இப்படியும்
கட்சிக்கு ஆள் சேர்க்கலாம்.
புதுச்சேரி மாவட்டம் முத்தியால்பேட்டை பகுதியில் மக்களிடம் தீபாவளி பரிசு தருவதாக செல்போன் நம்பர்கள் வாங்கப்பட்ட நிலையில் அவர்கள் பாஜகவில் இணைக்கப்பட்டதாக மெசேஜ் வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால் திடீரென 'நீங்கள் பாஜகவில் இணைந்து விட்டீர்கள்' என செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் தெரிவிக்கையில், 'சில நேரங்களில் இதுபோல் போன் கால்கள் வரும். நீங்கள் பாஜகவில் சேர்ந்து விட்டீர்களா என்று கேட்பார்கள்.
ஆனால் இப்படி செய்வார்கள் என்று நினைக்கவில்லை. தீபாவளி கிப்ட் கொடுக்கிறேன் என்று சொல்லி தான் நம்பர் கேட்டார்கள். நார்மலாக நிறைய மெசேஜ்கள் வரும் அதை எல்லாம் ஓபன் பண்ணி பார்ப்பதில்லை.
ஆனால் இப்பொழுது பார்க்கும் போது தான் தெரிகிறது. பாஜகவில் சேர்ந்து விட்டதாக மெசேஜ் வந்துள்ளது.
இந்த பகுதியில் பல வீடுகளில் நம்பர் வாங்கிக் கொண்டு போனார்கள். ஏதோ நலத்திட்டம் செய்யப் போகிறோம் என்ன சொன்னார்களே தவிர, கட்சிக்காரர்கள் என்றுசொல்லவில்லை'எனதெரிவித்துள்ளனர்.
கழுதை செத்ததால்
50 பேர்கள் மீது வழக்கு!
பக்சர் மாவட்டத்தில் உள்ள கேசத் தொகுதியின் ராம்பூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த தாதன் ராஜாக் என்பவரிடம் நான்கு கழுதைகள் இருந்தன.
அந்தக் கழுதைகளை செங்கல் சூளைக்கு செங்கற்கள் முதலியவற்றை எடுத்துச் செல்ல தினமும் பயன்படுத்துகின்றார்.
இதுகுறித்து தாதன் ராஜாக் கூறுகையில், "செப்டம்பர் 11ஆம் தேதி மாலை, நான்கு கழுதைகளுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். கிராமத்தின் நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. மழை காரணமாக அங்கு தண்ணீர் தேங்கியிருந்தது” என்றார்.
கழுதை இறந்ததையடுத்து, கிராம மக்கள் கேசத் மின்வாரியத்திற்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த நிர்வாக அதிகாரிகளிடமும் உடன்படிக்கை ஏற்பட்டது.
ஆனால் மின்வாரியத்தினர் கூறுகையில், "கிராம மக்கள், பஞ்சாயத்துப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து, கேசத் மின்வாரியத்தில் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அங்கிருந்த அரசு ஊழியர்கள் சுஜித்குமார், ரவிக்குமார் ஆகிய இருவரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்து, மின்சாரத்தைத் துண்டித்தனர்.
பின்னர், இந்த விவகாரத்தில் ராம்பூர் பஞ்சாயத்துத் தலைவரின் கணவர் விகாஸ் சந்திர பாண்டே, விசுந்தேவ் பாஸ்வான், மஞ்சு குமாரி, ஆலம்கிர், அப்தாப் அன்சாரி மற்றும் அடையாளம் தெரியாத 50 பேர் மீது இந்திய நீதிச்சட்டம் மற்றும் மின்சாரச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் மின்சாரத் துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.