தகுதியற்ற தலைமை!

கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் ரூ.10 கோடியில் திறந்தவெளி அரங்கு.

எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை 

தூத்துக்குடியில் மீராசா என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலைகள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து மூடநம்பிக்கை பற்றி பேசிய சர்ச்சைக்குரிய பேச்சாளர் மாகாவிஷ்ணு கைது .


தகுதியற்ற தலைமை!

அசாம் மாநிலத்தில் மக்களை சமூக ரீதியாகவும், பிராந்தியரீதியாகவும் பிளவுபடுத்தும் விதத்தில் அதிக ரித்துவரும் நிகழ்வுகள் காரணமாக நிலைமை கள் மிகவும் சீர்கேடடைந்துகொண்டிருக்கின் றன. முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா வும், பாஜக தலைமையிலான மாநில அரசாங்க மும்தான் இத்தகைய நிலைமைகளுக்கு முற்றி லும் பொறுப்பாகும். 



முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, முஸ்லிம்களைக் கடித்துக் குதறும் பிரச்சாரத்தில் அனைத்து எல்லைக ளையும் மீறிவிட்டார்.   ‘சுதேசி (எதிர்) வெளியாட்கள்’ என்று விஷத்தைக் கக்கும் அவருடைய சொல்லாடல் களை அவர் கூறாத நாளே இல்லை எனலாம். மதச்சிறுபான்மையினரை ‘அயலார்கள்’ என்று அவர் விளிக்காத நாளே இல்லை. அவர்களுக்கெதிராக காட்டுமிராண்டித்தன மான குற்றச்சாட்டுகளை நாள்தோறும் அவர் கூறிக் கொண்டிருக்கிறார்.  


அவருடைய பிளவு வாத அரசியலும், வெறித்தனமாக விஷத்தைக் கக்கும் பேச்சுகளும் மக்களின் ஒரு பிரிவினர், மதச் சிறுபான்மையினரைத் தாக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.

மாநிலத்தில் நடைபெற்றுள்ள பாலியல் தாக்குதல் தொடர்பான இரு வழக்குகளை இவர் கையாண்டுள்ள விதமே இவற்றுக்கு சாட்சி யாக அமைந்துள்ளன. சிவசாகர் நகரில் பதினேழு வயது சிறுமியை மார்வாரி வர்த்தக சமூகத்தைச் சேர்ந்த இருவர் தாக்கிய சம்பவம் ‘அயலார்’க்கு எதிரான அச்சு றுத்தலாக சில அணியினரால் ஜோடிக்கப்பட்டு அவர்களுக்கு எதிரான மதவெறித் தீயாக விசிறிவிடப்பட்டிருக்கிறது

.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கயவர்களுக்கு எதிராக உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவ தற்குப் பதிலாக, ஒட்டுமொத்த மார்வாரி சமூ கத்தினரையே  இக்குற்றச்செயலுக்காக, குறை கூறும் விதத்தில் பிரச்சாரம் முடுக்கிவிடப் பட்டுள்ளது. இது, அசாமின் மேல் பகுதியில் வாழும் அசாமியர் அல்லாத வர்த்தகர்க ளுக்கு எதிரான ஒரு பெரும் போராட்டமாக மாறி, சிவசாகர் நகரில் மாநில அமைச்சர் ஒருவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன்னிலை யில் மார்வாரி சமூகத்தினர் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் முடிந்திருக்கிறது. 

நாகோன் மாவட்டத்தில் பதினான்கு வயது  மைனர் சிறுமியை மூன்று முஸ்லிம் இளை ஞர்கள் கும்பல் பாலியல் வல்லுறவு செய்துள்ள மற்றொரு மோசமான சம்பவம். இச்சம்பவத்தி ற்கு எதிரான சீற்றம் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பிவிடப் பட்டுள்ளது. 

அவர்கள் மிகவும் இழிவான முறை யில் ‘மியாஸ்’ என்று விளிக்கப்பட்டார்கள். ஆர்எஸ்எஸ்/பாஜக அமைப்புகள் சில, மேல் அசாமை விட்டு வெளியேறுமாறு ‘மியாஸ்’க ளுக்கு மிரட்டல் விடுத்துள்ளன. ‘மியா’ சமூகத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் இரக்கமின்றி தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, வங்காள மொழி பேசும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், மேல் அசாம் மாவட்டங்களில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 

முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, சட்ட மன்றத்தில், தான்ஒருதலைப்பட்சமாகத்தான் முடிவெடுப்பேன் என்றும், ‘மியா‘ முஸ்லிம்கள், ‘அசாமைக் கைப்பற்றவிட மாட்டேன்’ என்றும் பேசியுள்ளார். 

அனைத்து முனைகளிலும் தன் அரசு படுதோல்வி அடைந்திருப்பதை மூடி மறைத்திடுவதற்காக இவ்வாறு முஸ்லிம்களைக் கடித்துக் குதறும் பிரச்சாரத்தில் முழுவீச்சுடன் இறங்கியிருக்கிறார்.

மாநிலம் முழுவதும் கொடூரமான பாலியல் வல்லுறவு மற்றும் வன்முறைச் சம்பவங்கள் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தில் பெண்களைப் பாதுகாப்பதில் அசாம் அரசு மோசமாகத் தவறிவிட்டது. 

ஆறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளது. 1971 மார்ச் முதல் பல பத்தாண்டுகளாக அசாமில் வசிக்கும் நிலமற்ற மக்களுக்கு நிலத்தை விநியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெள் ளம் மற்றும் அரிப்பு போன்ற ஆபத்தான பிரச்ச னைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் எதை யுமே செய்யவில்லை; வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்தப் பின்னணியில்தான் சர்மாவும் பாஜக அரசாங்க மும் வெட்கக்கேடான முறையில் முஸ்லிம்க ளுக்கு எதிராக  மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளன. பெண்களுக்கெதிரான குற்றங்கள் ஏறக்குறைய அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களால் செய்யப்பட்டபோதிலும், அவற்றை முஸ்லிம்கள் மட்டுமே  செய்வது போல முத்திரை குத்தப்படுகிறார்கள்.

 ‘வெள்ள ஜிஹாத்’ (‘flood jihad’) என்ற வார்த்தை கூட,  தலைநகர் கவுகாத்தியில் இயற்கை வெள்ளத் தால் ஏற்படும் பிரச்சனைகளை மறைக்க ஹிமந்த சர்மாவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஹிமந்த சர்மா அரசமைப்புச்சட்டத்தின் அனைத்து விதிமுறைகளையும் மீறி, முதல்வர் பதவியை வகித்து வருகிறார். “அரசமைப்புச் சட்டத்தின்படியும் மற்றும் நாட்டின் அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டும் அனைத்து வகை யான மக்களுக்கும் தயவுதாட்சண்யம் இல்லா மலும்,   தீய விருப்பத்திற்கு இடங் கொடாமலும் மக்களுக்கு செய்ய வேண்டிய உரிமைகளைச் செய்வேன்”  என்று தான் முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட சத்தியப் பிரமாணத்தை  வெட்கக்கேடான முறையில் மீறியுள்ளார். 

சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் முதலமைச்சரின் பேச்சுக்கள் இந்த பதவிப் பிரமா ணத்தை மீறும் வகையில் உள்ளன. இவ்வாறு அவர் அரசியல் மற்றும் அரசமைப்புச்சட்ட நெறி முறைகளை காலில்போட்டு மிதித்து அவமான கரமான சாதனையை படைத்துள்ளார்.

அதனால்தான், ஹிமந்த சர்மா அரச மைப்புச்சட்ட விதிமுறைகளை மீறி, மதவெறி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அவரை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி ஆகஸ்ட் 29 அன்று அசாம் ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு ஒரு மனுவை 18 எதிர்க்கட்சிகள் அளித்துள்ளன.  இவ்வாறு முதலமைச்சர் ஹிமந்த சர்மா அரசமைப்புச்சட்டத்தின் விதிமுறைகளை முற்றிலுமாக மீறி செயல்பட்டுக் கொண்டிருப்ப தற்காகவும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் தான் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தைக் கடுமையாக மீறி இருப்பதற்காகவும்  அவர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக