தரமில்லையா? யாருக்கு??

 மாநி­லப் பாடத் திட்­டத்­தைப் பற்றி கவலை தெரி­வித்­தி­ருந்த ஆளு­நர் ரவி, ‘போட்­டி­கள் நிறைந்த உல­கத்­துக்கு தகு­தி­யான அள­வில் பாடத்­திட்­டம் இல்லை’ என்று சொல்லி இருந்­தார். தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மாண்­பு­மிகு மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் ஒவ்­வொரு திட்­ட­மும் தமிழ்­நாட்டு மாணவ, மாண­வி­ய­ரை­யும் இளை­ஞர்­க­ளை­யும் தகு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்ளது என்­பதை அறி­யத் தவ­றி­விட்­டார் ஆளு­நர்.



2030ஆம் ஆண்­டிற்­குள் ஒரு டிரில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் பொரு­ளா­தா­ரம் கொண்ட மாநி­ல­மாக தமிழ்­நாடு வளர்ச்சி அடை­ய­வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­துள்­ளார்­கள். இது மிகப்­பெ­ரிய துணிச்­ச­லான அறி­விப்பு ஆகும். 

இதற்­கான மனித வள­மும், மனித ஆற்­ற­லும் தமிழ்­நாட்­டில் இருப்­ப­தால்­தான் முத­ல­மைச்­சர் அவர்­கள் இத்­த­கைய அறி­விப்­பைச் செய்­துள்­ளார்­கள்.

தமிழ்­நாட்டை, திறன்­மிகு சமு­தா­ய­மாக உரு­வாக்க வேண்­டும் என்ற இலட்­சி­யத்­து­டன், படிக்­கும் காலத்­தி­லேயே மாணவ/மாண­வி­க­ளுக்­குத் திறன் சார்ந்த பயிற்­சி­கள் அளித்து, அவர்­கள் வேலை பெறு­வ­தற்­கான வாய்ப்­பு­களை உறுதி செய்ய வேண்­டும் என்ற இலட்­சிய நோக்­கத்­து­டன் “நான் முதல்­வன்” என்ற கன­வுத் திட்­டத்தை தொடங்கி வைத்­துள்­ளார்

முத­ல­மைச்­சர் அவர்­கள். இத்­திட்­டத்­தில் இது­வரை ஏறத்­தாழ 28 இலட்­சம் மாண­வர்­க­ளுக்கு திறன் பயிற்­சி­கள் அளிக்­கப்­பட்டு வேலை­வாய்ப்­பு­கள் பெற்று வரு­கின்­ற­னர்.

புது­மைப் பெண் என்­பது புது­மை­யான திட்­டம் ஆகும். இத்­திட்­டத்­தின் மூலம் 3 இலட்­சத்து 28 ஆயி­ரம் மாண­வி­கள் மாதம்­தோ­றும் ஆயி­ரம் ரூபாய் பெறு­கி­றார்­கள். 

இத்­திட்­டத்­தி­னால் உயர்­கல்­வி­யில் முத­லா­மாண்டு சேரும் மாண­வி­க­ளின் எண்­ணிக்கை 34 சத­வீ­தம் அதி­க­ரித்­துள்­ளது. இளம் வயது திரு­ம­ணங்­கள் குறைந்­துள்­ளன. இடை­நிற்­றல் குறைந்­துள்­ளது. மாண­வி­ய­ரின் சமூ­கப் பங்­க­ளிப்பு அதி­க­மாகி உள்­ளது. பெண் சக்தி மேம்­பட்­டுள்­ளது. இதே போல் ‘தமிழ்ப் புதல்­வன்’ திட்­டம் மாண­வர்­க­ளுக்கு அறி­மு­கம் செய்­யப்­பட்டு அதி­லும் 3 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட மாண­வர்­கள் பலன் பெற்று வரு­கி­றார்­கள்.

இந்­தி­யா­வில் மட்­டு­மல்ல; தெற்­கா­சி­யா­வில் முன்­னணி மாநி­ல­மாக தமிழ்­நாட்டை உயர்த்­தும் முயற்­சி­க­ளில் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் இறங்கி இருக்­கி­றார்­கள்.

 இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தி­யில் 9.19 சத­வீத பங்­க­ளிப்­பு­டன் தமிழ்­நாடு, இந்­தி­யா­வி­லேயே இரண்­டா­வது பெரிய பொரு­ளா­தார மாநி­லம் என்ற நிலையை தக்க வைத்­துக் கொண்­டுள்­ளது. இந்­தி­யா­வி­லேயே வேறு எந்த மாநி­லத்­தை­யும் விட தொழிற்­சா­லை­க­ளில் பணி­பு­ரி­யும் பெண்­க­ளின் எண்­ணிக்கை தமிழ்­நாட்­டில்­தான் அதி­க­மாக இருக்­கி­றது.

 அதா­வது 42 சத­வீ­தம் என்ற அள­வில் உள்­ளது. தமிழ்­நாட்­டில் 39 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட தொழிற்­சா­லை­கள் இருக்­கின்­றன. இத­னால் உற்­பத்­தி­யும் அதி­கம் செய்­யப்­ப­டு­கி­றது. வேலை வாய்ப்­பும் அதி­கம் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது.இந்­நி­று­வ­னங்­க­ளில் பணி­யாற்­றத் தகுதி படைத்த பணி­யா­ளர்­க­ளாக தமிழ்­நாட்டு இளை­ஞர்­கள் செழு­மைப்­படுத்­தப்­பட்டு வரு­கி­றார்­கள்.

