மீண்டும் எரிகிறது!
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
மேலும், அமைச்சர்கள், ஏம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
மணிப்பூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஜிரிபம் மாவட்டத்தில் 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும், அமைச்சர்கள், ஏம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
இதனால் மணிப்பூரில் ஊரடங்கும் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜிரிபம் மாவட்டத்தில் மெய்தி மக்கள் இருந்த முகாம்களில் இருந்து 6 பேர் காணாமல் போகினர்.
கடந்த வாரம் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நிவாரண முகாமில் வசிக்கும் மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் காணாமல் போயினர். அவர்கள் பயங்கரவாதிகளால் மெய்தி சமூகத்தினர் குற்றச்சாட்டினர்.
காணாமல் போன 6 பேரையும் பாதுகாப்பு படையினர் மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் தேடி வந்தனர். அப்பகுதியில் மணிப்பூர் போலீசார் நடத்திய தேடுதல் பணிகளின்போது, 6 பேரின் உடல் ஆற்றில் மீட்கப்பட்டுள்ளன.
ஆற்றில் இருந்து எட்டு மாத கைக்குழந்தை உட்பட காணாமல் போன ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். கடந்த வாரம், ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று பாஜகவைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள், ஆறு எம்.எல்.ஏக்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் தாக்கியதல் பதற்றம் அதிகரித்தது.
மேலும், முதலமைச்சர் பிரைன் சிங்கின் இல்லத்தில் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அவரது மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ராஜ்குமார் இமோ சிங், எம்ஏல்ஏக்கள் ரகுமணி சிங், சபம் குஞ்சகேஸ்வரர் மற்றும சபம் நிஷிகாந்தா ஆகியோரின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் மூன்று எம்.எல்.ஏக்களின் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர்.
இதனால் மணிப்பூரின் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இம்பாலின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
எம்.எல்.ஏக்கள் வீடுகள் மீது 6 பேர் கொல்லப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த மணிப்பூரில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கின் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்னுபூர், தௌபால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தௌபல், கக்சிங், காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் 7 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
6 பேர் கொலை செய்யப்பட்ட விஷயம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கத் தவறினால் பதவி விலகுவதாகவும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் சபம் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” மணிப்பூரில் சமீபகாலமாக வன்முறை மோதல்கள் தொடர்வது ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வரும் வன்முறை கலவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தீர்வு கண்டிருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கையாக இருக்கிறது.
மணிப்பூருக்கு மீண்டும் ஒருமுறை பிரதமர் வருகை தந்து, அந்தப் பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
---------------------------------
இன்று....,
17/11/2024.
• தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் கனமழை; இன்று மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. • தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஐதராபாத்தில் கைது செய்தது தனிப்படை.; சென்னை அழைத்துவந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டம். • மின் வழித்தடத்தில் பற்றிய தீயால் கிண்டி அரசு மருத்துவமனையில் மின்தடை; அமைச்சர்கள், அதிகாரிகள் விரைந்து சென்று மின் தடையை சரி செய்து நடவடிக்கை. • சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு; ஏழு மணி நேரம் தாமதமானதால் பயணிகள் கடும் அவதி. • அமெரிக்க அதிபர் பைடனை போல பிரதமர் மோடியும் நினைவாற்றலை இழப்பதாக ராகுல் காந்தி விமர்சனம்; தன்னை இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் எனக் கூறியதற்கு கண்டனம். • இலங்கையின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நாளை நியமனம்; புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் வரும் 21-ம் தேதி தொடக்கம்.
சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து உள்ளதா?
காய்சலை உடனே குணப்படுத்த முடியுமா என்ற ஐயம் அனைவருக்கும் உள்ளது.
சித்த மருத்துவத்தில் காய்ச்சலுக்கு மருந்து உள்ளது.
காய்ச்சல் முதல் 4,448 நோய்களுக்கும், சித்த மருத்துவத்தில் சிகிச்சைகள் உள்ளன.
சித்த மருந்துகள் தாமதமாகத்தான் வேலை செய்யும் என எண்ணாதீர்கள். உடனடி தீர்வு தரும் சித்த மருந்துகளும் உள்ளன. சித்த மருத்துவ நூல்களில் 64 வகையான காய்ச்சல் இருப்பது விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
வயிறு, குடல், மலச்சிக்கல் போன்றவையே காய்ச்சல் வரக்காரணமாகும். வாதம், பித்தம், கபம் சரி செய்து சித்த மருந்துகளை வழங்கவேண்டும்.
முதலில் வயிற்றில் உள்ள அழுக்கை வெளியேற்ற மலமிளக்கி மருந்தை வழங்கி, வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றி பின்னர் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கவேண்டும்
திரிபலா சூரணம் காலை 5 கிராம்
மாலை 5 கிராம் வெந்நீரில் கலந்து கொடுக்க வேண்டும். அல்லது நிலவாகை சூரணம் மேற்கண்ட அளவுப்படி அல்லது பொன்னாவிரை மாத்திரை மருத்துவர் ஆலோசனைப்படி வழங்கவேண்டும்.
பின்னர்,
குடிநீர் வகைகள்
நிலவேம்பு குடிநீர்
கபசுர குடிநீர்,
வாதசுர குடிநீர்
ஆடாதொடை குடிநீர்
நொச்சி குடிநீர்
ஆகியன சித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் பயன்படுத்த வேண்டும்.
பிரம்மானந்த பைரவ மாத்திரை
கருப்பு விஷ்ணு சக்கர மாத்திரை,
சாந்த சந்திரோதயம் மாத்திரை,
வசந்த குசுமாசுர மாத்திரை
பால சஞ்சீவி மாத்திரை
மஹா சுதர்சன மாத்திரை
நிலவேம்பு குடிநீர் சூரணம் மாத்திரை
கோரோசனை மாத்திரை போன்ற மாத்திரைகளை சித்த மருத்துவரின் பரிந்துரையின்பேரில் வாங்கி பயன்படுத்தவேண்டும்.
திரிகடுகு சூரணம்
தாளிசாதி சூரணம்
மஹா சுதர்சன சூரணம்
பற்பம்
பவள பற்பம்,
முத்து பற்பம்,
முத்து சிப்பி பற்பம்
சிருங்கி பற்பம்
வெள்ளி பற்பம் ஆகியன
செந்தூரம்
லிங்க செந்தூரம்
பூரண சந்திரோதயம்
கருப்பு வகைகள்-
சிவனார் அமிர்தம்,
கௌரி சிந்தாமணி,
கஸ்தூரி கருப்பு.
இருமலுக்கு - ஆடாதோடை மணப்பாகு
தாளிசாதி வடகம் மாத்திரை
அதிமதுரம் மாத்திரை வாங்கி ஒன்று அல்லது இரண்டு மாத்திரை வாயில் போட்டு சவித்து சாப்பிடலாம்.
இந்த மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி வாங்கி நாள் அளவு, மருந்தின் அளவு தெரிந்து பயன்படுத்த வேண்டும். சுயமாக எவ்வித சித்த மருந்துகளையும் பயன்படுத்தவேண்டாம் சில மருந்துகளுக்கு பத்தியம் உண்டு.இல்லாவிடில் பக்கவிளைவுகள் உண்டாக்கும்.