத்தொடங்கியுள்ளன.
எனினும், ராஜ்பவன் செல்வதையும், மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களை அழைத்துப் பேசுவதையும் மட்டுமே செய்து வரும் மணிப்பூர் முதல்வர் பைரன். கலவரத்தை முழுமையாக முடித்து, அமைதியை நிலைநாட்ட தவறி வருகிறார்.
என்ன நடந்தாலும், ஆட்சியை தக்க வைப்பதே முதன்மை நோக்கம் என்ற எண்ணத்துடன் பைரன் சிங் செயலாற்றி வருவது, அண்மையில் வெளியான மணிப்பூர் டேப்பின் (Manipur Tape) வழி அம்பலப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
------------------------------------