அசிங்கப்பட்ட இந்தியா?
இந்திய நீதித்துறைக்கு செருப்படி குடுத்துள்ள அமெரிக்க நீதிமன்றம் சூர்யசக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் குடுக்க முன்வந்ததாக மோடியின் உயிர் நண்பர் அதானி ,அவரது உறவினர்களை கைது செய்யபிடிவாரண்ட்பிறப்பித்துநியூயார்க்நீதிமன்றம்.அதானியைநெருங்கவேஇந்தியஅதிகாரிகள்,நீதி யரசர்களுக்கு மூக்கறுப்பு.?
இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அதானி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு அளிக்கப்பட்டுள்ளது.
எனினும், தனது தவறை அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மறைத்து, அதானி தனது திட்டத்திற்காக பெரும் தொகையை திரட்டினார் என்றும் குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.
அதானியின் செயல் வெளிநாட்டு முதலீட்டு சட்டப்படி தவறானது எனக் கூறி நியூயார்க்கில் உள்ள பெடரல் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவுதம் அதானி மட்டுமின்றி அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் பெயரும் இடம் பெற்றுள்ளது.
இதே புகாரில்அமெரிக்கபங்குபரிவர்த்தனை ஆணையமும் அதானி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஹின்டன் பர்க் ஆதாரங்களுடன் தெரிவித்த அதானியின் நிதி -பொருளாதாரக் குற்றங்கள் மீது இந்திய ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதை இந்தியா பொருளாதாரம் மீதான தாக்குதலாகவே மோடி அரசு கட்டமைத்துக் கொண்டிருந்தது.
இந்த அதானி மீதானமோசடி வழக்கும் இந்தியா மீதான தாக்குதல்தானே?
'காற்று மாசு' கவனம்.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு 488 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது. இதனை ‘மிகத் தீவிரம் ப்ளஸ்’ என்று சொல்கிறார்கள். இது மிகமிக அபாயகரமானது ஆகும்.
காற்றின் தரக்குறியீடு என்பது 201–300 என்ற அளவில் இருந்தால் மோசம் என்றும் – 301–400 என்ற அளவில் இருந்தால் மிக மோசம் என்றும் – 401–450 என்ற அளவில் இருந்தால் மிகத் தீவிரம் என்றும் – 450க்கு மேல் இருந்தால் மிகத் தீவிரம் ப்ள்ஸ் – என்றும் கணிக்கப்படுகிறது. மிகத் தீவிரம் ப்ளஸ் என்றால் சுவாசிக்க முடியாத, சுவாசிக்கக் கூடாத காற்று என்று பொருள். தலைநகர் எந்தளவுக்கு மோசமான சூழலில் சிக்கிஉள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
காற்றின் தரக் குறியீடு கடந்த 17 ஆம் தேதியன்று 494 புள்ளிகளை எட்டியது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டாவது முறையாகப் பதிவான மிக மோசமான அளவு ஆகும். இது 19 ஆம் தேதியன்று 488 புள்ளிகளாக இருந்தது. இதுவும் மிக மோசமான அளவே ஆகும்.
உலக அளவில் காற்று மாசு மோசமாக இருக்கும் நகரமாக பாகிஸ்தானின் லாகூருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் தலைநகர் டெல்லி இருக்கிறது. லாகூரில் காற்றின் தரக்குறியீடு 1000 புள்ளியாகப் பதிவாகி இருக்கிறது. அதில் பாதியளவுக்கு மாசடைந்துள்ளது டெல்லி.
இயற்கை நிலையைத் தடுப்பதாக காற்று மாசு அமைந்துவிட்டது. மேகங்களில் படர்ந்த தூசி மற்றும் புகையானது குளிர் காற்றையும், குறைந்த வானிலையையும் உணரமுடியாத அளவுக்குத் தொல்லையை டெல்லி மக்களுக்குக் கொடுத்து வருகிறது. இதற்குக் காரணம், அடர் பனிப்புகை மூட்டமானது சாம்பல் மேகம் போலக் காட்சியளிப்பது ஆகும்.
எதிரில் இருப்பது தெரியாத அளவுக்குப் புகை மண்டலமாகக் காட்சி அளிக்கிறது. விமான நிலையங்களில் ஓடுதளப் பாதையே தெரியவில்லை. இதனால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டெல்லியை நோக்கி வந்த விமானங்கள் வேறு நிலையங்களுக்கு மாற்றப்பட்டது.
10,12 ஆம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகின்றன. இந்த மாணவர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் மூடப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. அவசிய, அவசரப் பொருள்களை ஏற்றி வரும் லாரிகள் தவிர மற்றவை எதுவும் டெல்லிக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பசுமை எரிபொருளால் இயங்கும் வாகனங்கள் தவிர மற்றவை டெல்லிக்குள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலப் பதிவெண் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான அலுவலகங்கள் இயங்கவில்லை. நீதிமன்ற விசாரணைகள் ஆன்லைனில் நடக்கின்றன. மொத்தத்தில் டெல்லியே மூடிக்கிடக்கிறது.
இதுபோன்ற சூழலில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை டெல்லி அரசு முடுக்கி விட்டுள்ளது. இப்போது எடுக்கப்பட்டு இருப்பது நான்காம் நிலைக் கட்டுப்பாடு ஆகும். இதனை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. ‘
‘காற்றின் தரம் டெல்லியில் தொடர்ந்து மோசமாக இருந்துள்ளது.
காற்றுத் தரக் குறியீடு 450 என்ற நிலையை எட்டும் வரை நான்காவது கட்டுப்பாடு நடவடிக்கைகளை ஏன் செய்யவில்லை?’’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளார்கள். ‘‘இந்த நடவடிக்கைகளை எங்கள் அனுமதி இல்லாமல் இனி எடுக்கக் கூடாது’’
என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள்.
காற்றில் இருக்கும் நுண் துகள்களைக் கொண்டே காற்றின் தரம் கணக்கிடப்படுகிறது. மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள், மேற்குப் பசிபிக் நாடுகள் – அதிக மாசு அடைந்த நாடுகளாக உலக சுகாதார அமைப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காற்று மாசுபாடு என்பது உலகளாவிய சவாலாக இன்று மாறி வருகிறது.
காற்று மாசுபாட்டின் அளவானது நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வாகனங்கள் வெளியிடும் புகையால் அதிகளவு காற்று மாசு அடைகிறது. தொழிற்சாலை புகைகளும் இதில் சேர்கிறது.
நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா ஆகிய நோய்கள் இதன் மூலம் அதிகம் ஆகி வருகிறது. அனைத்துவிதமான மாசுகள், அதிகப்படியான உயிரிழப்புகளுக்கு காரணமாகி வருகின்றன. எனவே இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசர அவசியம் ஆகும்.
ஒன்றிய சுகாதாரத் துறை சேவைகள் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், ‘காற்று மாசுபாடு சமீபகாலமாக ஒரு தீவிரமான சுகாதார சவாலாக மாறியுள்ளது’ என்று எச்சரித்துள்ளார்.
“கடும் மாசுபாட்டு சுவாசம் என்பது இருதயம் மற்றும் பெருமூளை அமைப்பு களை பாதிக்கக்கூடும். காற்று மாசுபாட்டின் நீண்ட கால வெளிப்பாடு என்பது பெரும்பாலும் முன்கூட்டிய இறப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், போக்குவரத்துப் போலீஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் போன்றவர்கள் அதிக பாதிப்பு அபாயங்களை எதிர்கொள்கின்றனர். எனவே அரசும், பொதுமக்களும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
விழிப்புணர்வு மூலம் குப்பைகள் மற்றும் கழிவுகளை எரிப்பதை ஊக்கப்படுத்துதல், பண்டிகைகளின்போது பட்டாசுகள் வெடிப்பதை குறைத்தல், தனிநபர் டீசல் அல்லது பெட்ரோலில் இயங்கும் வாகனங்களில் பொது போக்குவரத்தை ஊக்குவித்தல், டீசல் அடிப்படையிலான ஜெனரேட்டர்களை நம்பியிருப்பதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் புகைபிடிப்பதை கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
அதிக நெரிசலான பகுதிகளைத் தவிர்த்தல் மற்றும் வீட்டில் சமையல், சூடு மற்றும் விளக்குகளுக்கு சுத்தமான எரிபொருளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் சுவாசம் மற்றும் இருதய நோய்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்கெனவே உள்ளவர்கள் மோசமான அறிகுறிகளை அல்லது மோசமான காற்றின் தரம் காரணமாக அசௌகரியத்தை அனுபவிப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்றைச் சுத்தப்படுத்துவது கடினம்.
மாசுபடுத்தாமல் இருத்தல் எளிது.
மாசுபடுத்தாமல் இருப்போம்.