வேதனை அளிக்கிறது
தமிழ் தட்டச்சு தந்தைமுத்தையா.
தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கிய ஆர்.முத்தையா 1886ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளியில் பிறந்தார்.
1913-ல் ஸ்லோன் டுப்ளோயன் சர்வதேச சுருக்கெழுத்துப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர் 21 வயதில் மலேசியா, சிங்கப்பூர் இணைந்த பகுதியான மலாயா ரயில்வே துறையில் வேலை பார்த்தார். அங்கு 1930 வரை பணிபுரிந்தார்.
ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழில் தட்டச்சு இயந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதி, அதை உருவாக்க முயற்சித்தார். தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் 4 வரிசைகளில் 46 விசைகளுக்குள் வைப்பது சவாலாக இருந்தது.
இறுதியாக தமிழ் தட்டச்சு இயந்திரத்தை உருவாக்கி, அதற்கு 'ஸ்டாண்டர்டு தட்டச்சு' என பெயரிட்டார். மேலும் அந்த இயந்திரத்தில் சில குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்து அவற்றை சரிசெய்து, மேம்படுத்தினார்.
தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என போற்றப்படும் ஆர்.முத்தையா இலங்கையில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களைப் பற்றி ஆங்கிலத்தில் நூல் ஒன்று எழுதியுள்ளார். ஆனால் அந்நூல் வெளியிடுவதற்கு முன்பே மறைந்து விட்டார்.
தூக்க மாத்திரைதீர்வு அல்ல
பகலெல்லாம் மன அழுத்தத்துடன் பணியாற்றி விட்டு இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு தூங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், இது ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல என்கின்றனர் பொதுநல மருத்துவர்கள்
“இப்படி அடிக்கடி தூக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது அதன் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். அதனால், உடலில் வேறு பல பாதிப்புகள் ஏற்படலாம். தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுப் பழகிவிட்டால், திடீரென அதை நிறுத்தவும் முடியாது. அப்படி நிறுத்தினால் தூக்கம் பாதிக்கப்படும்.
அ திக காலம் தூக்க மாத்திரையைப் பயன்படுத்தினால் ஞாபக மறதி ஏற்படும்.
பகலில் மயக்க நிலை வரும். நடை தடுமாறும். மனக் குழப்பம் தலைகாட்டும். முடிந்த அளவுக்குத் தூக்க மாத்திரையைச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
அவசியம் தேவைப்படுகிறவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம். ஏனெனில், பக்கவிளைவுகள் அதிகம் இல்லாத மாத்திரைகளை மருத்துவர்களே பரிந்துரைப்பார்” என்கின்றனர் மருத்துவ ஆலோசகர்கள்.
மேலும், ஆரோக்கியமான தூக்கத்துக்கு சில ஆலோசனைகளையும் சொல்கிறார்கள்… “தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழுவதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இரவு உணவை 8 மணிக்குள் உட்கொண்டால் நல்லது. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். குளித்துவிட்டுத் தூங்கினால் தூக்கம் வரும் என்பார்கள். தூங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பே குளித்துவிட வேண்டும்.
இரவில் கொழுப்பு மிகுந்த உணவைத் தவிர்க்க வேண்டும். காபி, தேநீர், மது, கோலா பானங்கள் அருந்த வேண்டாம். சாக்லேட்டும் வேண்டாம். மாறாக, பால் குடிக்கலாம். பழம் சாப்பிடலாம்.
தினமும் காலையில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, தியானம் செய்ய வேண்டும். உடற்பயிற்சிகளை இரவில் செய்ய வேண்டாம். அன்றாட வேலைகளில் பாதிப்பில்லை என்றால் பகலில் அதிகபட்சம் 45 நிமிடம் குட்டித் தூக்கம் போடலாம்.
ஆனால், முதியவர்களும் இரவில் நெடுநேரம் தூக்கம் வரவில்லை என்று சொல்பவர்களும் பகலில் குட்டித்தூக்கம் போடுவதைத் தவிர்ப்பதே நல்லது.
படுக்கையறை நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் இருந்தால் நல்லது. அங்கே அதிக வெளிச்சம் கூடாது. அதிக சத்தமும் ஆகாது. மிக முக்கியமாக, கண்களை மூடும்போதே கவலைகளையும் மூடினால் சுகமான தூக்கம் உறுதி” என்கின்றனர் மருத்துவர்கள்.
வேதனை அளிக்கிறது.
ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா, சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதவமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது.
இதையடுத்து நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக விளையாட்டு வீரர்கள் அணி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது .
பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடப்பதும், சிறுமிகள் முதல் முதியோர் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் வேதனை அளிக்கிறது.
![]() |
செங்கோட்டையன் விழா |
பள்ளி குழந்தைகளுக்கு ஒரு சில ஆசிரியர்கள் செய்கின்ற வன்கொடுமை, ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது. பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்
.இந்நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்,மூத்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். ஆனால் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
ஆனால் அவர், ஈரோட்டில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார். அப்போது அவரிடம் பிறந்தநாள் விழாவில் பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நினைவுநாள் என்றால் சென்னைக்கு சென்றிருப்பேன். பிறந்தநாள் விழா என்பதால் அங்கங்கே இருந்தபடியே நிகழ்வில் கலந்து கொள்ளலாம்." என்றார்.
அண்மை காலமாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே முரண்கள் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவிழும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.