தைவான் நாட்­டைச் சார்ந்த ஃபாக்ஸ்­கான் நிறு­வ­னம், உல­கி­லேயே மிகப்­பெ­ரிய மின்­ன­ணு­வி­யல் உற்­பத்­தி­யா­ளர். உல­க­ள­வில் புகழ்­பெற்ற ஆப்­பிள் நிறு­வ­னத்­தின் ஐபோன்­க­ளுக்­கான உதிரி பாகங்­களை தொகுத்து வழங்­கும் நிறு­வ­னம் அது. 

சமீ­பத்­தில் அவர்­க­ளது இரண்டு உற்­பத்தி பிரி­வு­களை மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடங்கி வைத்­தார்­கள் என்­பது அதன் சிறப்பு ஆகும். 

இந்த திட்­டத்­தில் 41 ஆயி­ரம் பணி­யா­ளர்­கள் பணி­யாற்­று­கி­றார்­கள் என்­றால் அதில் 35 ஆயி­ரம் பேர் பெண்­கள். தமிழ்­நாட்­டில் 39 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட தொழிற்­சா­லை­கள் இருக்­கின்­றன. இத­னால் உற்­பத்­தி­யும் அதி­கம் செய்­யப்­ப­டு­கி­றது. வேலைவாய்ப்­பும் அதி­கம்உரு­வாக்­கப்­ப­டு­கி­றது.

« முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்­காக ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸ், சிங்­கப்­பூர், ஜப்­பான் மற்­றும் ஸ்பெயின் ஆகிய நாடு­க­ளுக்கு மேற்­கொண்ட பய­ணத்­தின்­போது 18,521 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கக்­கூ­டிய வகை­யில் ரூ.10,882 கோடி மதிப்­பி­லான 17 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையொப்­ப­ மி­டப்­பட்­டன.

« உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டிற்கு முன்­பும், அம்­மா­நாட்­டிற்கு பின்ன­ரும் நடை­பெற்ற பல்­வேறு முத­லீட்டு மாநா­டு­கள் மற்­றும் பிற நிகழ்வு­ க­ளின் போது 4,16,001 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கக்­கூ­டிய வகை­யில் ரூ.3,24,031 கோடி மதிப்­பி­லான 224 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

« கடந்த ஜன­வரி மாதம் நடை­பெற்ற உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டின் போது 14,54,712 நபர்­க­ளுக்கு நேரடி வேலை­வாய்ப்பு அளிக்­கக் கூடிய வகை­யில் ரூ.6,64,180 கோடி மதிப்­பி­லான 631 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையொப்­ப­மி­டப்­பட்­டன.

மொத்­த­மா­கச் சொல்­வ­தாக இருந்­தால் கடந்த மூன்­றாண்டு காலத்­தில் 18,89,234 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கக் கூடிய வகை­யில் ரூ,9,99,093 கோடி மதிப்­பி­லான 872 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. 

அவற்­றில் 4,16,717 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கும் வகை­யில் ரூ.1,47,460 கோடி மதிப்­பி­லான 234 திட்­டங்­கள் உற்­பத்தி மேற்­கொண்டு (Commenced production) வரு­கின்­றன.

6,13,744 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அளிக்­கக்­கூ­டிய வகை­யில் ரூ.2,83,665 கோடி மதிப்­பி­லான 301 திட்­டங்­கள் அமைப்­ப­தற்­கான கட்டு­மா­னப் பணி­கள் பல்­வேறு முன்­னேற்ற நிலை­க­ளில் (Various stages of construction) உள்­ளன. இவற்றை அறி­வாரா ஆளு­நர்? 

இதை பாராட்டி இருக்­கி­றாரா ஆளு­நர்? அல்­லது இப்­படி ஏதா­வது ஒரு நிறு­வ­னத்தை தமிழ்­நாட்­டுக்­குக் கொண்டு வர முயன்­றுள்­ளாரா ஆளு­நர்?

“கல்வி கற்க எது­வும் தடை­யாக இருக்­கக் கூடாது. அனை­வ­ரும் உயர்

கல்­வியை அடைய வேண்­டும். தடங்­கல் ஏற்­ப­டு­மா­னால் அதை உடைத்து மாணவ சமு­தா­யம் வெற்றி பெற வேண்­டும்.” என்று சொல்லி அனை­வ­ரை­யும் தகு­திப்­படுத்தி வரு­கி­றார் முத­ல­மைச்­சர். தகு­திப்­ப­டுத்­தப்­பட்ட இளை­ஞர்­களுக்கு வேலை தரக்­கூ­டிய நிறு­வ­னங்­களை மாநி­லத்­தில் உரு­வாக்கி வரு­கிறார் முத­ல­மைச்­சர் அவர்­கள். 

இப்­படி சங்­கி­லித் தொடர் போன்ற சாத­னை­களைச் செய்து வரும் தி.மு.க. அரசை பாராட்­டா­விட்­டா­லும், தூற்­றா­மல் இருக்­க­லாம் மாட்­சிமை தாங்­கிய ஆளு­நர்!

தகுதி,தரமில்லாதது 

தமிழ்நாடு கல்வியல்ல!

எதென்பது மக்களுக்குப் புரியும்!!



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக