கொழுப்பு லட்டு?
திருப்பதி லட்டு தயாரிக்க கடலைமாவை பூந்தியாக்க எண்ணை அல்ல சுத்தமான ஆவின (பசுவின்)நெய்யே பயன் படித்துவார்கள் அதனால்தான தனி சுவை்
ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்டநெய் கலப்படமானது என்றும், அதில் பன்றிக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது 4 ஆய்வக பரிசோதனைகளிலும் உறுதியாகி இருப்பதாகவும் திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர்
“திருப்பதி பெருமாள் கோயிலுக்கு நெய் சப்ளை செய்பவர்கள் தரமான நெய்யை சப்ளை செய்கிறார்களா என்பதை பரிசோதிக்க கோயிலுக்குச் சொந்தமாக ஆய்வக வசதி இல்லை.
வெளியே ஆய்வு செய்யலாம் என்றால், ஆய்வகக் கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. நெய் சப்ளை செய்பவர்கள் இதை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன.
எனவே நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும் ஒப்பந்தக்காரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளோம். அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடங்கப்படும். அதோடு, சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, திருப்பதி பெருமாள் கோயிலில் பிரசாதத்துக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக ஆந்திரப் பிரதேச அரசிடம், ஒன்றிய அரசு அறிக்கை கோரியுள்ளது.
.
தேவஸ்தானம் அதிகாரிகள் தவறு அதிகாரியை சிறைச்சாலை அடைக்கப்படவேண்டும் அதிகப்படியான நெய் தயாரிப்பு நிறுவனம் மாட்டு கொழும்பு பயன்பாடுகள் அதிகம் வருடத்தில் ஐம்பது ஆயிரம் கோடி டன் ஏற்றுமதி செய்யும் நாடு நம் நாடு அந்த இறைச்சி வரும் கொழும்பு உருக்கி விற்பனை வருகிறது ஆவின் நெய் மட்டுமே சுத்தமானது பால் கோவா மாதிரி இருக்கும் மற்றவை உருகி எண்ணெய்போல் இருக்கும் இவைகள் மாட்டின் கொழுப்பு எனக் கண்டு கொள்ளலாம்.
திருப்பதி லட்டு தயாரிப்பு குத்தகைதாரர் நல்ல வசதியாக சம்பாதித்துள்ளார்.
அவரின் தற்போதைய சொத்து மதிப்பி ஐநூறு கோடிகளைத்தாண்டும்.
தனதுமகளுக்குசிலமாதங்களுக்குமுன்னர்தான் ஐம்பது கோடிகளை செலவிட்டு மணமுடித்தார். லட்டு தயாரிக்க திண்டுக்கள் AR டைரியை ஒப்பந்நமிட்டு கொழுப்பு நெய்யயை அவ்ர்தான் வாங்கியிருப்பார்.ஜெகன்மோகனுக்கு என்னபங்கு எனத் தெரியவில்லை.
இனி கவலை இல்லை. சந்திரபாபுவின் ஹெரிட்டேஜ் டைரி மூலமாக சுத்தமான பசு நெய் மட்டுமே வாங்கலாம்.பிரச்னை வராது.