ஆம்புலன்ஸ் அவசரம்?

 Bouncing pad என ஒரு தொழிலதிபர்கள் குழு ஒன்னு இணையதளத்தில் இயங்கி வருகிறது.பல வருடாக இயங்கி வரும் தமிழக மீடியாக்களின் தலைவர்கள் மோடியை சந்தித்தற்கும் Bouncing pad  தான்  சூத்திரதாரி.இதில் ஆதவ் அர்ஜுனாஆக்டிவ்மெம்பர்.இவர்கள்தான்திருமாவையும்,விஜய்யையும் இணைக்க திட்டமிட்டுள்வர்கள்.

வடக்கே முருகன் பிரமச்சாரி, முருகன் அண்ணன், வினாயகருக்கு 2 பொண்டாட்டி.தெற்கே முருகன்-தான் தம்பி, முருகனு-க்கு 2 பொண்டாட்டி, விநாயகன்பிரமச்சாரி.

உங்களின்கடவுளிளைப் பற்றியே முழு விவரம் தெரியாத போது,சாமனியனுக்கு எப்படி விவரம் சரிபார்த்து குடியுரிமை கொடுப்பீங்க?



ஆம்புலன்ஸ் அவசரம்?

2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், திருச்சூர் தொகுதியை வென்று, கேரளத்தில் கால் பதிக்க இயலாமல் தவித்து வந்த பா.ஜ.க.விற்கு, ஒரு இடம் கிடைக்க வழிவகுத்தார் நடிகர் சுரேஷ் கோபி.

அதனால், அவருக்கு ஒன்றிய இணை அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில், கேரளாவின் பா.ஜ.க ஒற்றை மக்களவை உறுப்பினரான சுரேஷ் கோபி, நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறியுள்ளார் என்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கோடை காலத்தில் நடக்கக்கூடிய, கேரளத்தின் சிறப்புமிகுந்த விழாவான திருச்சூர் பூரம் விழாவிற்கு, ஒன்றிய இணை அமைச்சரும், பா.ஜ.க மக்களவை உறுப்பினருமான சுரேஷ் கோபி வருகை தரும் போது, ஆம்புலன்சில் வந்ததாக புகார் எழுந்தது.

ஆம்புலன்ஸ் சர்ச்சை! : ஒன்றிய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு!

இதனை அப்போதைய அளவில், சுரேஷ் கோபி உறுதியாக மறுத்ததோடு மட்டுமல்லாமல், வேண்டுமென்றால் சிபிஐ விசாரணை நடத்திக்கொள்ளுங்கள் என சவால் விட்டார்.

இது குறித்து, திருச்சூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் கே.கே. அனீசு குமார், “திருச்சூர் நகரம் வரை கோபி அவர்கள், தனது சொந்த வாகனத்தில் தான் வந்தார். அதன் பிறகு விழா நடக்கும் இடத்திற்கு தனியார் வாகனம் வர இயலாத போதுதான், ஆம்புலன்சை பயன்படுத்தினார்” என காரணம் தெரிவித்தார்.

இதனையடுத்து, சுரேஷ் கோபியே தற்போது ஆம்புலன்சில் தான் வந்தேன். கால் வலி காரணமாக, கூட்டத்தில் நடக்கமுடியாதது தான், ஆம்புலன்சில் வர காரணம் என்று மழுப்பியுள்ளார்.

இந்நிலையில், தவறை ஒப்புக்கொண்ட சுரேஷ் கோபி மீது இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுமேஷ் புகாரின் பேரில் கேரள காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.


ஒருசார்பு நடவடிக்கை?

ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது இரண்டு வருடத்தை தாண்டியுள்ள நிலையில் தற்போதும் உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 

உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக பணம், ஆயுதங்களை வழங்கி வருகின்றன.

இந்த போர் இத்தனை மாதம் கடந்தும் இவ்வளவும் நாட்கள் தொடர உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் அளித்துவரும் பொருளாதார மற்றும் ஆயுத உதவி முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 

அதே போல ரஷ்யாவுக்கு உதவும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிப்பதாகவும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து மிரட்டி வருகிறது.

19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை : பின்னணியில் ரஷ்யா - உக்ரைன் போர் ?

இதனிடையே ரஷ்யாவுக்கு தொழில்நுட்ப உதவிகள் செய்ததாக 19 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. ரஷ்யாவுக்கு போருக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்தையும், சாதனங்களையும் அளித்ததாக 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இந்தப் பட்டியலில் குஷ்பு ஹோனிங், லோகேஷ் மெஷின்ஸ், ஆர்.ஆர்.ஜி.என்ஜினீயரிங் டெக்னாலஜிஸ், உள்ளிட்ட 19 இந்திய நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளது. இந்த தடையின் மூலம் தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் இருந்து பொருட்களை வாங்கவோ, விற்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உக்ரைனுக்கு உதவும் அமேரிக்க,ஐரோப்பிய நாடுகள் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?