இன்று(06/11/2024)
"இந்தியில் பேசு.
இல்லைன்னா வழக்கு"
தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அதன் தொடர்பான பணிகள் அனைத்தும் முறையாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளார்.
முதற்கட்டமாக கோவை மாவட்டத்திற்கு சென்றுள்ள அவர் இன்றும் நாளையும் இது தொடர்பான பணிகள் குறித்து துறை ரீதியான அதிகாரிகளோடு கலந்து ஆலோசிக் உள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் போக்குவரத்து மிகுந்த கணேசபுரம் சுரங்கப்பாதையில் பாலம் கட்டும் பணி காரணமாக நவம்பர் 6 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்படி ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப்பாதை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தெலுங்கு மக்கள் குறித்து தான் கூறிய கருத்து சர்ச்சையான நிலையில் நடிகை கஸ்தூரி அதற்கு வருத்தம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிராமண சமூகத்தின் மீது தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக நேற்று விளக்கம் அளித்த நிலையில் இன்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும் ஒரே மேடையில் கலந்து கொள்ள இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதனிடையே இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து ஓர் ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்து விட்ட நிலையில் விஜய் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு அதுகுறித்து ஆலோசித்து முடிவு செய்வோம் என தெரிவித்துள்ளார்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்தியா
ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவது கவலை அளிப்பதாக துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்திருந்தார்.
நிலைமை இப்படியே சென்றால் மாநில அரசின் உள்துறை அமைச்சராக பதவியேற்பேன் எனவும் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்து பேசுபொருளாக மாறிய நிலையில் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கருத்து எனக்கு ஊக்கமளிப்பதாகவும், அதை விமர்சனமாக பார்க்கவில்லை என மாநில உள்துறை அமைச்சர் அனிதா பதிலளித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் நாளை சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு பாரத ராஷ்டிரிய சமிதி அரசால் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பில் மொத்தம் 98 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அதன் தரவுகளை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இப்படியான நிலையில் அரசின் இட ஒதுக்கீடு பலன்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய தகவல்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில் செயல்படும் மாநில மதரசா பள்ளிகளில் அமலில் இருக்கும் கல்வி வாரிய சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
இந்த சட்டத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்த நிலையில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. 2004 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த வாரியத்தின் மூலம் 13, 364 பள்ளிகளில் 12 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்துடன் நவம்பர் 25ஆம் தேதி தொடங்குவதாக நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 20ஆம் தேதி வரை இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவித்துள்ளவர் நவம்பர் 26 ஆம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75 ஆம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகம்
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை தேர்வு செய்யும் தேர்தல் தொடங்கியது.
மொத்தம் 538 வாக்குகள் உள்ள நிலையில் 270 வாக்குகள் பெறும் வேட்பாளர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார். இவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்லலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. விசா இல்லாத நடைமுறை காலவரையின்றி நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செயல்பாட்டில் இருந்த இந்த நடைமுறை வரும் நவம்பர் 11ம் தேதி முடியவிருந்த நிலையில் விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தங்கி மகிழலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் தொடங்கப்பட்ட 5 நாட்களிலேயே புகுஷிமா அணுமின் நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் நிகழ்ந்த சுனாமியால் புகுஷிமாவில் உள்ள அணுமின் நிலையம் கடுமையான சேதமடைந்தது.
பராமரிப்பு பணிகள் நடைபெற்று கடந்த அக்டோபர் 29ஆம் தேதி திறக்கப்பட்ட அணுமின் நிலையத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் மூடப்பட்டது.
"இந்தியில் பேசு.
இல்லைன்னா வழக்கு"