திருப்பதி அரசியல்.

 போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள்  மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு.

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவு.
மனதளவில் உடைந்துவிட்டார்; 56 அங்குல மார்பை பற்றி பெருமை பேசும் மோடி இப்போது இல்லை:-  ராகுல்காந்தி
.
சதிஷகரில் பாம்பு கடித்து இறந்த வாலிபர் இறுதி சடங்கில் பாம்பை எரித்த கிராம மக்கள்.

மறைந்த சீதாராம் யெச்சூரியின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி சமதர்ம இந்தியாவை உருவாக்க பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
கும்மிடிப்பூண்டியில் கொரியர் மூலம் குட்கா கடத்தல்: 300 கிலோ பறிமுதல்.
லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை: 274 பேர் பலி, 1000 பேர் படுகாயம்: ஊரை காலி செய்து தலைநகரில் மக்கள் தஞ்சம்.
போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய  இந்திய சித்த மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சுப்பையா கைது

திருப்பதி அரசியல்.

திருப்பதி லட்டு விவகாரத்தை முன்வைத்து, அரசாங்கத்தை ஆலயங்களிலிருந்து வெளி யேறச் சொல்லும் சங்- பரிவார அமைப்புகளின் பிரச்சாரம் அப்பட்டமான அரசியல் மற்றும் சுய லாபம் எனும் தீய உள்நோக்கம் கொண்டதாது.:

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டுவில் விலங்கு கொழுப்பு இருந்ததாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திடுக்கிடத்தக்க வகையில் பேசியிருந்தார். எந்தவித ஐயத்திற்கும் இடமின்றி நிரூபிக்கப்படுவதற்கு முன்பாகவே பதற்றத்தை உருவாக்கும் சந்திரபாபு நாயுடுவின் கருத்து கோடிக்கணக்கான பக்தர்களின் மனதைக் கடுமையாக பாதிக்கக் கூடியது; 

அவரது பேச்சு அரசியல் ஆதாயத்திற்காக ஒரு முதலீடாகவே பார்க்கப்படுகிறது.  உண்மையில், அப்படி ஒரு குற்றம் நடந்திருந்தால் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். லட்டுவில் மட்டுமின்றி எந்தவொரு பொருளிலும் மருந்து பொருட்களிலும் கலப்படம் செய்வது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இதைச் சாக்காக வைத்து சங்-பரிவார் அமைப்புகளும், ஆன்மீக போர்வையில் ஒளிந்து கொண்டிருக்கும் கார்ப்பரேட் சாமியார்களும், உடனடியாக அனைத்து ஆலய நிர்வாகங்களும் இறை நம்பிக்கையுடைய மற்றும் பக்தர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். 

அதுவே, இத்தகைய குறைபாடுகள் நிகழாமல் இருப்பதற்கு வாய்ப்பாக இருக்கும் என்று கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறார்கள். 

 பாஜக-வின் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சியின் அர்ஜூன் சம்பத், ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது. ஆன்மீகப் போர்வையிலிருந்த ஆசாராம் பாபு, குர்மித்சிங் ராம் ரஹீம், பிரேமானந்தா ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டவர்கள்.  நித்தியானந்தா பல குற்றங்களுக்காக தலைமறைவாகி இருக்கிறார்.

 காஞ்சி சங்கராச்சாரியார் கூட குற்றவாளி என கைது செய்யப்பட்டிருக்கிறார். இப்படி இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

இன்னொரு பக்கம், பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டு சங்- பரிவார் அமைப்புகளில் இருப்ப வர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வ ரர், காஞ்சி ஏகாம்பரநாதர், கன்னியாகுமரி கோதேஸ்வரம் பத்ரகாளி அம்மன், கன்னியா குமரி வெள்ளிமலை பாலசுப்ரமணியசாமி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சென்னை முத்துக்குமாரசுவாமி, தஞ்சாவூர் பந்தநல்லூர் பசுபதி ஈஸ்வரர் ஆகிய திருக்கோவில்களுக்கும், கடலூர் பண்ருட்டி நகர் குருலட்சுமி அம்மாள் அறக்கட்டளைக்கும் சொந்தமான நிலங்களை அபகரித்துள்ளனர். 

 தற்போது அவர்களிடமிருந்து நிலங்களை இந்துசமய அறநிலையத்துறை மீட்டுள்ளது. ‘சிவன் சொத்து குல நாசம்’ என்று ஊருக்கு போதித்துக் கொண்டு கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள், தங்களைக் ‘கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்’ என்று சொல்லிக் கொண்டவர்களே.

சிதம்பரம் பொது தீட்சிதர்கள் பக்தர்களின் காணிக்கையை கணக்கில் காட்டவில்லை என்கிற வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது. எனவே, கோவில்களும், கோவில் சொத்துக்க ளும் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதே பாது காப்பான ஏற்பாடாகும்.

 இந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே தான் ஏற்கனவே தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்த ஆலயங்களும், ஆலய சொத்துக்களும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதற்கு மாறாக, ‘அரசே ஆல யங்களிலிருந்து வெளியேறு’ என்பது அப்பட்ட மான அரசியல் மற்றும் சுய லாப நோக்கம் கொண்டதாகும்.

 சங்- பரிவார அமைப்புகளின் தீய உள்நோக்கம் கொண்ட இத்தகைய கோரிக்கை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நடைபெறும் எந்தவொரு நிகழ்ச்சியையும் மதச்சாயம் பூசி மதவெறி பிரச்சா ரம் செய்வதும், மத வன்முறையை உருவாக்கு வதுமே இவர்களின் வழக்கமாக இருந்து வரு கிறது.

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டது மதமாற்றத்தி னால் என பிரச்சாரம் செய்து கலவரத்தை தூண்ட முயன்றார்கள். பின்னர் சிபிஐ விசாரித்து அப்படி எதுவும் நடக்கவில்லை என்றுதெளிவுபடுத்திவிட்டது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் தனியார் நர்சரி பள்ளியில் கழிப்பறைக்கு வந்த பிரீ கேஜி படிக்கும் மூன்றரை மற்றும் 4 வயது சிறுமிகளுக்கு அங்கு பணியில் இருந்த அக்ஷய் ஷிண்டே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.


இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெற்றோர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அக்ஷய் ஷிண்டே கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அக்ஷய் ஷிண்டேயை காவலில் எடுக்க தானே போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் இதற்கான அனுமதி வாங்கிய அவர்கள், அக்ஷய் ஷிண்டேயை போலீஸ் வேனில் அழைத்துக் கொண்டு, தானே குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.


மாலை 6.30 மணியளவில் மும்ப்ரா பைபாஸ் அருகே வரும்போது, தப்பிச் செல்லும் நோக்கில் அக்ஷய் ஷிண்டே போலீஸ் வாகனத்தில் போலீஸ்காரர் வைத்திருந்த துப்பாக்கியை பறித்து போலீசை நோக்கி 3 ரவுண்டுகள் சுட்டுள்ளார்.


இதில் ஒரு போலீஸ் மீது குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. ேபாலீசார் திருப்பி சுட்டதில் அக்ஷய் ஷிண்டே பலியானார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக