அசத்தும் தமிழர்கள்!

 குஜராத்தில் பயங்கர மழை கிட்டத்தட்ட 50 பேர் வரை பலி என்ற செய்திகள் எல்லாம் ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது அப்படி எத்தனை சென்டிமீட்டர் மழை பெய்தது என்று பார்த்தால் அதிகபட்சமாக ஒரு சில இடங்களில் 27 செரி மீட்டர் வரை மழை பெய்துள்ளது .. 

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கடந்த வருடம் தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 100 சென்டிமீட்டர் மழை அடித்து வெளுத்தது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது ஆனால் இவ்வளவு தூரம் பலி எணிக்கை வரவில்லை .

அதில் நான்கில் ஒரு பகுதி கூட மழை குஜராத்தில் பலியாகவில்லை ஆனால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு என்று செய்து வருகிறது..

 ஒட்டுமொத்தத்தில் கடந்த 30 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு என்ற எதையுமே செய்யாமல் மக்களின் வரிப்பணத்தை ஒட்டுமொத்தமாக ஆட்டை போட்டு குஜராத்தின் மோடியின் பாஜக கும்மியடித்துள்ளது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது..

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 31 பேர் உயிரிழப்பு .


போலீஸ் கமிஷனராக அருண் பதவி ஏற்ற பின் சென்னையில் 56 நாட்களில் குண்டாசில் 150 பேர் கைது: ‘ஏ’ கேட்டகிரி ரவுடிகள் மட்டும் 31 பேர் சிறையில் அடைப்பு.

இன்னும்ரூ7,261 கோடி மதிப்புள்ள ₹2000 நோட்டுகள் பொதுமக்களிடையே புழக்கத்தில்  உள்ளது- ரிசர்வ் வங்கி.
மசூதிக்குள் புகுந்து தாக்குவோம் பாஜ எம்எல்ஏ சர்ச்சை பேச்சு: மகாராஷ்டிரா போலீசார் வழக்குபதிவு.

காவலர் உடற் தேர்வில்

12 பேர் பலி!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீஸ் தேர்வுக்கான உடல்தகுதி தேர்வு ராஞ்சி, கிரிதிஹ், ஹசாரிபாக், பலமு, கிழக்கு சிங்பூம், சாஹேப்கஞ்ச் மாவட்டங்களில் உள்ள ஏழு மையங்களில் ஆகஸ்ட் 22 அன்று தொடங்கியது. 

ஆகஸ்ட் 30ம் தேதி வரை மொத்தம் 1,27,772 விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வில் கலந்து கொண்டனர். 

அவர்களில் 78,023 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். செப்.9ம் தேதி வரை உடல்தகுதி தேர்வு நடப்பதாக இருந்தது. ஆனால் இதுவரை நடந்த உடற்தகுதித்தேர்வில் போது மொத்தம் 12 பேர் பலியானது தெரிய வந்துள்ளது.

பாலமுவில் உள்ள தேர்வு மையத்தில் 4 பேரும் , கிரிதிஹ், ஹசாரிபாக்கில் தலா இரண்டு பேரும், ராஞ்சியின் ஜாகுவார் மையத்திலும், கிழக்கு சிங்பூமின் மொசபானி, சாஹேப்கஞ்ச் மையங்களிலும் தலா ஒருவரும் உயிரிழந்ததாக ஐஜி (செயல்பாடுகள்) அமோல் வி ஹோம்கர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக இயற்கைக்கு மாறான மரணம் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து மையங்களிலும் மருத்துவக் குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ், நடமாடும் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே போலீஸ் அதிகாரிகளின் தவறான நிர்வாகத்தால் இந்த மரணங்கள் நிகழ்ந்ததாகக் கூறி, ராஞ்சியில் உள்ள ஆல்பர்ட் எக்கா சவுக்கில் ஜேஎம்எம் தலைமையிலான அரசுக்கு எதிராக பாஜ இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதை தொடர்ந்து போலீஸ் தேர்வுக்கான உடல்பரிசோதனையை அடுத்த 3 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார். அவர் கூறுகையில்,’ போலீஸ் தேர்வில் பங்கேற்ற 12 பேர் இறப்பிற்கான காரணத்தைக் கண்டறிய சுகாதார நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இனி உடல்தகுதி தேர்வுகள் காலை 9 மணிக்குப் பிறகு நடத்தப்படாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாரா ஒலிம்பிக்.

அசத்தும் தமிழர்கள்!

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  இதன் ஒரு பகுதியாக 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வாலும் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். மேலும் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் எஸ்.எச்.1 பிரிவில் இறுதிப்போட்டியில் 8 வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியில், இந்திய வீராங்கனை ரூபினா 211.1 புள்ளிகள் பெற்று 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

அதன் தொடர்ச்சியாக பிரீத்தி பால் வெண்கல பதக்கம், ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் நிஷார் குமார்ஜே வெள்ளிப் பதக்கம் எனத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இதனையடுத்து ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிதேஷ் குமார் நேற்று (02.09.2024) தங்கப் பதக்கம் வென்றார்.

இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். 

இந்த நிலையில், இன்று தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு வீராங்கனை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பேட்மிட்டன் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-26 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் என்ற வீராங்கனை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதற்கிடையில், ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் வீசி இந்தியாவைச் சேர்ந்த வீரர் சுமித் அண்டில் தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக