சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
திருவாரூர் அருகே ஒன்றிய அரசின் மத்திய பல்கலை விடுதி உணவில் புழு, பூச்சிகள்.காணோலி பரவல்.
சோலார், காற்றாலை இயந்திரங்கள் ஏற்றுமதியில் முறைகேடு; ஒபிஜி, பி.விண்ட் எனர்ஜி நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.
காசு மேல காசு வாங்கி...
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியின் ஆணையராக பதவி வகித்து வருகிறார் ஜஹாங்கீர் பாஷா.
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் மற்றும் பேரிடர் அபாயம் நிறைந்த ஊட்டி நகரில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அந்த விதிமுறைகளை மீறி தனியாருக்கு சில அனுமதிகளை ஆணையர் ஜஹாங்கீர் பாஷா வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று மாலை காரில் சொந்த ஊருக்கு கிளம்பியிருக்கிறார் ஜஹாங்கீர் பாஷா.
தனது காரில் பல லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்தை ரகசியமாக அவர் எடுத்துச் செல்வதாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஆணையர் பாஷா காரை விரட்டிச் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார், தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் காரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
காருக்குள் கட்டுக்கட்டாகப் பணம் இருப்பதை சோதனையில் கண்டறிந்துள்ளனர்.
ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணை குறித்து தெரிவித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், "எங்களுக்குக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையிலான டீம்,ஜஹாங்கீர் பாஷா. வாகனத்தை விரட்டிச் சென்று தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் மடக்கினர்.
அந்த வாகனத்தை சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது. பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கட்டடங்கள் புனரமைப்பு, அனுமதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வந்திருக்கிறது.
அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
மீண்டும் 11பழங்குடியினர் சுட்டுக் கொலை!
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி பழங்குடி வகுப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இங்குள்ள சிஆர்பிஎப் முகாம் மீது குக்கி பழங்குடியைச் சேர்ந்த போராட்டக்காரர்கள், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 11 பேரை சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் காயமடைந்ததாகவும், அவர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும்தகவல்வெளியிடப்பட்டது.
மணிப்பூர் மாநிலத்தில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு, தனது வாக்குவங்கி அரசியலுக்காக மெய்டெய் பிரிவு மக்களை பழங்குடி களாக அறிவிப்பதாக வாக்குறுதி அளித்தது, அங்கு ஏற்கெனவே குக்கி பழங்குடி பிரிவினரிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியது.
பாஜக அரசின் அறிவிப்பு, மலைவளத்தை சூறை யாடும் சூழ்ச்சி கொண்டது என்று குக்கி பழங்குடிகள் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுக்குப் போட்டி யாக மெய்டெய் பிரிவினரை பாஜக தூண்டிவிட்டது.
இதில், கடந்த ஆண்டு 2023 மே மாதம் முதல் மணிப்பூரில் மெய்டெய் மக்களுக்கும், குக்கி பழங்குடி களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் தற்போது வரை, இருதரப்பிலும் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர் களாக ஆக்கப்பட்டுள்ளனர். இப் போது வரை மணிப்பூர் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தான், ஜிரிபாம் மாவட்டத்தின் போரோபெக்ராவில் உள்ள காவல் நிலையம் மீது, திங்க ளன்று பிற்பகல் 2.30 மணியளவில் குக்கி பழங்குடியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அப்போது பதில் நடவடிக்கையாக சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் குக்கி பழங்குடியைச் சேர்ந்தவர்கள் 11 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இது மணிப்பூர் மாவட்டத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
வல்லரசுகள்? அயதுல்லா கமேனி கொல்லப்பட்ட செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே, உலக அரசியல் சதுரங்க ஆட்டத்தில் காய்கள் வேகமாக நகரத் தொடங்கிவிட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த அதிரடித் தாக்குதலுக்கு 'பதிலடி' கொடுக்க ரஷ்யாவும் சீனாவும் தங்களது ரகசியத் திட்டங்களைத் தீட்டி வருகின்றன. இது வெறும் ஈரான் பிரச்சனை மட்டுமல்ல, ஆசியாவில் தங்களது ஆதிக்கத்தைத் தக்கவைப்பதற்கான வாழ்வா சாவா போராட்டம்! புதின் சும்மா இருப்பாரா? தாக்குதல் நடந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை "ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான அப்பட்டமான ஆக்கிரமிப்பு" எனக் கடுமையாகக் கண்டித்துள்ளது. ஐநா பாதுகாப்பு சபையில் (UN Security Council) அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா ஏற்கனவே தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. உக்ரைன் போரில் ஈரானின் ட்ரோன்கள் ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் உதவின. அதற்குப் பிரதிபலனாக, இப்போது ஈரானின் பாதுகாப்புக்குத் தேவையான அதிநவீன S-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை ரஷ்யா ரகசியமாக அனுப்பக்கூடும் என உளவுத் துறைகள் அஞ்சுகின்றன. ஈரானின் அணுசக்தி ம...
தே சிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் திமுக அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் சொல்கிறார் மோடி. ஆனால் உண்மை? திமுகவுக்கு உள்ள செல்வாக்கை பார்த்து என்.டி.ஏ. கூட்டணிதான் அதிர்ச்சி அடைந்துள்ளது. மக்கள் நல திட்டங்களால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகம் முழுவதும் அலை அடிக்கிறது. இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை திமுக கூட்டணி வெல்லும் என்று நம்மூர் கருத்துக்கணிப்புகள் மட்டுமல்லாது, உலகின் மிகப்பெரிய கணிப்புச் சந்தையான பாலி மார்க்கெட்டும் தனது கணிப்பை சொல்லி இருக்கிறது. மீண்டும் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்கப்போகிறார் என்பது தெரிந்ததால்தான் தவெக பக்கம் தாவ இருந்த காங்கிரஸ் கூட திமுக கூட்டணியிலேயே தொடர்கிறது. தேமுதிக உள்ளிட்ட புதுப்புது கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வந்திருக்கின்றன. திமுக கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. 28 கட்சிகளை கூட்டணியில் வைத்து பிரம்மாண்டம் காட்டும் திமுக, திருச்சியில் நேற்று 10 லட்சம் தொண்டர்களை திரட்டி பிரம்மாண்ட மாநில மாநாடு நடத்தி இருக்கிறது. ...
தமிழ் காமிக்ஸைப் புரட்டிப்போட்ட முத்து காமிக்ஸ்! தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது. இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்: தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர். # எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். # தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவி...