ஆனைய வரலாற்றில் முதல் முறையாக
பொது இடங்களில் விதிமீறி குப்பை கொட்டியதாக ரூ.1 கோடி அபராதம் .வசூல்.
குப்பை கூளங்களுடன் பயணித்த பேருந்து அரசு பேருந்தில் சேர்ந்த குப்பைகளை காண பொறுக்காமல் சுத்தம் செய்த பயணி தனது வீடு போல நினைத்து சுத்தம் செய்த பயணி மாஞ்சோலை தமிழரசிக்கு
தேர்தல் பிரமாண பத்திரத்தில் பொய் தகவல் அளித்த குற்ற வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஜோலார்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காததால், ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராமமூர்த்தி கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
அதனடிப்படையில், கே.சி.வீரமணியின் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறி, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ பிரிவின் கீழ் நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று ராமமூர்த்தி மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி கே.சி.வீரமணியின் பிரமாண பத்திரத்தில் தீவிர குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறி அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி சொத்துக்களை மறைத்து முறைகேடாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், கே.சி.வீரமணி மீது தேர்தல் ஆணையம் 125ஏ (பிஎன்எஸ்) மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் மாஜிஸ்திரேட் மகாலட்சுமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், வரும் 26ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, அவருக்கு 2 நாட்களுக்குள் சம்மன் அனுப்பப்படும் என தெரிகிறது. இந்த வழக்கு நாட்டிலேயே முதன்முறை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் முன்னாள் அமைச்சர் வீரமணிக்கு ஆறு மாத சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும், வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்படும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
654 மடங்கு சொத்து குவிப்புகடந்த 2ஆண்டுகளுக்கு முன்பாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 21 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, அவர் கடந்த 1-4-2016 முதல் 31-3-2021 வரை வருமானத்துக்கு அதிகமாக 654 மடங்கிற்கு சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவுசெய்துள்ளதுகுறிப்பிடத்தக்கது