இது இந்திய அமைதிக்கு சரியல்ல.
சரியல்ல.
முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆண்டாய்வு: மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (25)தொடங்குகிறது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது.
நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ், திமுக,திரிணமூல் காங்கிரஸ், , சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்த) மசோதாவும் இடம்பெற்றுள்ளது.
டெல்லி மாவட்ட நீதிமன்றங்களின் மேல்முறையீட்டு அதிகார வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.
இதுதவிர, வணிக கப்பல், கடலோர கப்பல் போக்குவரத்து, துறைமுகம் குறித்த மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்து, விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட உள்ளன.
மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
பரபரப்பான சூழலில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது.
கோவிலா? மசூதியா?
மேற்கு உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வுப் பணிகளின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.
வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பல வாகனங்களுக்குத் தீ வைத்தது. அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர்.
இதில் 15-20 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் நயீம், பிலால், நௌமான் ஆகிய மூவர் உயிரிழந்தளர்.
உயிரிழந்தவர்களில் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றுது.
கல் வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள், சிறுவர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின்படி கோட்வாலி சம்பல் பகுதியில் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வந்தன. ஆய்வுப் பணிகள் அமைதியாக நடந்து கொண்டிருந்தன.
அந்த நேரத்தில் பல தெருக்களில் இருந்து மக்கள் வெளியே வந்து திடீரென காவல்துறை மீது கற்களை வீசித் தாக்கினர்.
"
தடியடி நடத்தி கூட்டம் கலைக்கப்பட்டது. கற்களை வீசிய மக்கள் மீது கண்ணீர்ப் புகை குண்டுகளும் வீசப்பட்டன. சம்பல் பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
சிசிடிவி கேமராக்கள் மூலம் வன்முறையைத் தூண்டியவர்கள் யார் என்பது அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிமேல் வன்முறையில் ஈடுபட நினைக்கும் மக்கள் நினைவில் கொள்ளும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஉத்தர பிரதேச டிஜிபி பிரசாந்த் குமார் கூறினார்.
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்குத் தடையாக இருப்பவர்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சம்பல் வழக்கு குறித்து உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளார்.
சம்பல் சம்பவத்திற்குயோகிஆதித்யநாத்தின் நிர்வாகமே காரணம் சம்பலில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. இரு தரப்பினரையும் கூட்டிச் சென்று அமைதியான முறையில் இந்தப் பணி நடந்திருக்க வேண்டும், அது நடைபெறவில்லை.
சம்பலில் நடக்கும் குழப்பம் மற்றும் வன்முறைக்கு யோகியின் பாஜக அரசும்,காவல்துறை நிர்வாகமும்தான் காரணம்.மக்கள் அமைதி காக்க வேண்டும்என்று மாயாவதி கூறினார்.
பாஜக அரசு மக்கள் வாழ்க்கைத் தரம் உயரவும் ,வேலைவாய்ப்பை உருவாக்கவும் தேவையானவற்றைச் செய்யாமல்,அயோத்தியில் ஆரம்பித்து மசூதி அடியில் கோவில் ஏதேனும் இருக்கிறதா என்று அகழ்வாராய்ச்சி மட்டுமே செய்து மக்கள் மத்தியில் குழப்பத்தையும் மத வன்முறையை ஒன்றிய அரசே உருவாக்குகிறது.
இது இந்திய அமைதிக்கு சரியல்ல.