காட்சிப் பொருளா?

 அந்தமான் அருகே ரூ36 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதல்: மியான்மர் நாட்டைச் சேர்ந்த 6 பேர் கைது.

நாடாளுமன்ற விவாதங்களை 22 இந்திய மொழிகளில்சென்னைஐஐடிமொழிபெயர்க்கிறது.தமிழ்நாடு

பள்ளி மாணவிகளிடம் தவறாக நடக்கும் ஆசிரியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு.எச்சரிக்கும் தனியார் பள்ளிகள் இயக்குநரகம்.

78 கோடி பேருக்கும் கியூஆர் கோடு வசதியுடன் பான் கார்டு புதுப்பிப்பு: ரூ.1435 கோடியில் புதுத்திட்டம்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்கக் கோரி பேரணி யில் காவல்துறையுடன் மோதலில்6பேர்உயிரிழப்பு.இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு அமல்.




டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் அடுத்தடுத்து நிர்வாகிகள் மோதிக் கொண்ட நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vii) மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 15.12.2024 – ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



காட்சிப் பொருளா?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள் ளது. 


இந்த சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யவும் முடிந்தால் மாற்றியமைத்து மநு(அ)நீதி அடிப்படையில் புதிய சட்டத்தைக் கொண்டு வரவுமே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனக்கு 400 தொகுதிகளில் வெற்றியைத் தரவேண்டும் என மக்களிடம் வரம் கேட்டது. 


ஆனால் அவ்வாறு தந்தால் அதுவே நமக்கு சாபமாகி விடும் என்பதை உணர்ந்துதான் ஏற்கெனவே பெற்றிருந்த இடங்களை விடக்குறை வாக, பெரும்பான்மைக்கு குறைவான இடங்க ளையே மக்கள் வழங்கினர். 

அதனால் சொந்தக் காலில் நிற்க முடியாமல் அடுத்தவர் கால் உதவியோடு பதவியில் அமர்ந்திருக்கிறது மோடி அரசு. 

திங்களன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா அரசியலமைப்புச் சட்டமானது அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்றும், அது எப்போதும் சமூக ஆவணமாகவே தொடர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

அதாவது காட்சிப் பொருளாக இருக்க வேண்டும் என்கி றார். 

அதுதான் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கு வழிகாட்டி என்பதை மறுக்கிறார். பிறகு எது வழி  காட்டும்? நமது மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்க ளில் இருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். 

இதன் மூலம் நாடாளுமன்ற அவைகளில் நல்ல விவாதங்களை நடத்த முடியும் என்கிறார். இது தான் ஆர்எஸ்எஸ்- இந்துத்துவா கூட்டத்தின் வழி நடக்கும் பாஜகவினரின் நடைமுறை.

ஏனெனில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையிலுள்ள சோசலிசம், மதச்சார்பின்மை ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது இந்தக் கூட்டம் தான்.

 ஆனால் உச்சநீதிமன்றம், அவற்றை இணைத்தது செல்லும் என்றும் இவை இரண்டும் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் அங்கம் என்றும் கூறி அவர்களது மனுக்களை தள்ளுபடி செய்து குட்டு வைத்தது குறிப்பி டத்தக்கது.

அரசமைப்புச் சட்ட தினத்தன்று நாடாளு மன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, நமது அரசியலமைப்பு உயிருள்ள முற்போக்கான ஆவணம் என்று கூறியிருக்கிறார். 

ஆனால் அரசின் நடவடிக்கைகளோ பிற்போக்காகவும் சமூக நீதிக்கு எதிராகவுமே அமைந்துள்ளன. இந்த நாளை வெறும் சடங்காக அல்லாமல், அதன் உண்மையான நோக்கங்களை நிறை வேற்ற உறுதியேற்கும் நாளாகவே கொண்டாட வேண்டும். 

அத்துடன் இன்றைய ஆட்சியாளர்க ளிடமிருந்து அரசமைப்புச் சட்டத்தை பாது காப்பதுடன் அதன் நோக்கங்களான சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்தை நிலைநாட்டப் பாடுபடுவதே நாட்டு மக்களின் கடமையாகும். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?