நிறுத்­திக் கொள்ள வேண்­டும்!


போர் வெளியே இஸ்ரேல்!

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம்: கட்டுமான பணிகள் 2025ம் ஆண்டு முடிக்க திட்டம்

சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகளுபன் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம்.

தேர்வு அறிவிக்கை தேதிக்கு முன்பு பெற்ற உடற்தகுதி சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது: குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு டிஐ விளக்கம்.
ராசிபுரம் கோவிலில் அதிமுக முன்னாள் அமைச்சருமான சரோஜா பூசாரியிடம் சாட்டையடி வாங்கி சாமிபும்பிட்டார்.




கூடுதல் அரசு வழக்குரைஞர்கள்

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக வழக்கறிஞர்கள் கே.சந்திரமோகன், எம்.சுரேஷ்குமார் ஆகியோரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைகளில் தமிழ்நாடு அரசு வழக்குகளில் ஆஜராக அரசு வழக்கறிஞர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் மற்றும் அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் ஆஜராகி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது கே.சந்திரமோகன், எம்.சுரேஷ்குமார் ஆகியோரை கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமித்து தமிழ்நாடு அரசு பொதுத்துறை (சட்டம்) உத்தரவிட்டுள்ளது.

2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?

கே.சந்திரமோகன், 1960 ஆம் ஆண்டு அரியலூரில் பிறந்தார். இவரின் தந்தை ஆர்.கருப்பையா அரியலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். பள்ளி படிப்பை அரியலூர் முடித்த சந்திரமோகன், சட்டப்படிப்பை திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார்.

1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த இவர், முதலில் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியாற்றினார். கனரா வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றின் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 2000 ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருக்கிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினராக கடந்த 25 ஆண்டுகளாக உள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவராக செயல்பட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை ஒன்றிய அரசு வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டத்துறை மாநில தலைவராக உள்ளார்.

2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?

எம்.சுரேஷ்குமார் கடந்த 1971 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் தந்தை முத்தையா மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சுரேஷ்குமார் 1994 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தீர்ப்பாயங்கள் வழக்கறிஞராக பணியாற்றி வருகின்றார். தமிழ்நாடு மின்சார வாரியம், தெற்கு இரயில்வே நிர்வாகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.


போர் வெறி இஸ்ரேல்!

வெறிச்செயலை

நிறுத்­திக் கொள்ள வேண்­டும்!

பாலஸ்­தீ­னத்­தின் காசா பகு­தி­யில் கொத்­தாக மனித உயிர்­கள் கொல்­லப்­ப­டு­வது தொடர்ந்து கொண்டே இருப்­பது துய­ர­மா­னது. கடந்த ஓராண்­டாக போர் விடா­மல் தொடர்ந்து வரு­கி­றது. அந்­தப் போரைத் தடுக்­கும் செயலை உல­க­நா­டு­கள் அக்­க­றை­யு­டன் செய்­வ­ தா­கத் தெரி­ய­வில்லை. ‘அவுங்­க­ளைத் திருத்த முடி­யாது’ என்று அனைத்து நாடு­க­ளும் கரு­து­வ­தா­கவே நினைக்­கத் தோன்­று­கி­றது.

காசா பகு­தி­யில் இஸ்­ரேல் நடத்தி வரும் தாக்­கு­த­லில் உயிர் இழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 43 ஆயி­ரத்­தைத் தாண்டி உள்­ளது. கடந்த ஓராண்டு கால­மாக நடை­பெற்று வரும் தாக்­கு­த­லில் இத்­தனை ஆயி­ரம் பேர் உயி­ரி­ழந்­த­தா­க­வும், ஒரு லட்­சத்­துக்­கும் மேற்­பட்­டோர் காயம் அடைந்­த­தா­க­வும் காசா சுகா­தா­ரத் துறை அமைச்­ச­கம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது. இதில் 17 ஆயி­ரம் பேர் குழந்­தை­கள். 11 ஆயி­ரம் பேர் பெண்­கள். 26 ஆயி­ரம் குழந்­தை­கள் தங்­கள் பெற்­றோரை இழந்­துள்­ளார்­கள்.

175 பத்­தி­ரிக்­கை­யா­ளர்­கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்­கள். 125 ஐ.நா. ஊழி­யர்­கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்­கள். அனைத்து பல்­க­லைக் கழ­கங்­களும் சிதைந்­துள்­ளன. 

மசூ­தி­க­ளும் தேவா­ல­யங்­க­ளும் சிதைந்­துள்­ளன. வாழும் இடங்­க­ளில் வாழ முடி­யா­மல் இடம்­பெ­யர்ந்­துள்­ளார்­கள் மக்­கள். 

காசா­வில் இடிந்­து­போன வீடு­க­ளைக் கட்­டு­வ­தற்கே 40 ஆண்­டு­கள் ஆக­லாம் என்று அந்­நாட்டு பத்­தி­ரிக்­கை­கள் எழு­து­கின்­றன. காசா­வின் அனைத்­துக் கட்­ட­மைப்­பு­க­ளின் கால் பங்கு அழிக்­கப்­பட்­ட­தாக ஐ.நா. அறிக்கை சொல்­கி­றது. 

66 விழுக்­காடு வீடு­கள் இடிந்து போய்­விட்­டன. அங்­கி­ருக்­கும் அனைத்து மக்­க­ளும் வறு­மை­யில் இருக்­கி­றார்­கள் என்று சொல்­கி­றது ஐ.நா. அறிக்கை. கடந்த 15 ஆண்­டு­க­ளாக மெல்ல மெல்ல ஏற்­றம் கண்டு வந்த காசா­வின் பெரும்­ப­குதி ஓராண்டு காலத்­துக்­குள் அழிக்­கப்­பட்டு விட்­டது. 

இந்த சோகங்­கள் அனைத்­தும் உல­க­நா­டு­க­ளால் உண­ரப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

இஸ்­ரே­லின் ஆக்­கி­ர­மிப்பு வாதத்­துக்கு எதி­ராக பாலஸ்­தீ­னம் போராடி வரு­கி­றது. இஸ்­ரே­லின் ஆக்­கி­ர­மிப்­புக் கொள்­கை­யா­னது, இரு நாட்­டுப் போர் என்­ப­தைத் தாண்டி குறிப்­பிட்ட பிர­தே­சத்­தில் நடக்­கும் யுத்­த­மாக மாறி வரு­கி­றது. 

காசா, லெப­னான் ஆகிய நாடு­க­ளின் மீது போர் தொடுத்து வரு­கி­றது இஸ்­ரேல். எனவே அதனை இரு­ நாட்­டுச் சண்­டை­யா­கக் கருதி ஒதுக்­கவோ, கண்­டும் காணா­மல் இருக்­கவோ முடி­யாது.

ஈரான் ஆத­ரவு பெற்ற ஹமாஸ் அமைப்­பி­னர், இஸ்­ரேல் மீது கடந்த ஆண்டு அக்­டோ­பர் 7 ஆம் தேதி­யன்று தாக்­கு­தல் நடத்­தி­னார்­கள். இதைத் தொடர்ந்து இஸ்­ரே­லுக்­கும் ஹமாஸ் அமைப்­பி­ன­ருக்­கும் போர் நடை­பெற்று வரு­கி­றது.

 ஹமாஸ் அமைப்­புக்கு ஆத­ர­வாக ஈரான் ஆத­ரவு பெற்ற லெப­னா­னின் ஹிஸ்­புல்லா அமைப்­பி­ன­ரும் இஸ்­ரேல் ராணுவ நிலை­க­ளின் மீது தாக்­கு­தல் நடத்தி வரு­கி­றார்­கள்.

இதற்­கி­டையே இரண்டு படு­கொ­லை­கள் நடந்­துள்­ளன. ஈரான் வந்­தி­ருந்த ஹிஸ்­புல்லா தலை­வர் இஸ்­மா­யில் ஹனீ­யேவை, இஸ்­ரேல் உள­வுப்­பி­ரிவு கடந்த ஜூலை 31 ஆம் தேதி கொலை செய்­துள்­ளது.

 ஹிஸ்­புல்லா அமைப்­பின் தலை­வ­ரான ஹஸன் நஸ்­ரல் லெப­னா­னில் வைத்து கடந்த அக்­டோ­பர் மாதம் 27 ஆம் தேதி கொலை செய்­யப்­பட்­டார். இதற்­கும் இஸ்­ரேல் பின்­னணி உள்­ள­தா­கச் சொல்­லப்­ப­டு­கி­றது.

 ஈரான் மீது வான்­வெளி தாக்­கு­தலை நடத்தி ஈரான் வீரர்­கள் நால்­வ­ரைக் கொலை செய்­துள்­ளது இஸ்­ரேல். இத­னால் கோபம் கொண்ட ஈரான், கடந்த 1 ஆம் தேதி­யன்று இஸ்­ரேல் ராணுவ

நிலை­க­ளைக் குறி வைத்து தாக்­கு­த­லைத் தொடங்­கி­யது. அதி­ந­வீன ஏவு­க­ணை­க­ளைப் பயன்­ப­டுத்தி வரு­கி­றது ஈரான்.

“எங்­க­ளின் ராணுவ நிலை­க­ளைக் குறி வைத்­துத் தாக்­கு­தல் நடத்­திய இஸ்­ரே­லுக்கு மிகக் கடு­மை­யான பதி­லடி தரப்­ப­டும்” என்று

ஈரா­னின் தலைமை மத­குரு அய­துல்லா கமேனி சொல்லி இருக்­கி­றார். அந்த நாட்­டின் அதிக ஆட்­சி­ய­தி­கா­ரம் படைத்­த­வர் அவர்­தான். “ஈரான் தேசத்­தின் மீதும், ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ரான ஈரான் ஆத­ரவு போரா­ளிக­ளுக்கு எதி­ரா­க­வும் தாக்­கு­தல் நடத்­தும் நாடு­க­ளுக்கு

கடு­மை­யான பதி­லடி தரப்­ப­டும். இது யூத ஆக்­கி­ர­மிப்­பு­வாத அர­சுக்கு மட்­டு­மல்ல, அமெ­ரிக்­கா­வுக்­கும் பொருந்­தும்” என்­றும் அவர் சொல்லி இருக்­கி­றார். இது எங்கு போய் முடி­யுமோ எனத் தெரி­ய­வில்லை.

இஸ்­ரேல் பிர­த­மர் நெதன்­யாகு சில நாட்­க­ளுக்கு முன்­ன­தாக அரபு நாடு­க­ளுக்கு ஒரு செய்­தி­யைச் சொல்லி இருக்­கி­றார். இஸ்­ரேல் நாடா­ளுமன்­றத்­தில் பேசிய அவர், மத்­திய கிழக்­கில் அமை­தியை ஏற்­ப­டுத்த விரும்­பு­வ­தா­க­வும், அரபு நாடு­க­ளு­டன் இணைந்து சமா­தா­ன­மா­கப் போக விரும்­பு­வ­தா­க­வும் சொல்லி இருக்­கி­றார். 

“இங்­குள்ள அரபு நாடு­க­ளு­டன் சமா­தா­னம் அடைய வர­லாற்­றுச் சிறப்புமிக்க ஆபி­ர­காம் உடன்­ப­டிக்­கை­யில் கையெ­ழுத்­திட்டு இருந்­தேன். அந்த செயல்­மு­றையை மீண்­டும் தொடர விரும்­பு­கி­றேன்” என்று சொல்லி இருக்­கி­றார். 

இது உண்­மை­யா­கச் சொன்­ன­தாக இருந்­தால் செய­லில் காட்ட வேண்­டி­யது அவர்­தானே தவிர வேறு யாரு­மல்ல.

காசா­வி­லும் லெப­னா­னி­லும் பதற்­றம் குறைக்­கப்­பட வேண்­டும். போர் நிறுத்­தப்­பட வேண்­டும். இஸ்­ரே­லுக்­குச் செய்­யும் உத­வி­களை மற்ற நாடு­கள் நிறுத்த வேண்­டும். இதனை ராஜ­தந்­தி­ர­மாக அல்ல, அசிங்­க­மா­கப் பார்க்க வேண்­டும்.

அனைத்­துக்­கும் மேலாக மக்­கள் பாது­காக்­கப்­பட வேண்­டும். நாட்டு அதி­பர்­க­ளின் ஈகோவை விட மக்­க­ளின் உயிரே முக்­கி­யம். ‘எந்த இன மக்­கள்’ என்­ப­தில் வேறு­பாடு இல்லை. எல்லா உயி­ரும் ஒன்று என்று எண்­ணிச் செயல்­பட வேண்­டும்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?