இன்று...
16/11/2024
கிடைத்தெல்லாவற்றிற்கும் காவியடி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு இன்று மதியம் 169 பயணிகளுடன் இண்டிகோ விமானம் புறப்பட்டது. தொழில் நுட்ப கோலாறு காரணமாக விமானம் அவசர அவசரமாக சென்னையில் தரையிறங்கியது. இது பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும் உதவி ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் கடல் பகுதியில் நண்பர்களுடன்குளித்துக்கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி கிரிஸ், ரியாஸ் ஆகிய 2 பேர் மாயம் அடைந்துள்ளனர். அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
சர்வதேச கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர்படம்அச்சடிக்கப்பட்டிருப்பதற்குசு.வெங்கடேசன் எம்.பி.,கண்டனம் தெரிவித்துள்ளார்.
"வந்தே பாரத்துக்கு காவிநிறம் அடிப்பவர்கள் அதை இயக்கும் மின்சாரத்தில் எப்படி கைவைக்க முடியாதோ, அப்படித்தான் வள்ளுவருக்கு காவியடிப்பவர்கள் வள்ளுவத்தில் கைவைக்க முடியாது. மின் ஆற்றலைவிட வலிமையானது வெறுப்பு அரசியலுக்கு எதிராக வள்ளுவம் பேசும் அறத்தின் ஆற்றல்" இவ்வாறு சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
திருச்செங்கோடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் தெப்பக்குளத்தில் கம்பம் விடும்போது குளத்தில் குதித்து விளையாடிய முகிலன் என்பவர் நீரில் மூழ்கினார். ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி சடலமாக மீட்கப்பட்டார். உடல் நிலை சரியில்லாமல் இருந்த அவர் மூச்சு திணறி உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருமங்கலம் அருகே அம்மாபட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சடச்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற அசைவ விருந்து திருவிழா நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில், 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
தெலுங்கு மக்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்னர். அவர் மீது புகார்களும் குவிந்துள்ளது. கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர் ஐதராபாத்தில் உள்ள வீட்டிற்கு சென்று பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேடினர். ஆனால் அந்த வீட்டையும் பூட்டி விட்டு தலைமறைவாகி விட்டது போலீசாருக்கு தெரிய வந்தது. இதனால் தனிப்படை போலீசார் ஐதராபாத், ஆந்திராவில் முகாமிட்டு தேடி வருகின்றனர். ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை தள்ளுபடி செய்து விட்டது .