சோதித்து பாருமே?
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே செம்மஞ்சேரியில் நடந்த சாலை விபத்தில் 4 பேர் பலி
திறனிருந்தால் சோதித்து பாருமே?
மாநில கல்வித் திட்டம் குறித்து தமிழ்நாடு ஆளுநரின் அவதூறு கருத்துக்கு அமைச்சர்கள் முனைவர் க.பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி!
இதுகுறித்து சென்னை காயிதே மில்லத் கல்லூரி 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசியதாவது:
2006 ஆம் ஆண்டே சமச்சீர் கல்வியை கொண்டு வந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் சி.பி.எஸ்.சி.க்கு நிகராக நம்முடைய அரசு பள்ளி பாடப்பிரிவும் திறன் பட இருக்கிறது. அதற்கு உதாரணம் இந்தியா மட்டுமல்லாமல் உலகமே பாராட்டுகின்ற இஸ்ரோவில் பணியாற்றும் நிலவை ஆராய்ச்சி செய்யும் வீர முத்துவேல். அரசு பள்ளியில் படித்து பாலிடெக்னிக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரியிலும் படித்து சிறந்து விளங்கு கிறார் என்றால் நம்முடைய உயர்கல்வி உடைய பாடப்பிரிவுதான்.
ட்ரோன் மூலம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து தற்போது சிறந்து விளங்குகிறார்கள் நம்முடைய பல்கலைக்கழக மாணவர்கள் அதற்கும் முதன்மையாக இருப்பது நம்முடைய பாடப்பிரிவு தான்.பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வியில் நம்முடைய பாடப்பிரிவு சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் தான் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் சீரான பாடப்பிரிவை கொண்டு வந்தது திராவிட மாடல் ஆட்சியில்தான்.
படிக்கும் போதே திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சரின் ஆழ்ந்த சிந்தனையில் உருவானது தான் நான் முதல்வன் திட்டம். இன்று ‘நான் முதல்வன் திட்டம்’ மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
கல்வி கூடங்கள் எண்ணிக்கை மட்டும் உயர்ந்தால் போதாது, கல்வித் தரத்தையும் உயர்த்த வேண்டும் அதுதான் நான் முதல்வன் திட்டம் முக்கிய நோக்கமாகும்.
அறிவுத்திறன் வாய்ந்த பாடத்திட்டங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. ஆரம்பப் பள்ளிகளில் இருந்து உயர்கல்வி வரை சிறந்த பாடத்திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் கூறினார்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆய்வக உதவியாளருக்கான பயிற்சி சான்றிதழ் மற்றும் பயிற்சி கட்டகம் வெளியீட்டு விழா திருச்சி தேசிய கல்லூரி பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையிலுள்ள ஆய்வக உதவியாளர் பணியிடத்தில் பணிபுரியும் 4786 ஆய்வக உதவியாளர்களுக்கு ஏப்ரல் மற்றும் மே 2024 இல் பணியிடைபயிற்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 3020 ஆய்வக உதவியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு ஆய்வக உதவியாளர்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கி பயிற்சி கட்டகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
ஒருங்கிணைந்த கல்வி மூலமாக ஒன்றிய அரசு நிதி வழங்கிக் கொண்டுள்ளது. இந்த வருடம் நிதி ரூ. 2153 கோடி நிதியை வழங்கவில்லை இதனால் கேள்விக்குறியாக உள்ளது மாணவர்களின் கல்வி மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் உள்ளிட்டவை பாதிக்கப்படும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஒன்றிய அமைச்சரை இரண்டு முறை சந்தித்து கருத்துகளை தெரிவித்தோம். இது குறித்து பார்த்து சொல்கிறோம் என கூறினார் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்பு சந்தித்து நிதி வரவில்லை என கூறினோம். நீங்கள் தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால் அரை மணி நேரத்தில் நிதி ஒதுக்குவதாகத் தெரிவித்தார், நாங்கள் 3 , 5 , 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு, மும்மொழி கொள்கை , குலக்கல்வி திட்டம் மறைமுகமாக கொண்டுவருவது உள்ளிட்ட பாதகங்களை கூறியும் நீங்கள் யோசித்துக் கூறுங்கள் என சொல்லிவிட்டார்.
இதை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர் என்ன கூறுகிறாரோ அதை சார்ந்து எங்கள் நடவடிக்கை இருக்கும்.
ஆளுநர் மாநில பாடம் திட்டம் குறித்து கூறிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பள்ளி நூலகங்களில் டி.என்.பி.எஸ்.சி. போட்டி தேர்வுகள் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாநில பாடப் புத்தகத்தில் இருந்து தான் படிக்கின்றனர். யுபிஎஸ்சி முதற்கொண்டு மாநில பாட புத்தகத்தில் தான் படிக்கின்றனர். வேண்டுமென்றால் ஆளுநரை அழைத்துச் சென்று போகிறேன். அங்கு போட்டித் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களிடம் அவரே கேள்வி கேட்கட்டும் என்றார்.
ஏமாற்றாதே!
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க 14ஆயிரம் கோடி ரூபாயில் ஏழு திட்டங்கள் என்று ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்களன்று தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதா வது பொருளாதார விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்குத்தான் இவ்வளவு ‘பில்டப்’ கொடுத்தி ருக்கிறார் அஸ்வினி வைஷ்ணவ்.
இந்தத் திட்டங்களால் விவசாயிகளின் வரு மானம் எப்படி அதிகரிக்கும்? உண்மையில் இந்தத் திட்டங்கள் விவசாயிகளுக்கு பெரிதாக எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை. வேளாண் துறை சார்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கிடைக்கும். ஓரிரு அரசுத்துறைகள் மூலம் பாஜக வின் இந்துத்துவா கல்விக் கொள்கையைத் திணிப்பதற்கு அவை பயன்படும். இதில் விவசாயி களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாய் அதிக ரிப்புக்கு வாய்ப்பு எங்கே இருக்கிறது? விவசாயி கள் ஏமாற மாட்டார்கள்.
இந்நிலையில் திடீரென விவசாயிகள் மீது அக்கறை கொண்டுள்ளது போல காட்டிக் கொள்வதன் பின்னணி என்ன? ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் தான் காரணம். பஞ்சாப், ஹரியானா மாநில எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் 200 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலை யில் உச்சநீதிமன்றம் விவசாயிகளின் பிரச்சனை களைத் தீர்க்க நிபுணர் குழுவை அமைக்க உத்தரவிட்டிருந்தது.
தற்போது முன்னாள் நீதிபதி நவாப் சிங் தலை மையில் உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைத்துள்ளது. அத்துடன் அதன் முதல் கூட்டம் ஒரு வாரத்துக்குள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. சௌத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண் பல்கலை.துணைவேந்தர் பி.ஆர்.கம்போஜிடம் நிபுணர் ஆலோசனை பெறுமாறும் குழுவுக்கு வழிகாட்டியுள்ளது. அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையிலேயே ஒன்றிய அரசு மேற் கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான மக்களின் கோபாவேசத்தையும் மல்யுத்த வீராங் கனை வினேஷ் போகத்துக்கு இழைத்த அநீதிக்கு எதிரான அலையையும் சமாளிக்கவே இந்த திசை திருப்பும் வேலையில் இறங்கியுள்ளது. ஆயினும் இவை எதுவும் பாஜகவுக்கு பயனளிக்கப் போவதில்லை.