நாசகார நச்சு ஆலையை
மூடியது சரியே
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மீண்டும் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தூத்தூக்குடியில் மண்,,நீர்,காற்று அனைத்தையும் நச்சாக்கி மனிதர்களை பாதித்துவந்த நாசகார ஸ்டெர்லைட் ஆலை மே 2018 முதல் மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டு கிடக்கிறது.தற்போதுமுறையான பராமரிப்பு இல்லாததால் ஆலை எந்திரங்கள் அனைத்திலும் அரிப்புஏற்பட்டு வலிவற்றுள்ளது.
1990 களில் இருந்து சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி 2018 இல், தூத்துக்குடி மக்கள் ஆலைக்கு எதிராக 100 நாள் போராட்டத்தை நடத்தினர்.
100வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
இதில், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 22ஆம் தேதியன்று அப்போதைய இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த உத்தரவு நவம்பர் 16 சனிக்கிழமையன்று வெளியாகிவுள்ளது. முன்னதாக, ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் 2020ல் தீர்ப்பு வழங்கி இருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம்மறுஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.தூத்தூக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், மறுஆய்வு மனுவை பட்டியலிட கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது. மேலும், மறுஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், அதில் எதுவும் இல்லை. எனவே மனுத் தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சிவில் நடைமுறைச் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற விதிகளின்படி, தீர்ப்பால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், தீர்ப்பு வெளியான 30 நாட்களுக்குள் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்யலாம்.
முன்னதாக, பிப்ரவரி 29 அன்று, அதே மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் வேதாந்தாவின் மனுவை நிராகரித்தது.
அப்போது, நிறுவனத்தின் பங்களிப்பின் தன்மை குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். எவ்வாறாயினும், நிலையான வளர்ச்சி மற்றும் சுகாதாரம் மற்றும் பிரதேசவாசிகளின் நலன் என்ற கொள்கையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.தொழில்சாலையை மூடுவது உண்மையில் முதல் தேர்வாக இருக்கவில்லை. மீறல்களின் தீவிரத்தன்மை மற்றும் பாதிப்பு ஆகியவை ஸ்டெர்லைட் ஆலையை மூட நீதிமன்றத்தை முடிவெடுக்கத் தூண்டியது எனத் தெரிவிக்கப்பட்டது.