ஒரே நேர்க்கோட்டில்

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்கள் அவ்வப்போது ஒரே நேர்க்கோட்டில் வருவதும் வெவ்வேறு திசையில் அருகருகே கடந்து செல்வதும் இந்த பிரபஞ்சத்தின் அபூர்வ நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில் வரும் 28 ஆம் தேதி ஒரு அரிய வான நிகழ்வு நடைபெற உள்ளது. அப்போது நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஏழு கோள்களும் வரிசையாக ஒரே நேர்க்கோட்டில் இரவு வானில் சிறிது நேரம் தெரியும்.

suran

இந்த அரிய நிகழ்வு மீண்டும் 2040 ஆம் ஆண்டுதான் நடைபெறும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் தொடங்கிய இந்த கோள்களின் அணிவகுப்பின் முடிவுதான் இது என்றும் நாசா கூறியுள்ளது. 

இந்த கோள்களின் அணிவகுப்பில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவை ஒரே வரிசையில் வரும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் ஒரே நேரத்தில் ஒரே நேர்க்கோட்டில் அதிக எண்ணிக்கையிலான பிரகாசமாக தெரியும் என்றும் இது இந்த நிகழ்வின் கூடுதல் சிறப்பு என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த அரிய நிகழ்வு வானியல் சார்ந்த ஆய்வாளர்களுக்கும் ஆர்வலர்களுக்கும் சிறப்பு தருணமாக இருக்கும்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு 45 நிமிடங்கள் கழித்து மேற்கு வானத்தில் இந்த 7 கோள்களையும் ஒரே நேர்க்கோட்டில் காண முடியும்.
 வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். அதே நேரத்தில் புதன், சனி மற்றும் நெப்டியூன் ஆகியவற்றைப் தொலை நோக்கி உதவியுடன்தான் பார்க்க முடியும்.

சூரியநின் மறைவுக்குப் பிறகு செவ்வாய் கோள் தெற்கில் உயரமாகத் தோன்றி மார்ச் மாத தொடக்கத்தில் தெரியும். வியாழன் கோள் தென்மேற்கில் தெரியும். யுரேனஸுக்கு ப்ளேயட்ஸ் நட்சத்திரக் கூட்டத்திற்கு அருகில் இருண்ட வானமாக இருப்பின் காணமுடியும். இந்தியா முழுவதும் இதனை காண முடியும்.
------------------------------------------------------------------------
B.B.C  க்கு அபராதம்!

பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் இந்தியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டின் (FBI) விதிமுறைகளை மீறியதாக கூறி மூன்று பிபிசி இயக்குநர்களுக்கு தலா ரூ.1.14 கோடி என மொத்தம் ரூ.3.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிபிசிக்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் அமலாக்கத் துறை ஒரு தீர்ப்பு ஆணையை வெளியிட்டதாகவும். இந்த விவகாரம் குறித்து ஆகஸ்ட் 4, 2023 அன்று பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் இந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அபராதமானது விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

suranஇது குறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், “பிபிசி டபிள்யூஎஸ் இந்தியா, டிஜிட்டல் ஊடகம் ஆகிய செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்களைப் பதிவேற்றம் செய்யும் ஊடகம் மற்றும் இணையச் சேவைகள் நிறுவனம் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்படி இந்தியாவில் அந்நிய நேரடி முதலீட்டில் குறைந்தது 26 விழுக்காடு இருக்க வேண்டும். 

ஆனால், பிபிசி 100 விழுக்காடு அந்நிய நேரடி முதலீட்டில் இயங்குவதால் சட்ட மீறில் நடந்து இருப்பதாக (FEMA -1999) அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் இந்தியாவிற்கு ₹ 3,44,48,850 அபராதம் செலுத்த வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டிருந்து.

இந்த விவகாரம் தொடர்பாகத் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (டிபிஐஐடி) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பிபிசி டபிள்யூஎஸ் இந்தியாவிற்கு ₹ 3,44,48,850 அபராதம் செலுத்த வேண்டும். மேலும் அக்டோபர் 15, 2021க்குப் பிறகு ஒவ்வொரு நாளுக்கும் ரூ.5000 சேர்த்து அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிடப்பட்டிருந்தது. ஏப்ரல் 2023-இல் இருந்து பிபிசி இந்தியா மீது FEMA (அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தின்) கீழ் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் இதுகுறித்து, அதிகாரிகள் தரப்பில் வெளியான தகவலின்படி கில்ஸ் ஆண்டனி ஹன்ட், இந்து சேகர் சின்ஹா ​​மற்றும் பால் மைக்கேல் கிப்பன்ஸ் ஆகிய மூன்று பிபிசி இயக்குநர்கள் மீது தலா ரூ.1.14 கோடி என மொத்தம் ரூ.3.44 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


-------------------------------------------------------------------


மருத்துவரின் பரிந்துரையின் பெயரில் நாம் பயன்படுத்தும் சில மாத்திரைகளில் சில ரகசிய குறியீடுகள் காணப்படுவது உண்டு. அப்படி பயன்படுத்தப்படும், குறியீடுகள் பற்றியும், அதன் அர்த்தத்தையும் பார்ப்போம்.

சமீப காலமாக சின்ன தலைவலி என்றால் கூட மாத்திரையை வாங்கி போடும் பழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் மருத்துவரின் பரிந்துரைஇல்லாமல் எந்த ஒரு மாத்திரை மற்றும் மருந்துகளை பயன்படுத்தாதீர்கள்.

























ரகசிய குறியீடுகளை, நீங்கள் பல முறை பார்த்திருப்பீர்கள். இதன் அர்த்தம் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரகசிய குறியீடுகள்
நீங்கள் சில வகையான மாத்திரைகளை வாங்கும் போது, அதில் ஒரு செங்குத்தான சிவப்பு நிற கோட்டைக் பார்த்திருக்க முடியும். இந்த சிவப்பு கோடு ஏன் இடம்பெறுள்ளது என்பதை பற்றி யோசித்திருக்கிறீர்களா? இதன் பின்னர் சில காரணங்கள் உள்ளன. சில வகை மாத்திரை மற்றும் மருந்து பாட்டில்களில் இந்த சிவப்பு கோட்டை நாம் காணலாம். இந்த சிவப்பு நிற கோடு அச்சிடப்பட்ட, மருந்தை மருத்துவர்களில் பரிந்துரை இல்லாமல் எப்போதும் பயன்படுத்த கூடாது என்பதே இதன் அர்த்தம்.

ஆனால் இந்த சிவப்பு கோடி இல்லாமல் விற்பனை செய்யப்பட கூடிய அனாசின், பாராசிட்டமால் போன்ற மருந்துகளை மருத்தாளர்கள் உங்களுக்கு விற்பனை செய்யலாம். ஆனால் மருத்துவரின் உரிய மருந்து சீட்டு இல்லாமல், இந்த சிவப்பு கோடு போடப்பட்ட மாத்திரைகளை வாங்குவதும் விற்பனை செய்வதும் சட்டவிரோதமானது.


சிவப்பு நிற கோட்டை தொடர்ந்து, மாத்திரைக்களில் சில குறியீடுகளை நீங்கள் பார்க்க முடியும். அதில் RX என குறிப்பிட்டிருந்தால், மருத்துவர் ஒரு குறிப்பிட்ட மருந்துக்கு ஒரு மருந்துச் சீட்டை எழுதிவிட்டால், சில நாட்களுக்குப் பிறகு அதை மீண்டும் வாங்க வேண்டியிருக்கும் போது நமக்கு மருந்துச் சீட்டு தேவையில்லை. நாம் வழக்கம் போல் அவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


இந்த வகை மருந்துகளில் லேசான போதை கொடுக்க கூடிய வேதிப்பொருட்கள் உள்ளன. எனவே இந்த மருந்துகளை ஒருபோதும், மருந்துச் சீட்டு இல்லாமல் மருதாளர் விற்பனை செய்ய கூடாது. அதே போல் மருத்துவர் பரிந்துரை செய்தது 6 மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். 6 மாதத்திற்கு பின்னர் மருத்துவர் மீண்டும் பரிந்துரை செய்தால் மட்டுமே இந்த வகை மருந்துகள் கொடுக்கப்படும். NRX வகை குறியீடு உடைய மருந்துகள் பெரும்பாலும், மனச்சோர்வு, மனநோய் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

XRX குறியீடு கொண்ட இந்த வகையான மருந்துகள், போதைப்பொருள் மற்றும் மனோவியல் சார்ந்த மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் அனைத்தும் X என்ற எழுத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மருந்துகள் அனைத்தும் வலிமையான வலி நிவாரணியாகவும் மற்றும் மயக்க மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை மருந்து பொதுவாக புற்றுநோய் நோயாளிகள், மனநல நோயாளிகள் மற்றும் பெரிய அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. எல்லா மருத்துவர்களும் இந்த மருந்துகளை பரிந்துரைப்பதில்லை. குறிப்பாக, மனநல மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்கள் தான் அதிக பரிந்துரைக்கிறார்கள். XRX வகை மறுத்து சீட்டு, பரிந்துரைக்கப்பட்ட நாளில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். மருந்தாளுநர்கள் இந்த மருந்துச் சீட்டை நோயாளியின் தகவல்களுடன் 2 ஆண்டுகளுக்கு வைத்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயம் என கூறப்படுகிறது.


NRX மற்றும் XRX மருந்துகள் கொடுப்பதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை, சிலர் இந்த மருந்துகளை போதைப்பொருளாக தவறாகப் பயன்படுத்துவதால் தான். மருத்துவர்கள் இந்த வகையான மருந்துகளை நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் நிறுத்தமுடியாது. அவர்கள் படிப்படியாக அவற்றை நிறுத்துவார்கள். இந்த மருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்துவதும் நோயாளிகளுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?