மோசடி வியாபாரம்!

 மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்?
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை :

 "மதுரை எய்ம்ஸ் குறித்து, பாஜ தலைவர்கள் இங்கொன்றும், அங்கொன்றும் பேசுவதை எடுத்து கொள்ள முடியாது. ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறுவதை மட்டுமே எடுத்து கொள்ள முடியும். மதுரை எய்ம்ஸ்சுக்கு எத்தனை முறை தான் ஒப்பந்தபுள்ளியில் கோளாறு வரும். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுமான பணிக்கு எப்படி கோளாறு வருகிறது. இது தொடர்ச்சியாக, நமக்கான பங்கை மறுக்கும் வேலை."

அரசு கல்லூரியில் சீட் வழங்காமல் அலைக்கழிப்பு.மருத்துவ கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பு.
சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி என்கவுண்டரில் சுட்டுக் கொலை.
மூன்றாம் பாலினத்தவர் என்பதற்காக கால்நடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்ததை நிராகரிக்க கூடாது: மாணவர் சேர்க்கை குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
குஜராத்தில் புதிதாக உண்டான கடவுள். மோடி சாமி பக்தர்களாக மாறிய பா.ஜ.க நிர்வாகிகள்.
தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால் தமிழகத்தில் சமவெளி பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது 40 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் அதிகரிக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மோசடி வியாபாரம்!


உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தபோதும், ஒன்றிய பாஜக  கூட்டணி அரசு அதன் பலனை இந்திய மக்க ளுக்கு வழங்க மறுக்கிறது.


 எண்ணெய் விலையை ஒன்றிய அரசு தீர்மானிப்பதில்லை. சந்தை தான் தீர்மானிக்கிறது என்று ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும் அல்லவா? 

எண்ணெய் விற்பனைச் சந்தையில் பொ துத்துறை நிறுவனங்கள் மட்டும் பங்கேற்க வில்லை; அம்பானி போன்ற பிரதமர் மோடியின் கார்ப்பரேட் கூட்டாளிகளும் இந்த வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் தன்னுடைய கூட்டாளிகளின் கொள்ளை லாபம் குறைந்துவிடக் கூடாது என்ப தற்காகவும் தான் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுவதில்லை.

கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் தில்லியில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை 107.49 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.51 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.28 ஆகவும் இருந்தது.

 தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 72.48 டாலராக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை 32.5 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஒருபோதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டதில்லை.

இப்போதுள்ள நிலவரப்படி பெட்ரோல் லிட்ட ருக்கு ரூ.48.27 ஆகவும், டீசல் விலை ரூ.69 ஆகவும் விற்க முடியும். ஆனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.94.72 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.87.62 ஆகவும் உள்ளது. 

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் எரிபொருட் கள் மீது வரி விதித்து ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு ஒன்றிய அரசு வருவாய் ஈட்டியுள்ளது. 

மறுபுறத்தில் ரஷ்ய - உக்ரைன் மோதலால் இந்தியாவுக்கு சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் வழங்கியது. 

ஆனால் இதை பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்காமல் ரிலை யன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கி அந்நிறுவனம் கொள்ளையடிக்க வழிவகுத்ததோடு, கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மானியமும் வழங்கிய ‘கருணைமிக்க’ அரசாக மோடி அரசு உள்ளது.

மறுபுறத்தில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் அதன் பலன் ஒரு நயா பைசா கூட கோடானுகோடி இந்திய மக்க ளுக்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் பிரதமர் மோடி குறியாக இருக்கிறார். 

சமையல் எரிவாயு மானியமும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டு விட்டது. சொந்த நாட்டு மக்களை கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் சுரண்டி இந்திய நாட்டின் முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. 

எரிபொருள் என்பது இந்திய மக்கள் வாழ்வையும், எரிக்கும் ஒன்றாகவே மோடி பாசிச அரசு ஆக்கி இருக்கிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?