27,764 பள்ளிகள் மூடல்!
பள்ளித்தலமனைத்தும் மூடல் செய்குவோம்!
உயர்நீதிமன்றக் கிளை குட்டியதை மறந்து நாடாளுமன்றத்தில் இந்தியில் அமைச்சர்கள் பதில் அளிப்பதா? எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்.
பாலியல் தொல்லை என பொய் புகார் தண்டனை பெற்றவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு.பொய் புகார் கொடுத்த சிறுமியின் தாய் மீது போக்சோ வழக்கு பதிய உத்தரவு.
நாகப்பட்டினத்தில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அரசுப் பேருந்தை 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் .திருத்துறைப்பூண்டியை சேர்ந்தசக்திவேல்ஓட்டிச்சென்றார்.புறப்பட்டதில் இருந்தே ஓட்டுநர் சக்திவேல் செல்போனைபார்த்தபடிகவனக்குறைவாக ஓட்டி சென்றுள்ளார்.
இதை பார்த்த பயணி ஒருவர்,வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானதையடுத்து அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளார் ராஜா, ஓட்டுநர் சக்திவேலை பணியிடை நீக்கம்செய்துஉத்திரவிட்டார்.
27,764 பள்ளிகள் மூடல்!
இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும், அதிகப்படியான கல்வி வேற்றுமை கொண்ட மாநிலமாகவும், வேலைவாய்ப்பின்மையில் முதன்மை மாநிலமாகவும் விளங்கும் உத்தரப் பிரதேசத்தின் மாநில பா.ஜ.கஅரசு,மற்றொரு திடுக்கிடும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
அத்திட்டமே, உத்தரப் பிரதேசத்தில் இயங்கும் 27,764 பள்ளிகளை ‘குறைந்த சேர்க்கை’ பள்ளிகள் என மூடுவதுதான் அந்த புரட்சித் திட்டம்.
கடந்த வாரம், மாணவர்களுக்கு கல்விச்சலுகை வழங்குகிறோம் என வெறும் ரூ.300க்கான காசோலையை வழங்கி, வஞ்சகம் செய்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு, தற்போது மாணவர்களின் கல்விக் கனவையே சிதைக்கும் திட்டத்திற்கு வித்திட்டுள்ளது.
இதுதான் பாசிச வர்ணாசிம மாடல்.சூத்திரனுக்கு கல்வி மறு.