இடதுசாரிகள் கையில் இலங்கை!

  பூமியிலிருந்து 180 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஆர் டோராடஸ் (R Doradus) எனும் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இறந்து கொண்டிருக்கும் நட்சத்திரமான இது நமது சூரியனை விட 350 மடங்கு பெரிதாகி உள்ளது.

தமிழன்பிரதமராகநாட்டைதயார்படுத்தவேண்டும்.பொதுக்குழுவில்கமல்ஹாசன்

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கோயில், கட்டிடங்கள் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை.
திருப்பதியில் மீண்டும் புனிதத் தன்மையுடன்(?)லட்டுதயாரிப்பு.முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தைநெருங்குகிறது:கணக்கெடுப்பில் தகவல்.

பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு; பாஜ நிர்வாகிகள் மீது போலீசில் புகார்.

இடதுசாரிகள் கையில் இலங்கை!

இலங்கையில்  மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியான ஜே.வி.பி., தலைவர் அனுரா திசநாயகே, (தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் ) 52 சதவீதம் ஓட்டுகளுடன் முன்னணியில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சஜித் பிரேமதாசா இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்கே 3வது இடத்திலும், நமல் ராஜபக்சே 4 வது இடத்திலும் உள்ளனர்.

தெற்காசியாவில், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத்தீவு, மேற்கு நாடுகளுக்கு செல்லும் கடல் வழியில் அமைந்துள்ளது.

இந்தியாவுக்கு அருகே அமைந்திருப்பதாலும், இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் இருப்பதாலும், சீனாவும் தளம் அமைக்க ஆர்வம் காட்டும் நாடாக இலங்கை உள்ளது.


இப்படி கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை, 30 ஆண்டுக்கும் மேலாக உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிந்த பிறகு, பேராசை பிடித்த ராஜபக்சே குடும்பத்தினரால் நாடு சந்தித்த சிரமங்கள் ஏராளம்.


அவற்றை கடந்து, இப்போது புதிய தேர்தலை நடத்தி முடித்துள்ளது இலங்கை. தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது.


இதில், தற்போதைய நிலவரப்படி அனுரா குமார திசநாயகே, 51 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளார். இன்று மதியத்திற்குள் உறுதியான நிலவரம் தெரியும் வாய்ப்புள்ளது.


குறைந்தபட்சம் 50 சதவீதம் ஓட்டு பெற்றால் மட்டுமே, அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

வேட்பாளர் எவரும், 50 சதவீதம் ஓட்டு பெறவில்லை எனில், மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.


தற்போதைய நிலவரப்படி தேவையான 50 சதவீதம் ஓட்டுகளை அனுரா பெற்றுவிடும் வாய்ப்புள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் ரணில் சஜித் இருவரும் மிகவும் குறைவான ஓட்டு மட்டுமே பெற்றுள்ளனர்.


இலங்கை அதிபர் தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கும் அனுரா குமார திசநாயகே, 56, தற்போதைய பார்லிமென்டில் எம்.பி.,யாக இருக்கிறார். இவர் ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி., கட்சியின் தலைவர்.


ஜனதா விமுக்தி பெரமுனா (தமிழில், மக்கள் விடுதலை முன்னணி என்று பொருள்) இலங்கையில் செயல்படும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சித்தாந்த அடிப்படையிலான கம்யூனிஸ்ட் கட்சி. அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளில் இரண்டு முறை ஈடுபட்ட இந்த கட்சி, இப்போது தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளது.


இந்த கட்சியின் தலைவரான அனுரா குமார திசநாயகே, 1968ல் அனுராதபுரம் மாவட்டத்தில் கூலித்தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர். 1995ல் இயற்பியல் பட்டப்படிப்பை முடித்தார்.

1987 முதலே ஜனதா விமுக்தி பெரமுனாவில் இணைந்து செயல்பட்டு வந்தார். 1995ல் சோஷலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும், ஜனதா விமுக்தி பெரமுனாவின் மத்தியக்குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.


2000 ஆண்டு முதல் எம்.பி.,யாக இருக்கிறார். சந்திரிகா குமாரதுங்கா அரசில், வேளாண்மை, கால்நடை மற்றும் பாசனத்துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். 2005ல் சந்திரிகா அரசில் இருந்து பிற ஜே.வி.பி., அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தார்.


2015 முதல் 2018 வரை, எதிர்க்கட்சிகளின் தலைமை கொறாடா ஆகவும் இருந்தவர். 2019ல் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை தோற்றுவித்தார். அதன் வேட்பாளராக, அப்போது நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவருக்கு 3 சதவீதம் ஓட்டுக்களே கிடைத்தன.


கோத்தபயா ராஜபக்சே அதிபராக தேர்வான நிலையில், கோவிட் தொற்று ஏற்பட்டது; கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில், கோத்தபயா அரசுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. அவற்றை முன்னின்று நடத்தியவர்களில் அனுராவும் ஒருவர்.


பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக, அதிபர் ரணில் மேற்கொண்ட ஐ.எம்.எப்., உதவி திட்டத்தை அனுரா குறை கூறி வருகிறார். ஐ.எம்.எப்., கடும் நிபந்தனைகளை பேசி தளர்த்த வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக