பொய்யாட்சி....?

நல்லாட்சியல்ல, பொய்யாட்சி

 க்­கள் அனைத்­தை­யும் மறந்­தி­ருப்­பார்­கள் என்று நினைத்து பொய்ப் பேட்­டி­களை வண்டி வண்­டி­யாக அவிழ்க்­கத் தொடங்கி இருக்­கி­றார் எதிர்க்­கட்­சித் தலை­வர் பழ­னி­சாமி. நாச­கார ஆட்­சி­யைத்­தான் இவர் கொடுத்­தாரே தவிர, நல்­லாட்­சி­யைத் தர­வில்லை.

‘2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டு காலம் சிறந்த ஆட்­சியை அ.தி.மு.க. தந்­துள்­ளது. ஜெய­ல­லிதா ஆட்­சி­யில் இருந்த போது நிறை­யத் திட்­டங்­க­ளைக் கொண்டு வந்து, அத­னால் மக்­கள் பயன்­பெற்­றுள்­ள­னர். ஜெய­ல­லிதா மறை­வுக்­குப் பிறகு நான் பொறுப்­பேற்று நான்கு ஆண்­டு­கள் சிறப்­பான ஆட்சி செய்­தேன்’’ என்று சிரிக்­கா­மல் பேட்டி அளித்­துள்­ளார் பழ­னி­சாமி.

தனது சொந்­தத் தொகு­தி­யில் கூட எந்த அடிப்­படை பிரச்­சி­னை­யை­யும் பழ­னி­சாமி தீர்க்­க­வில்லை. பிறகு எப்­படி தமிழ்­நாட்­டில் மற்ற தொகு­தி­க­ளில், அம்­மக்­க­ளின் பிரச்­சி­னையை பழ­னி­சாமி தீர்த்­தி­ருப்­பார்?

சுமார் 10 ஆயி­ரம் பேர் வேலைக்­காக பதிவு செய்­துள்­ளார்­கள் எடப்­பாடி தொகு­தி­யில் மட்­டும். அவர்­க­ளது அனைத்து விண்­ணப்­பங்­க­ளை­யும் கட்­டுக்­கட்­டாக அடுக்கி எடுத்து வந்து பொது­வெ­ளி­யில் காட்­டி­னார் தி.மு.க. தலை­வர்.

2021 ஆம் ஆண்டு சட்­ட­மன்­றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக அனைத்­துத் தொகு­தி­யி­லும் கிரா­ம­ச­பைக் கூட்­டங்­களை நடத்­தி­னார் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள். அப்­போது, எடப்­பாடி தொகு­தி­யில் நடந்த கிராம சபை­யில் பேசிய பெண்­கள் அனை­வ­ரது உரை­யும் கண்­ணீ­ரை­யும் கோபத்­தை­யும் வர­வைத்­தது. அர­சாங்க அலு­வ­ல­கத்­துக்கு போனால் எந்த இடத்­தில் எவ்­வ­ளவு லஞ்­சம் தர வேண்டி இருக்­கி­றது என்­றார் ஒரு பெண். நெச­வா­ளர் நிறைந்த அந்­தப் பகு­தி­யில் நெச­வா­ளர் துயர் துடைக்க எது­வும் செய்­ய­வில்லை என்­றார் இன்­னொ­ரு­வர். டாஸ்­மாக் கடை­கள் மூல­மாக ஏற்­ப­டும் சட்­டம் – ஒழுங்கை இன்­னொ­ரு­வர் சொன்­னார். படித்த தன்­னைப் போன்­ற­வர்க்கு வேலை கிடைக்­காத கொடு­மையை இன்­னொ­ரு­வர் சொன்­னார். ‘ரோடு போடு­வ­தைத் தவிர எது­வும் செய்­ய­வில்லை, அது­வும் போட்ட ரோட்­டையே திரும்­பத் திரும்­பப் போடு­கி­றார்­கள்’ என்று சொன்­னார் மற்­றொ­ரு­வர்.

முத­ல­மைச்­சர் பத­வி­யில் இருந்த பழ­னி­சாமி தனது சொந்­தத் தொகு­தி­யைக் கூட எவ்­வ­ளவு கேவ­ல­மாக வைத்­துள்­ளார் என்­ப­தைப் படம் பிடித்­தது எடப்­பா­டி­யில் நடந்த கிரா­ம­சபை!



1. எடப்­பாடி தொகு­தி­யில் ஜவு­ளி­பூங்கா

2. நெருஞ்­சிப்­பேட்­டை­யில் காவிரி ஆற்­றின் குறுக்கே பாலம்

3. கொங்­க­ணா­பு­ரத்­தில் தொழில்­பேட்டை

4. மேட்­டூர் அணை­யில் இருந்து வெளி­யே­றும் உபரி நீர் பயன்­பாடு

5. எடப்­பாடி அரசு மருத்­து­வ­மனை மேம்­பாடு

6. கொங்­க­ணா­பு­ரம் கூட்­டு­றவு வங்கி விவ­கா­ரம்

7. மின் மயா­னங்­கள்

8. தேங்­காய், மா.பருத்தி, மர­வள்­ளிக் கிழங்கு ஆகி­ய­வற்­றுக்கு ஆதார விலை

9. பொதுக்­க­ழிவு சுத்­தி­க­ரிப்பு நிலை­யம்

10. நிலக்­க­டலை விவ­சா­யி­க­ளுக்கு தனி­கூட்­டு­றவு சங்­கம்

-– இவை அனைத்­தும் பழ­னிச்­சாமி, எடப்­பா­டித் தொகு­திக்­குச் செய்து தரு­வ­தா­கச் சொன்ன வாக்­கு­று­தி­கள். இதனை நிறை­வேற்­றித் தர­வில்லை என்­று­தான் அந்­தத் தொகுதி மக்­கள் குற்­றம் சாட்­டி­னார்­கள்.

நங்­க­வல்லி டவுன் பஞ்­சா­யத்­தில் உள்ள வேளாண் கூட்­டு­றவு கடன் சங்­கத்­தின் தலை­வர் பொதுப்­ப­ணத்தை மோசடி செய்­தார். இது கண்டு பிடிக்­கப்­பட்­டது. அ.தி.மு.க.வைச் சேர்ந்­த­வர் என்­ப­தால் விசா­ரணை நாட­கம் நடத்தி, இழப்பை மட்­டும் பதிவு செய்து அவரை காப்­பாற்­றி­விட்­டார் பழ­னி­சாமி. அ.தி.மு.க. உள்­ளூர் தலை­வர்­க­ளும் பழ­னி­சா­மிக்கு நெருக்­க­மான உத­வி­யா­ளர்­க­ளும் சட்­ட­வி­ரோ­த­மாக மணல் கொள்­ளை­யில் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள் என்று குற்­றச்­சாட்டு வைக்­கப்­பட்­டது. பொங்­கல் பரி­சு­க­ளாக விநி­யோ­கிக்­கப்­பட்ட கரும்­பில் பழ­னி­சா­மி­யின் நெருங்­கிய கூட்­டா­ளி­கள் கமி­ஷன் பார்த்­துள்­ளார்­கள். தேங்­காய் வியா­பா­ரி­கள் பெரு­ம­ளவு பாதிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள். இது­வும் அப்­போது சொல்­லப்­பட்ட குற்­றச்­சாட்­டு­தான்.

‘’எடப்­பா­டி­யில் உள்ள கொங்­க­ணா­பு­ரத்­தில் உள்ள விவ­சாய நிலங்­கள்

வழி­யாக எண்­ணெய் குழாய் அமைக்­கப்­பட்­டுள்­ளது. கேர­ளா­வில், கர்­நா­டக குழாய் இணைப்பு இங்கு போலல்­லா­மல் நெடுஞ்­சா­லை­கள் வழி­யா­கச்செல்­கிறது. 

ஆனால் இங்கு ஆயி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­க­ளின் விவ­சாய நிலங்­க­ளை­யும் சேதப்­ப­டுத்­து­கி­றது” என்­றும் அப்­போது பொது­மக்­கள் சொன்­னார்­கள்.

அ.தி.மு.க. அர­சாங்­கம் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பு பெரி­ய­நாச்­சி­யூர் கிரா­மத்­தில் இருந்த ஆரம்ப சுகா­தார நிலை­யக் கட்­ட­டத்தை இடித்­தது. 2021 வரை அதைக் கட்­டித் தர­வில்லை. மக்­கள் எதற்­கெ­டுத்­தா­லும் எடப்­பாடி நக­ரத்­துக்­குத்­தான் செல்ல வேண்டி உள்­ளது. தூய்­மை­யான பஞ்­சா­யத்து விருதை கொடுத்­துள்­ளார்­கள். ஆனால் குடி­நீர் மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்­டியை ஒன்­றரை ஆண்­டு­க­ளாக சுத்­தம் செய்­ய­வில்லை என்று மக்­கள் சொன்­னார்­கள். இது­தான் அவர் நல்­லாட்சி நடத்­திய லட்­ச­ணம் ஆகும்.

கிரா­ம­ச­பைக் கூட்­டம் நடந்த பஞ்­சா­யத்­தில் 52 சின்­டெக்ஸ் தண்­ணீர்

தொட்­டி­கள் உள்­ளன. 3 ஆண்­டு­க­ளுக்கு முன்பு இதில் 40 தொட்­டி­க­ளில் இருந்து மோட்­டார் அகற்­றப்­பட்­டது, அவை 2021 முதல் பொருத்­தப்­ப­ட­வில்லை. கிரா­ம­ச­பைக் கூட்­டம் மைதா­னத்­தின் நுழை­வா­யி­லில் ஒரு சின்­டெக்ஸ் தொட்டி உள்­ளது, அதில் கடந்த 3 ஆண்­டு­க­ளாக தண்­ணீர் இல்லை. இது­தான் பழ­னி­சா­மி­யின் தொகு­தி­யின் அன்­றைய நிலைமை!

‘‘ஆனால் கழி­வறை கட்­டு­வ­தில் கமி­ஷன் அடித்­து­விட்­டார்­கள். ஒன்­றிய அரசு அறி­மு­கப்­ப­டுத்­திய வீட்டு கழிப்­பறை திட்­டத்­தில் சேர 2 ஆயி­ரம் ரூபாய் கமி­ஷ­னாக அ.தி.மு.க. பிர­மு­கர்­கள் வாங்கி இருக்­கி­றார்­கள்.தனிப்­பட்ட குடி­நீர் குழாய் இணைப்­புக்கு 4000 ரூபாய், -5000 ரூபாய் வசூ­லித்­தி­ருக்­கி­றார்­கள். காசு கொடுத்­தால்­தான் டெண்­டர் என்று பழ­னி­சாமி நடந்து கொள்­வ­தைப் போலவே அவ­ரது கட்­சிக்­கா­ரர்­க­ளும் காசு கொடுத்­தால்­தான் இது போன்ற அர­சின் பயனை பெற முடி­யும் என்ற நிலை­மை­தான் எடப்­பாடி தொகு­தி­யில் இருக்­கி­றது” என்று அப்­போது மக்­கள் சொன்­னார்­கள். இது­தான் அவர் நல்­லாட்சி நடத்­தி­யதா?

எப்­போ­தும் சேலத்­தில் போய் பதுங்­கிக் கொள்­ளும் பழ­னி­சாமி, சேலம் மாவட்­டத்­துக்­கா­வது ஏதா­வது செய்­துள்­ளாரா என்­றால் அது­வும் இல்லை!

சேலம் மாவட்­டத்­துக்கு பழ­னி­சாமி கொடுத்த வாக்­கு­று­தி­கள் என்ன?

சேலம் – பெங்­க­ளூரு தேசிய நெடுஞ்­சா­லை­யில் தி.மு.க. ஆட்சி காலத்­தில் தொடங்­கப்­பட்ட தக­வல் தொழில் நுட்­பப் பூங்கா பணி­களை முடக்கி வைத்­தி­ருந்­தார். திடக்­க­ழிவு மேலாண்மை திட்­டத்தை முடக்­கி­னார். பாதா­ளச் சாக்­கடை

திட்­டத்தை முறை­யா­கச் செயல்­ப­டுத்­த­வில்லை. ஏற்­காடு தாவ­ர­வி­யல் பூங்­காவை முறை­யாக அமைக்­க­வில்லை. சேலம் சூப்­பர் ஸ்பெஷா­லிட்டி மருத்­து­வ­ம­னையை மேம்­ப­டுத்­த­வில்லை. சேலம் மாந­கர எல்­லைப் பகு­தி­களை இணைக்­கும் ரிங் ரோடு அமைக்­கப்­ப­டும் என்­றார் பழ­னி­சாமி. அமைக்­க­வில்லை. தலை­வா­சல் சந்தை விரி­வாக்­கம் செய்­யப்­ப­ட­வில்லை. ஓம­லூ­ரில் திர­விய தொழிற்­சாலை அமை­ய­வில்லை.


எடப்­பாடி, வீர­பாண்டி தொகு­தி­யில் ஜவுளி பூங்கா அமை­ய­வில்லை. சேலத்­தில் ராணு­வத் தள­வா­டத் தொழிற்­சாலை அமை­யப் போகி­றது என்­றார்­கள். அமை­ய­வில்லை. சேலம் செவ்­வாய்ப்­பேட்டை லாரி மார்க்­கெட் மேம்­படுத்­தப்­ப­ட­வில்லை. இவை அனைத்­தும் பழ­னி­சாமி கொடுத்த வாக்­கு­று­தி­கள் தான். தனது சொந்த மாவட்­டத்­துக்­குக் கூட சொன்­ன­தைச் செய்­யா­த­வர்தான் பழ­னி­சாமி.

கொடுத்த அத்­தனை வாக்­கு­று­தி­க­ளை­யும் காற்­றில் பறக்­க­விட்ட ஆட்சிதான் எடப்­பாடி பழ­னி­சா­மி­யின் ஆட்சி. இவர்­தான் இன்று நல்­லாட்சி தந்­த­தாக

உள­றிக் கொண்­டி­ருக்­கி­றார்.

2011 முதல் 2021 வரை நல்­லாட்சி கொடுத்­தார்­க­ளாம். கொடுத்த வாக்­கு­றுதி எதை­யும் நிறை­வேற்­றா­தது எப்­படி நல்­லாட்­சி­யாக இருந்­தி­ருக்க முடி­யும்?

2016 அ.தி.மு.க. தேர்­தல் அறிக்­கை­யில் முக்­கி­ய­மா­கச் சொன்ன அறி­விப்பு, வேலைக்­குச் செல்­லும் பெண்­க­ளுக்கு அம்மா ஸ்கூட்­டர். வழங்­கப்­ப­டும் என்­ப­து ­தான். ஆட்­சிக்கு வந்­த­தும் கிடப்­பில் போட்ட அறி­விப்பை 2019 நாடா­ளு­மன்­றத் தேர்­த­லுக்­காக அப்­போது பா.ஜ.க. கூட்­ட­ணி­யில் இருந்த அ.தி.மு.க. திடீ­ரென பிர­த­மர் மோடியை வைத்­துத் தொடங்­கி­னார்­கள். அம்மா ஸ்கூட்­டர் மானி­யம் வெறும் 2.85 பய­னா­ளி­க­ளுக்கு மட்­டுமே வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பணிக்­குச் செல்­லும் எல்லா பெண்­க­ளுக்­கும் வழங்­கு­வ­தா­கச் சொன்­னது ஏமாற்று வேலை. ‘ஸ்கூட்­டர் வாங்க 50 சத­வி­கி­தம் மானி­யம் வழங்­கப்­ப­டும்’ எனப் பிரச்­சா­ரத்­தில் ஜெய­ல­லிதா சொன்­னார். ஆனால், ஸ்கூட்­டர் விலை­யில் 50 சத­வி­கி­தமோ அல்­லது 25 ஆயி­ரம் ரூபாய் இதில் எது குறைவோ அந்­தத் தொகை­தான் மானி­ய­மா­கக் கொடுத்­தார்­கள். அத­னால் ஸ்கூட்­டர் வாங்­கி­ய­வர்­க­ளுக்­குப் பாதி தொகை வழங்­கப்­ப­ட­வில்லை.

2016-ல் அ.தி.மு.க வெளி­யிட்ட தேர்­தல் அறிக்­கை­யில், ’ஆதி திரா­வி­டர் பழங்­கு­டி­யி­னர் நல விடு­தி­க­ளுக்கு நீராவி கொதி­க­லன்­க­ளும் நீராவி இட்லி குக்­கர்­க­ளும் வழங்­கப்­ப­டும்’ என்று அறி­வித்­தார்­கள். வெறும் காத்­து­தான் வந்­தது. நரிக்­கு­ற­வர்­க­ளைப் பழங்­கு­டி­யி­னர் பட்­டி­ய­லில் சேர்ப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்ற அறி­விப்பு முதல்­வர் பழ­னி­சாமி ஆட்­சி­யில் உறங்­கிக் கொண்­டி­ருந்­தது. ‘அம்­பேத்­கர் கொள்­கையை பரப்ப 5 கோடி­யில் அம்­பேத்­கர் பவுண்­டே­ஷன் நிறு­வப்­ப­டும்’ என்ற அறி­விப்பு நக­ரவே இல்லை.

‘‘அரசு மருத்­து­வ­ம­னை­க­ளில் செயற்கை கருத்­த­ரித்­தல் மையங்­கள் அமைக்க வேண்­டும்’’ என்­கிற கோரிக்கை தொடர்ச்­சி­யாக எழுந்த நிலை­யில்­ தான், ‘‘7 அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் 6 தலைமை அரசு மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் கட்­ட­ண­மில்லா கருத்­த­ரிப்பு மையங்­கள் ரூ.10 கோடி­யில் உரு­வாக்­கப்­ப­டும்’’ என 2017 ஜூனில் அறி­வித்­தது அ.தி.மு.க. ஆட்சி. ‘மக­ளிர் சிறப்பு மருத்­து­வர், உட­லி­யல் மருத்­து­வர், லேப்­ராஸ்­கோப்பி சிகிச்சை மருத்­து­வர் எல்­லாம் கருத்­த­ரிப்பு மையங்­க­ளில் இருப்­பார்­கள்’ எனச் சொன்­னார்­கள். முதல் கட்­ட­மா­கச் சென்னை, கோவை, மதுரை, திருச்சி,

திரு­நெல்­வேலி, தஞ்­சா­வூர் ஆகிய 6 அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ ம­னை­க­ளில் தொடங்­கப்­ப­டும் என்­றெல்­லாம் செய்­தி­கள் வெளி­யா­கின. ஆனால் எது­வும் நடக்­க­வில்லை.

அமெ­ரிக்க சுதந்­திர தேவி சிலை போல ரூ. 100 கோடி­யில் மது­ரை­யில் தமிழ்த்­தாய்க்கு சிலை அமைக்­கப்­ப­டும் என சட்­ட­மன்ற விதி 110-ன் கீழ்

அறி­விப்பை 2013 மே 14-ம் தேதி வெளி­யிட்­டார் முதல்­வர் ஜெய­ல­லிதா. தமிழ்த்­தாயை ஏமாற்­றிய ஆட்­சி­தான் அம்மா ஆட்சி.

2011 அ.தி.மு.க. தேர்­தல் அறிக்­கை­யில் இருந்­தவை பழ­னி­சா­மிக்கு நினை­வில் இருக்­கி­றதா?

* சென்னை முதல் கன்­னி­யா­கு­மரி வரை கட­லோர சாலைத் திட்­டம்.

* தென் தமி­ழ­கத்­தில் ‘ஏரோ பார்க்’.

* ஆன்­லைன் வர்த்­த­கம் தடுக்­கப்­ப­டும்.

* 10 ஆடை அலங்­கா­ரப் பூங்­காக்­கள்.

* திருப்­பூர் சாயக் கழி­வு­க­ளைச் சுத்­தி­க­ரிக்க விஞ்­ஞா­னக் கழிவு அகற்­றும்

நிலை­யம்.

* 58 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு இல­வச பஸ் பாஸ்.

* மின்­னணு ஆளு­மை­யின் கீழ் அனைத்­துக் காவல் நிலை­யங்­கள்.

* விவ­சா­யி­க­ளைப் பங்­கு­தா­ரர்­க­ளா­கக் கொண்ட 6 ஆடை அலங்­கார சிறப்­புப் பொரு­ளா­தார மண்­ட­லங்­கள்.

* பள்­ளி­க­ளில் தாய்­மொ­ழி­யோடு பிற­மொ­ழி­கள் பயில சிறப்­புப் பயிற்­சி­கள்.

* நீதி­மன்­றங்­க­ளில் தமிழ்­மொழி.

* தமி­ழில் படித்­த­வர்­க­ளுக்கு அரசு வேலை­வாய்ப்­பில் முன்­னு­ரிமை.

* வன­வி­லங்­கு­கள் குடி­யி­ருப்பு, விவ­சாய நிலங்­க­ளுக்­குள் புகு­வ­தைத்

தடுக்க நட­வ­டிக்கை.

* தக­வல் தொழில்­நுட்ப வளர்ச்­சியை இரண்டு மடங்­காக்­கு­வோம்.

* மொபைல் மின்­னணு ஆளு­மைத் திட்­டம்.

- – இவை எது­வும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை ஜெய­ல­லிதா ஆட்­சி­யில்!

2016 தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லப்­பட்­டது நினை­வில் இருக்­கி­றதா?

அனைத்து ரேஷன் அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் செல்­போன் விலை­யின்றி வழங்­கப்­ப­டும், பெரிய பேருந்து நிலை­யங்­கள், வணிக வளா­கங்­கள், பூங்­காக்­கள் போன்ற பொது இடங்­க­ளில், இல­வச ‘வை-பை’ இணை­ய­தள வசதி வழங்­கப்­ப­டும், அனைத்து ஊராட்சி ஒன்­றி­யங்­க­ளி­லும் அம்மா இரு சக்­கர வாகன பழுது பார்க்­கும் பயிற்சி மையம் உரு­வாக்­கப்­ப­டும் – இப்­ப­டிச் சொன்­னது எதை­யும் செய்­ய­வில்லை. சொன்­னது எதை­யும் செய்­யாத பழ­னி­சா­மி­தான் நல்­லாட்சி தந்­தா­ராம்.

7.12.2020 நாளிட்ட ‘இந்­தியா டுடே’ ஏடு வெளி­யிட்ட ஆய்வு அறிக்­கைப்படி ஐந்து ஆண்­டு­க­ளின் ( 2015 – 20 ) செயல்­பாட்­டில் 19 வது இடம் தரப்­பட்­டது அ.தி.மு.க. ஆட்­சிக்கு. 20 மாநி­லங்­க­ளில் 19 ஆவது இடம். கடை­சி­யில் இருந்து இரண்­டா­வது இடம் என்று வேண்­டு­மா­னால் பழ­னி­சாமி பெரு­மைப்­பட்­டுக் கொள்­ள­லாம்.


நன்றி:முரசொலி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?