புல் புல் பறவை கதை
குஜராத், மழை வெள்ளத்தில் வந்து கூட்டம் கூட்டமாக வேட்டையாடும் முதலைகளால் அதிர்ச்சி.
1000 ஆண்டுகள் பழமையான சீர்காழி சிவன் கோயிலுக்கு சொந்தமான 200 ஏக்கர் நிலத்தை தருமபுரம் ஆதீனம் விற்றதாக புகார்.அறநிலைய துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதி மன்றம் உத்தரவு.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த 10 நிறுவனங்களை அதானி குழுமம் வாங்கியது.
அந்நிறுவனங்களின் ரூ.62,000 கோடி கடனுக்கு வெறும் ரூ.16,000 கோடியை மட்டும் பொதுத்துறை பெற்றுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இது குறித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எச்டிஐஎல் நிறுவனமும் ஒன்று.
இந்நிறுவனம் ரூ.7,795 கோடி கடன் வாங்கியிருந்த நிலையில், அதானி புராபர்ட்டீஸ் நிறுவனம் வெறும் ரூ.285 கோடி செலுத்தி வாங்கி உள்ளது. மீதமுள்ள 96 சதவீத கடனை தள்ளுபடி செய்துள்ளது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் அழகான வார்த்தை ‘ஹேர்கட்’.
இவ்வாறு 10 நிறுவனங்கள் ரூ.62,000 கோடி செலுத்த வேண்டிய நிலையில் அதானி குழுமம் ரூ.16,000 கோடியை மட்டும் செலுத்தி உள்ளது. பாக்கி 74 சதவீத கடனை பொதுத்துறை வங்கிகள் ஹேர்கட் செய்துள்ளன. ஆனால் மாணவர்களின் கல்விகடனை வேலையில்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்யாமல் ஏழைமாணவர்களை தற்கொலை செய்யுமளவு தள்ளிஙிடுகின்றன இதே வங்கிகள்.
பல்வேறு நிதி மோசடிகளால் குற்றம்சாட்டப்படும் அதானி லாபத்தை பெருக்க, அரசு அமைப்புகளே சலுகைகளை அள்ளித் தருகின்றன.இவ்வாறு கூறி உள்ளார்.
புல் புல் பறவை கதை இல்லாததால்“புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதை இல்லாத ஏமாற்றத்தில் ஆளுநர் பேசுகிறார்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:–
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. அண்மையில் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.
முதல் 50 அரசு பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழ்நாடு அரசின், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் இடம் பிடித் துள்ளன.
அதிலும், இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.இப்படி தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது.
இதனால்தான் ஒன்றிய அரசின் குலக்கல்வியை போதிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது.
மேலும் இருமொழி கொள்கையிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இதை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு, கல்விக்கு தரவேண்டிய நிதியை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
தற்போது ஆளுநரை வைத்து மாநில அரசின் பாடத்திட்டத்தை விமர்சிக்க தொடங்கி இருக்கிறது.தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, ‘‘தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது” என பேசியுள்ளார்.
ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கண்டித்துள்ளனர். மேலும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ‘‘மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை
ஆளுநருக்கும் உண்டு” என ஆளுநரின் பேச்சு உள்ளது.
இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. தமது அறிக்கையில் கூறியுள்ளார்.