சங்கி மாடல் தேர்தல்!
"அதானி மீது ஒன்றிய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஹின்டன்பர்க் குற்றசாட்டுகள் உட்பட அனைத்துஅதானி ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும்.
ஊழலில் சிக்கியுள்ள அதானி இந்தியாவில் பாதுகாப்பாக இருப்பதற்கு பிரதமர் மோடிதான் காரணம்."-எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
உ.பி.சங்கி மாடல் தேர்தல்.
மக்களவைத் தேர்தல் 2024 மற்றும் ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேர்தல்களாக மகாராஷ்ரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்கள் அமைந்துள்ளன.
இவ்விரு மாநிலங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற வேளையிலேயே இந்தியாவின் பல பகுதிகளில் இடைத்தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது.
இடைத்தேர்தல்களை பொறுத்தமட்டில், வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல், உத்தரப் பிரதேசத்தின் 9 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் உள்ளிட்டவை மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்தன.
அவ்வாறு, மிகுந்த எதிர்பார்ப்புடன் உத்தரப் பிரதேசத்தின் 9 தொகுதிகளில் நேற்று (நவம்பர் 21) வாக்குப்பதிவு நடைபெற்ற போது, பா.ஜ.க அரசின் கீழ் செயல்படும் காவல்துறையினர் தடி மற்றும் துப்பாக்கி ஏந்தி பெருவாரியான வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் இடைமறித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
குறிப்பாக இஸ்லாமியர்களையும், இதர சிறுபான்மையினர்களையும் வாக்களிக்க விடாமல் தடுத்த காணொளிகளை இணையத்தில் வெளிக்காட்டியது, உத்தரப் பிரதேச சட்டபேரவை எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி.
காணொளி ஆதாரங்கள், பா.ஜ.க அரசின் காவல்துறையினர் கட்டவிழ்த்த அட்டூழியங்களை உறுதிப்படுத்த, தேர்தல் ஆணையத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு, 5 உத்தரப் பிரதேச காவலர்கள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
காவல்துறையினரின் இடையூறால், உத்தரப் பிரதேசத்தின் 9 தொகுதிகளில் நடந்த வாக்குப்பதிவின் சராசரி 50 விழுக்காட்டிற்கும் குறைவாகி, 49.3 விழுக்காடாக நின்றது.
இந்நிகழ்வு, மக்களின் வாக்குரிமை பறிப்பை எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாமல், உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க அரசின் கொடுங்கோன்மையையும் வெளிச்சமிட்டு காட்டும் நிகழ்வாக அமைந்துள்ளது.
மோடி நண்பன் அதானி திருவிளையாடல்.
அமெரிக்க நீதிமன்றம் பாராட்டு.
இந்தியாவின் பிரதமராக விளங்கும் மோடியின் நெருங்கிய நண்பரும், உலக பணக்காரர்களில் மிகவேகமாக வளர்ச்சியடைபவருமான அதானி மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசிற்கும், அதானி குழுமத்திற்கும் தவிர்க்கமுடியாத தொடர்பு உள்ளது என்பது, வானூர்தி நிலையங்கள், சூரிய ஒளி மின்சார நிலையங்கள், இராணுவ தளங்கள், நிலக்கரி சார்ந்த தொழில்கள் என அரசு உடைமைகள் பல அதானி குழுமத்திற்கு தாரைவார்க்கப்பட்டதிலிருந்தே அறியக்கூடியதாய் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்கிற ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குகளில் பல குளறுபடிகள் நடக்கின்றன என்ற தகவலை வெளியிட்டது. இதனால், அதானியின் பங்குகள் ஏற்றம் கண்ட வேகத்தில், இறக்கம் கண்டது.
அதானி குழுமத்தின் பங்குகளில் நடந்த குளறுபடிகள் குறித்த தீவிர விசாரணை வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்ததற்கு, உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்து, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தை (SEBI) விசாரணை செய்ய உத்தரவிட்டது.
இறுதியில் செபி தலைவரும் கூட அதானி குழுமத்தில் பங்குதாரர்தான் என்ற தகவலையும் வெளிப்படுத்தியது SEBI. எனினும், இது தொடர்பாக ஒன்றிய அரசு, இதுவரை எவ்வகையான தகுந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்பொது, அமெரிக்காவின் FBI உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அறிக்கைகளின் அடிப்படையில், இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் சோலார் நிறுவனம் தொடங்க, அதானி குழுமத்தால் பல கோடி லஞ்சம் கொடுக்க முயற்சித்தாக அமெரிக்காவின் புரூக்ளீன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செய்லாளர் ஜெய்ராம் ரமேஷ், “அதானி குழுமம் சூரிய மின்திட்டத்தை பெற இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கூட்டுக்குழு விசாரணை தேவை. அதானி ஊழல் மீது விசாரணை தேவை என்ற கோரிக்கை கடந்த ஓராண்டாக நிலுவையில் உள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதானி எதிராக அமெரிக்க புரூக்லின் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை எதிரொலியாக, அதானி குழுமம் நிறுவனங்களின் பங்குகளின் விலை 10 விழுக்காடு முதல் 28 விழுக்காடு வரை சரிவு.